தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  இது இருந்தா போதும்! எதையும் சாப்பிடலாம்! அசத்தலான காலிஃபிளவர் கிரேவி! பக்கா ரெசிபி!

இது இருந்தா போதும்! எதையும் சாப்பிடலாம்! அசத்தலான காலிஃபிளவர் கிரேவி! பக்கா ரெசிபி!

Suguna Devi P HT Tamil

Nov 19, 2024, 07:11 PM IST

google News
காலிஃபிளவர் வைத்து சுவையான கிரேவி செய்யலாம். இந்த கிரேவியை வைத்து சப்பாத்தி, சாதம், இட்லி தோசை என எல்லாவிதமான உணவுக்கும் இது சரியானதாக இருக்கும். இந்த அசத்தலான காலிஃபிளவர் கிரேவியை செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.
காலிஃபிளவர் வைத்து சுவையான கிரேவி செய்யலாம். இந்த கிரேவியை வைத்து சப்பாத்தி, சாதம், இட்லி தோசை என எல்லாவிதமான உணவுக்கும் இது சரியானதாக இருக்கும். இந்த அசத்தலான காலிஃபிளவர் கிரேவியை செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.

காலிஃபிளவர் வைத்து சுவையான கிரேவி செய்யலாம். இந்த கிரேவியை வைத்து சப்பாத்தி, சாதம், இட்லி தோசை என எல்லாவிதமான உணவுக்கும் இது சரியானதாக இருக்கும். இந்த அசத்தலான காலிஃபிளவர் கிரேவியை செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.

கார்த்திகை மாதம் வந்து விட்டாலே ஒரு சிலரின் வீட்டில் அசைவ உணவுகளுக்கு அனுமதி இல்லை. புரட்டாசி மாதம் போல தான் பலருக்கு இந்த கார்த்திகை மாதம். இந்த மாதிரியான சமயங்களில் சைவ காய்கறிகளில் சுவையான உணவை சமைக்கலாம். அதில் முக்கியமான காய்கறி தான் காலிஃபிளவர். இந்த காலிஃபிளவர் வைத்து சுவையான கிரேவி செய்யலாம். இந்த கிரேவியை வைத்து சப்பாத்தி, சாதம், இட்லி தோசை என எல்லாவிதமான உணவுக்கும் இது சரியானதாக இருக்கும். இந்த அசத்தலான காலிஃபிளவர் கிரேவியை செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம். 

தேவையான பொருட்கள்

ஒரு பெரிய சைஸ் காலிஃபிளவர்

அரை கப் பட்டாணி 

2 பெரிய வெங்காயம்

சிறிதளவு பட்டை

5 முதல் 6 ஏலக்காய்

8 கிராம்பு

1 டீஸ்பூன் சோம்பு 

பிரியாணி இலை

பூண்டு - 6 பற்கள்

சிறிதளவு இஞ்சி

12 முந்திரி பருப்பு  

1 டீஸ்பூன் சீரகம் 

அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்

2 டீஸ்பூன் கஷ்மீரி மிளகாய் தூள் 

1 டீஸ்பூன் மல்லித் தூள் 

1 டீஸ்பூன் கரம் மசாலா

 தேவையான அளவு உப்பு

சிறிதளவவு கஸ்தூரி மேத்தி

கொத்தமல்லி இலை 

செய்முறை

முதலில் காலிஃபிளவரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சூடான தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.  எண்ணெய் சூடானதும் இதில்  காலிஃபிளவர் துண்டுகளை சேர்த்து வறுக்க வேண்டும். இதனை எடுத்து வைத்து விட்டு அதே கடாயில் மீண்டும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து எடுத்து வைத்திருந்த மசாலா தூள்கலை சேர்க்கவும். அவை வறுபட்டதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், 6 பல் பூண்டு மற்றும் ஒரு துண்டு இஞ்சி, 15 முந்திரி பருப்பு, நறுக்கிய தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி விட வேண்டும்.  

இதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு சிறிதளவு  தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் ஒரு அகலமான கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் அடிக்கில் சீரகம், அரைத்த மசாலா விழுது சேர்த்து வதக்கி விட வேண்டும். பின் ஆதில் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரக தூள், கொத்தமல்லி தூள்,  கரம் மசாலா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். பின்னர் இதில் தண்ணீர் சேர்த்து வறுத்து வைத்திருந்த   காலிஃபிளவர் மற்றும் அரை கப் பட்டாணி சேர்த்து வேக விட வேண்டும்.  இந்த நிலையில் சிறிதளவு கஸ்தூரி மேத்தி மற்றும் நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து அனைத்தையும் நன்கு கலக்கவும். இப்பொழுது சுவையான காலிஃபிளவர் கிரேவி தயார். இதனை  சப்பாத்தி, பூரி, இட்லி அல்லது உங்களுக்கு விருப்பமான புலாவ் ஆகியவற்றுடன் பரிமாறலாம். 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை