தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பிரமாதமான பேல் பூரி! ரோட்டுக்கடை ஸ்டைலில் அசத்தலான ரெசிபி இதோ!

பிரமாதமான பேல் பூரி! ரோட்டுக்கடை ஸ்டைலில் அசத்தலான ரெசிபி இதோ!

Suguna Devi P HT Tamil

Nov 27, 2024, 02:55 PM IST

google News
ரோட்டுக்கடை உணவுகளுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஏனெனில் அந்த அளவிற்கு அந்த உணவுகள் மிகவும் சுவையாகவும், கார சாரமாகவும் இருக்கும். இதனை நமது வீட்டில் செய்து தருவது சற்று கடினம் தான்.
ரோட்டுக்கடை உணவுகளுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஏனெனில் அந்த அளவிற்கு அந்த உணவுகள் மிகவும் சுவையாகவும், கார சாரமாகவும் இருக்கும். இதனை நமது வீட்டில் செய்து தருவது சற்று கடினம் தான்.

ரோட்டுக்கடை உணவுகளுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஏனெனில் அந்த அளவிற்கு அந்த உணவுகள் மிகவும் சுவையாகவும், கார சாரமாகவும் இருக்கும். இதனை நமது வீட்டில் செய்து தருவது சற்று கடினம் தான்.

ரோட்டுக்கடை உணவுகளுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஏனெனில் அந்த அளவிற்கு அந்த உணவுகள் மிகவும் சுவையாகவும், கார சாரமாகவும் இருக்கும். இதனை நமது வீட்டில் செய்து தருவது சற்று கடினம் தான். ஆனால் சில ரோட்டுக் கடைகளில் சுவையை கூட்டுவதற்கு வேண்டி பல விதமான செயற்கையான பொருட்களையும், நிறமிகளையும் சேர்க்கின்றனர். இது உடலின் ஆரோக்கியத்திற்கு நல்லதும் அல்ல. எனவே இதனை தவிர்க்க ஒரு சிறந்த வழி என்றால் வீட்டிலேயே அந்த உணவுப் பொருட்களை செய்து தருவதாகும். பிரபல ரோட்டுக்கடை உணவான பேல் பூரியை எளிமையாக வீட்டிலேயே செய்யும் முறையை தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள். 

தேவையான பொருட்கள்

100 கிராம்பொரி 

100 கிராம் நம்கீன்

வறுத்த நிலக்கடலை 

உருளைக்கிழங்கு

2 பெரிய வெங்காயம்

2 தக்காளி 

100 கிராம் சேவ்

100 கிராம் பாப்டி

தேவையான அளவு உப்பு 

அரை டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் 

அரை டீஸ்பூன் சாட் மசாலா தூள்

சிறிதளவு கொத்தமல்லி இலை

புதினா கொத்தமல்லி சட்னி

புளி பேரிச்சம்பழ சட்னி

எலுமிச்சைபழச்சாறு

செய்முறை

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பொரியை மட்டும் போட்டு நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை தனியாக வைக்கவும். பின்னர் ஒரு பெரிய அகன்ற பாத்திரத்தில் வறுத்த பொறியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்உடன் ஏதேனும் ஒரு மிக்ஸ்ர், வறுத்த நிலக்கடலை, வேகவைத்த உருளைக்கிழங்கு துண்டுகள், பொடியாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய மற்றும் விதை நீக்கிய தக்காளி, சேவ் மற்றும் உடைத்த பாப்டி ஆகியவற்றை சேர்த்து கலக்கிக் கொள்ளவும். மேலும் தேவையான அளவு உப்பு, சிறிதளவு காஷ்மீரி மிளகாய் தூள், சாட் மசாலா தூள் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

இதனுடன் புதினா கொத்தமல்லி சட்னி, புளி பேரிச்சம்பழ சட்னி, எலுமிச்சைபழச்சாறு சேர்க்க வேண்டும். இதனை நன்கு கலந்து விட்டு, சேவ், நறுக்கிய கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும். இப்பொழுது சுவையான ரோட்டுக்கடை ஸ்டைல் பேல் பூரி ரெடி. இதனை உங்கள் வீட்டிலேயே ட்ரை செய்து பார்த்து மகிழுங்கள். 

புளி பேரிச்சம்பழ சட்னி செய்ய

 ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுக்கவும். அதனுடன் விதை நீக்கி நறுக்கிய பேரிச்சம்பழம் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் சமைக்கவும். புளி தண்ணீர் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் சமைக்கவும். வற மிளகாய் தூள், சீரக தூள், கொத்தமல்லி தூள், கருப்பு உப்பு, உலர்ந்த இஞ்சி தூள், உப்பு, பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு கலக்கவும். தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். இப்பொழுது அடுப்பை அணைத்து, கலவையை மிருதுவான பேஸ்டாக அரைக்கவும். இந்த  பேரீச்சம்பழ சட்னியை பயன்படுத்தி பேல் பூரி செய்ய வேண்டும். 

புதினா கொத்தமல்லி சட்னி

 ஒரு மிக்ஸி ஜாரில், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி இலை, புதினா இலை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்க்கவும். தண்ணீர் சேர்க்காமல் ஒரு முறை அரைக்கவும். பிறகு தண்ணீர் சேர்த்து மிருதுவான பேஸ்டாக அரைக்கவும். அவ்வளவுதான் புதினா கொத்தமல்லி சட்னி ரெடி.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி