அருமையான தேங்காய் சாதம் செய்வது எப்படி? பெஸ்ட் லஞ்ச் பாக்ஸ் ரெசிபி இதோ!
Nov 13, 2024, 11:32 AM IST
ஒரே மாதிரியான உணவு போர் அடித்து விடும். எல்லாரும் விரும்பி சாப்பிடுமாறு வித விதமாக சதங்கள் செய்து கொடுக்கலாம். ஈஸியாக தேங்காய் சாதம் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
வேலைக்கு செல்பவர்களுக்கும், பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கும் தினம் தோறும் மதிய உணவு செய்து கொடுப்பது சற்று கடினமான காரியம் தான். ஏனென்றால் ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக கொடுத்தால் தான் சாப்பிட நன்றாக இருக்கும். ஒரே மாதிரியான உணவு போர் அடித்து விடும். எல்லாரும் விரும்பி சாப்பிடுமாறு வித விதமாக சதங்கள் செய்து கொடுக்கலாம். ஈஸியாக தேங்காய் சாதம் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருட்கள்
1 கப் பாசுமதி அரிசி
1 கப் துருவிய தேங்காய்
2 பச்சை மிளகாய்
3 வற மிளகாய்
அரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
அரை டீஸ்பூன் கடலை பருப்பு
அரை டீஸ்பூன் சீரகம்
அரை டீஸ்பூன் கடுகு
அரை டீஸ்பூன் பெருங்காய தூள்
சிறிதளவு இஞ்சி
100 கிராம் வறுத்த வேர்க்கடலை
15 முந்திரி பருப்பு
1 எலுமிச்சம் பழம்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு கறிவேப்பிலை
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு நெய்
தேவையான அளவு தண்ணீர்
செய்முறை
முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறிய பிறகு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாசுமதி அரிசியை வேக வைப்பதற்க்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் பாசுமதி அரிசியை போட்டு அதனுடன் உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து சாதத்தை வேக வைத்து எடுத்து அதில் இருக்கும் தண்ணீரை வடித்த பின் ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடாக்க வேண்டும். சூடானதும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம், வற மிளகாய், மற்றும் கறிவேப்பிலையை போட்டு வதக்கவும். அது சற்று நிறம் மாறியதும் அதில் பெருங்காயத்தை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
பின்பு அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாய்யை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு வதக்கவும். பிறகு அதில் வேர்க்கடலை மற்றும் முந்திரிப் பருப்பை போட்டு அது சற்று நிறம் மாறும் வரை அதை வறுக்கவும். அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும். பின்பு அதில் துருவிய தேங்காயில் இருந்து பாதி தேங்காயை எடுத்து தனியாக வைத்துவிட்டு மீதமுள்ள தேங்காயை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு வதக்கவும். பிறகு அதில் நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் பாசுமதி அரிசியை சேர்த்து பக்குவமாக அரிசி உடைந்து விடாமல் ஒரு கரண்டியில் மூலம் அதை நன்கு கிளறி விடவும். பின்பு தனியாக எடுத்து வைத்திருக்கும் தேங்காயை அதில் சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடவும். சுவையான லஞ்ச பாக்ஸ் சாப்பாடு ரெடி. இதனை செய்து பாருங்கள்.லஞ்ச் பாக்ஸ் முழுவதும் காலியாகி தான் வீட்டுக்கு வரும்.
டாபிக்ஸ்