தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Coriander Rice: கொத்தமல்லி சாதம் செய்வது எப்படி? அசத்தலான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி!

Coriander Rice: கொத்தமல்லி சாதம் செய்வது எப்படி? அசத்தலான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி!

Suguna Devi P HT Tamil

Sep 30, 2024, 09:23 AM IST

google News
Coriander Rice: பொதுவாகவே வழக்கமான மதிய உணவுகளால் குழந்தைகள் சற்று சலிப்பு அடைந்து இருப்பார்கள். அவர்கள் விரும்பும் வண்ணம் வித விதமாக சமையல் செய்வது முடியாத காரியம்.
Coriander Rice: பொதுவாகவே வழக்கமான மதிய உணவுகளால் குழந்தைகள் சற்று சலிப்பு அடைந்து இருப்பார்கள். அவர்கள் விரும்பும் வண்ணம் வித விதமாக சமையல் செய்வது முடியாத காரியம்.

Coriander Rice: பொதுவாகவே வழக்கமான மதிய உணவுகளால் குழந்தைகள் சற்று சலிப்பு அடைந்து இருப்பார்கள். அவர்கள் விரும்பும் வண்ணம் வித விதமாக சமையல் செய்வது முடியாத காரியம்.

பொதுவாகவே வழக்கமான மதிய உணவுகளால் குழந்தைகள் சற்று சலிப்பு அடைந்து இருப்பார்கள். அவர்கள் விரும்பும் வண்ணம் வித விதமாக சமையல் செய்வது முடியாத காரியம். அது போன்ற சமயங்களில் புது விதமான ரெசிபிகளை செய்து தரவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் விதத்திலும், சத்தான உணவாகவும் இருக்க வேண்டும். அது போன்ற ஒரு லஞ்ச்பாக்ஸ் ரெசிபி தான் கொத்தமல்லி சாதம். இது செய்யும் எளிய முறையை இங்கு காணலாம். 

தேவையான பொருட்கள்

1 கப் பாசுமதி அரிசி

2 பெரிய வெங்காயம்

5 சின்ன வெங்காயம்

6 பச்சை மிளகாய்

2 கேரட்

5 பீன்ஸ்

1 பச்சை பட்டாணி

6 பல் பூண்டு

சிறிதளவு இஞ்சி

அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்

தேங்காய்

சிறிதளவு கிராம்பு

 சிறிதளவு ஏலக்காய்

1 இலவங்கப்பட்டை

1 பிரியாணி இலை

1 நட்சத்திர சோம்பு

15 முந்திரிப் பருப்பு

அரை கப் நிலக்க்கடலை

எலுமிச்சம்பழம்

சிறிதளவு கொத்தமல்லி

சிறிதளவு புதினா

தேவையான அளவு உப்பு

தேவையான அளவு நெய்

தேவையான அளவு எண்ணெய்

தேவையான அளவு தண்ணீர்

செய்முறை

முதலில் பாசுமதி அரிசியை ஊற வைத்து, பின்னர் ஒரு சட்டியில் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வேகும் போது சிறிதளவு எண்ணெய் ஊற்றினால் சாதம் ஒட்டாமல் வரும். பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.  பின்பு வெங்காயம், கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினாவை நறுக்கி, பச்சை பட்டாணியை உரித்து, தேங்காயை துருவி, மற்றும் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,  அதில் முந்திரிப் பருப்புகளை போட்டு அது பொன்னிறமாகும் வரை அதை வறுக்கவும். அதில் நிலக்கடலையை போட்டு வறுக்கவும். 

இப்பொழுது ஒரு மிக்ஸியில்  நறுக்கி வைத்திருக்கும் ஒரு கை அளவு கொத்தமல்லி, ஒரு கை அளவு புதினா, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, நான்கு பச்சை மிளகாய், துருவிய  தேங்காயை  மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் இரண்டு மேஜைகரண்டி அளவு நெய் மற்றும் ஒரு மேஜைகரண்டி அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, பிரியாணி இலை, மற்றும் நட்சத்திர சோம்பை சேர்த்து வதக்கவும். அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை அதை வதக்கவும். பின்னர் அதில்  பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், மற்றும் பட்டாணியை சேர்த்து அதை நன்கு கிளறவும்.

பிறகு அதில் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்து அதை நன்கு கிளறவும். பின்பு அதில் அரைத்து வைத்திருக்கும் மசாலா பேஸ்ட்டை சேர்த்து ஒரு கையளவு தண்ணீர் தெளித்து அதை நன்கு கிளறி விட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும். மசாலா பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் பாசுமதி அரிசியை சேர்த்து அரிசி உடைந்து விடாமல் அதை பக்குவமாக ஒரு கரண்டியின் மூலம் நன்கு கிளறவும். அடுத்து அதில் வறுத்து வைத்திருக்கும் முந்திரிப் பருப்பு மற்றும் வேர்க்கடலையை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி