வாய் ஊறும் இனிப்பு பனியாரம்! இன்னைக்கே செஞ்சு பாருங்க! ஈசி ரெசிபி!
Oct 09, 2024, 09:50 AM IST
. செட்டிநாடு சமையல் வகைகளில் பல தரப்பட்ட உணவுகள் உள்ளன. அதில் முக்கியாமனது செட்டிநாட்டின் இனிப்பு உணவுகள் ஆகும். அதில் வெல்லம் மற்றும் கருப்பட்டி போட்டு செய்யப்படும் இந்த பனியாரம் மிகவும் ருசியாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும் ஒரு உணவு ஆகும்.
தமிழ்நாடு உலக அளவில் அதன் மொழி, பண்பாடு என பல்வேறு காரியங்களுக்காக பெருமை பெற்றது. தமிழ்நாட்டின் பல்லாயிரக்கணக்கான உணவு வகைகளுக்கும் உலக அளவில் பெரிய பெயர் உள்ளது. மேலும் ஒவ்வோரு பகுதிகளிலும் அதன் தனிப்பட்ட உணவு முறைகளுக்காக அறியப்படுகிறது. செட்டிநாடு சமையல் வகைகளில் பல தரப்பட்ட உணவுகள் உள்ளன. அதில் முக்கியாமனது செட்டிநாட்டின் இனிப்பு உணவுகள் ஆகும். அதில் வெல்லம் மற்றும் கருப்பட்டி போட்டு செய்யப்படும் இந்த பனியாரம் மிகவும் ருசியாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும் ஒரு உணவு ஆகும். சர்க்கரை நோயாளிகளுக்கு வெள்ளத்தின் அளவை குறைத்து இந்த இனிப்பு பணியாரத்தை செய்து தரலாம். இந்த சுவை மிக்க இனிப்பு பணியாரத்தை உங்கள் வீட்டிலேயே செய்யலாம். அந்த எளிய முறைகளை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
ஒரு கப் பச்சரிசி
அரை கப் வெல்லம்
ஒரு டிஸ்பூன் உளுத்தம் பருப்பு
அரை முடி தேங்காய்
5 ஏலக்காய்
சிறிதளவு உப்பு
சிறிதளவு சோடா உப்பு
சிறிதளவு பேக்கிங் சோடா
செய்முறை
முதலில் பச்சரிசி மற்றும் உளுத்தம் பருப்பை சேர்த்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்றாக கழுவி தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். 3 முதல் 4 மணி நேரங்கள் இந்த அரிசியை ஊற வைத்து எடுத்தக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மிக்சி ஜாரில் ஊற வைத்து எடுத்த அரிசியை போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகமான தண்ணீர் ஊற்றாமல் சிறிதளவு தண்ணீர் மட்டும் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதே மிக்ஸியில் அரை கப் வெல்லம், 4 ஏலக்காய், சோடா உப்பு, தேவையான அளவு உப்பு ஆகிய எல்லாவற்றையும் போட்டு அரைக்க வேண்டும். பின்னர் அதில் அரை முடி தேங்காயை துருவி போட்டு அதனையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது இந்த மாவு இட்லி மாவு பதத்தில் இருக்கும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு கடாயில் பனியாரம் சுடுவதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும். எண்ணெய் நன்றாக சூடாக ஆரம்பித்ததும், சிறிதளவு மாவை எடுத்து அந்த எண்ணெயில் போடவும். நன்கு பொரிந்து வந்தால் எண்ணெய் நன்றாக சூடாகி விட்டது. இப்போது அரைத்து வைத்திருந்த மாவில் இருந்து ஒரு சிறிய கரண்டியை வைத்து எடுத்து கொதிக்கும் எண்ணெயில் போடவும். இவ்வாறாக ஒரு முறைக்கு 3 இல் இருந்து 4 பனியாரம் வரை எண்ணெயில் பொரிக்கலாம். பின்னர் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பனியாரம் நன்கு வேகும் வரை காத்திருக்கவும். இரு புறங்களிலும் பொன்னிறமாக வந்து விட்டால் பணியாரத்தை எடுத்து விடலாம். சுட்டு எடுத்த பனியாரத்தை எண்ணெய் வடியும் வரை வைக்கவும். பின்னர் சூடான, சுவையான செட்டிநாடு ஸ்டைல் பணியாரத்தை உங்கள் வீடுகளில் இருக்கும் அனைவருக்கும் கொடுத்து பாருங்கள். சுவை அட்டகாசமாக இருக்கும். இதனை நீங்களும் டிரை பண்ணி பாருங்கள்.
டாபிக்ஸ்