தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  இம்யூனிட்டி பவர் கொடுக்கும் நெல்லிக்காய் சாதம்! லஞ்ச் பாக்ஸ்க்கு சூப்பர் சாய்ஸ்! ஈசி ரெசிபி!

இம்யூனிட்டி பவர் கொடுக்கும் நெல்லிக்காய் சாதம்! லஞ்ச் பாக்ஸ்க்கு சூப்பர் சாய்ஸ்! ஈசி ரெசிபி!

Suguna Devi P HT Tamil

Nov 25, 2024, 04:33 PM IST

google News
பல நன்மைகளைக் கொண்ட பெரிய நெல்லிக்காயை வெறுமென சாப்பிடுவது மட்டுமல்லாமல் இதை வைத்து வித விதமாக சமையலும் செய்யலாம். இதில் பல மருத்துவ குணநலன்கள் உள்ளன. (Pintrest)
பல நன்மைகளைக் கொண்ட பெரிய நெல்லிக்காயை வெறுமென சாப்பிடுவது மட்டுமல்லாமல் இதை வைத்து வித விதமாக சமையலும் செய்யலாம். இதில் பல மருத்துவ குணநலன்கள் உள்ளன.

பல நன்மைகளைக் கொண்ட பெரிய நெல்லிக்காயை வெறுமென சாப்பிடுவது மட்டுமல்லாமல் இதை வைத்து வித விதமாக சமையலும் செய்யலாம். இதில் பல மருத்துவ குணநலன்கள் உள்ளன.

பல நன்மைகளைக் கொண்ட பெரிய நெல்லிக்காயை வெறுமென சாப்பிடுவது மட்டுமல்லாமல் இதை வைத்து வித விதமாக சமையலும் செய்யலாம். இதில் பல மருத்துவ குணநலன்கள் உள்ளன. இத்தகைய நெல்லிக்காயை வைத்து மதிய உணவுக்காக நெல்லிக்காய் சாதம் செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். நெல்லிக்காய் சாதம் செய்யும் எளிய முறையை தெரிந்துக் கொள்ளுங்கள். 

தேவையான பொருட்கள்

அரை கிலோ பாசுமதி அரிசி 

4 பெரிய நெல்லிக்காய் 

2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்

1 டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு

2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு 

1 டீஸ்பூன் கடுகு 

1 டீஸ்பூன் சீரகம் 

2 வற மிளகாய் 

நிலக்கடலை

கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் 

2 பச்சை மிளகாய் 

சிறிதளவு இஞ்சி

சிறிதளவு கறிவேப்பிலை 

அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்

தேவையான அளவு உப்பு 

செய்முறை

முதலில் அரிசியை கழுவி சுத்தம் செய்து ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது நெல்லிக்காயை துருவி கொள்ளவும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அடிக்கில்  நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும். அடுத்து வறுத்த நிலக்கடலை சேர்த்து கலந்து விடவும். பின்பு பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

மேலும் இதில் மஞ்சள் தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கலந்து விடவும். துருவிய நெல்லிக்காயை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். இறுதியாக வேகவைத்த சாதம் சேர்த்து கலந்து விடவும். இப்பொழுது சுவையான நெல்லிக்காய் சாதம் தயார்.

நெல்லிக்காயின் பலன்கள் 

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது

நெல்லிக்காயில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் உள்ளன, இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. இந்திய நெல்லிக்காய் வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்கிறது, இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.

முடி பராமரிப்பு

நெல்லிக்காயில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றம் மற்றும் இரும்புச்சத்து இருப்பதால் நிறைய ஷாம்புகள் மற்றும் கண்டிஷனர்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்திய நெல்லிக்காயில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது, இது முடி உதிர்வை குறைக்க உதவுகிறது. இது வேர்களை பலப்படுத்துகிறது மற்றும் முடியின் நிறத்தை பராமரிக்கிறது. ஆம்லாவின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பொடுகை எதிர்த்துப் போராட உதவுகிறது.

மன அழுத்தத்தை குறைக்கிறது

நெல்லி ஒரு சிறந்த மன அழுத்த நிவாரணியாகும், இது தூக்கத்தைத் தூண்டவும் தலைவலியைப் போக்கவும் உதவுகிறது.

கண் பராமரிப்பு

நெல்லிக்காயில் கரோட்டின் உள்ளடக்கம் நிறைந்துள்ளது, இது பார்வை தொடர்பான குறைபாடுகளை நிவர்த்தி செய்ய பயன்படுகிறது. இந்திய நெல்லிக்காய் மற்றும் தேன் கலவையானது கண்பார்வை, தூரப் பார்வை மற்றும் கண்புரை ஆகியவற்றை மேம்படுத்த உதவுகிறது.

சுவாச ஆரோக்கியம்

நெல்லிக்காய் சுவாசக் கோளாறுகளுக்கு எதிராக நன்மை பயக்கும் என்பதை நீரூபணம் ஆகியுள்ளது. இது இருமல், காசநோய், தொண்டை தொற்று மற்றும் காய்ச்சலைக் குறைக்க உதவுகிறது.

இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்கிறது

நெல்லிக்காயில் இரும்புச்சத்து நிறைந்த ஆதாரமாக உள்ளது, இதன் குறைபாடு இரத்த சோகையை ஏற்படுத்துகிறது.

செரிமானத்தை மேம்படுத்த

ஆம்லாவில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது ஒட்டுமொத்த செரிமான செயல்முறையை மேம்படுத்த உதவுகிறது.

கால்சியத்தை உறிஞ்சுகிறது

ஆம்லா நன்மைகளில் கால்சியத்தை உறிஞ்சுவதும் அடங்கும், இது பற்கள், எலும்புகள் மற்றும் முடிக்கு இன்றியமையாத உறுப்பு ஆகும்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி