தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பெண்களுக்கு வலிமை கொடுக்கும் உளுந்து புட்டு! சட்டுனு செய்யலாம்! மாஸ் ரெசிபி!

பெண்களுக்கு வலிமை கொடுக்கும் உளுந்து புட்டு! சட்டுனு செய்யலாம்! மாஸ் ரெசிபி!

Suguna Devi P HT Tamil

Oct 24, 2024, 05:33 PM IST

google News
பெண்களுக்கு அவர்களது உடலின் உடலுக்கு வலிமை சேர்க்கும் ஒரு முக்கிய பொருள் தான் உளுந்து, இந்த உளுந்தை பெண் குழந்தைகள் பூப்பெய்த நாளில் இருந்தே வீட்டில் அடிக்கடி கொடுப்பதுண்டு.
பெண்களுக்கு அவர்களது உடலின் உடலுக்கு வலிமை சேர்க்கும் ஒரு முக்கிய பொருள் தான் உளுந்து, இந்த உளுந்தை பெண் குழந்தைகள் பூப்பெய்த நாளில் இருந்தே வீட்டில் அடிக்கடி கொடுப்பதுண்டு.

பெண்களுக்கு அவர்களது உடலின் உடலுக்கு வலிமை சேர்க்கும் ஒரு முக்கிய பொருள் தான் உளுந்து, இந்த உளுந்தை பெண் குழந்தைகள் பூப்பெய்த நாளில் இருந்தே வீட்டில் அடிக்கடி கொடுப்பதுண்டு.

இயல்பாகவே பெண்களின் உடலுக்கு அதிகமான வலிமை தேவைப்படுகிறது. மாதம்தோறும் நடக்கும் மாதவிடாய் சுழற்சி காரணமாக பெண்களின் உடலில் இருந்து அதிகமான இரத்தப்போக்கு ஏற்படுகிறது. இதன் காரணமாகவே அவர்களது உடலுக்கு அதிகமான சக்தி தேவைப்படுகிறது. இந்நிலையில் அவர்களது உடலில் ஏற்படும் மாறறங்களை தங்கும் அளவிற்கு அப்பெண்ணிற்கு திறன் தேவைப்படுகிறது.  பெண்களுக்கு அவர்களது உடலின் உடலுக்கு வலிமை சேர்க்கும் ஒரு முக்கிய பொருள் தான் உளுந்து, இந்த உளுந்தை பெண் குழந்தைகள் பூப்பெய்த நாளில் இருந்தே வீட்டில் அடிக்கடி கொடுப்பதுண்டு. 

 ஏனெனில் உளுந்து தசை நரம்புகளுக்கும், இடுப்பு எலும்புகளுக்கும் வலிமை சேர்க்கும் ஒரு உணவாகும். ஆனால் வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் இந்த உளுந்தை உணவாக கொடுக்கும் போது அதை விரும்பி சாப்பிடுவதில்லை. அதற்கு காரணம் உளுந்தின் சுவை சற்று குறைவானதாக இருக்கும். எனவே அவர்களுக்கு பிடித்தவாறு உளுந்தை சுவையான முறையில் செய்து கொடுப்பது நல்ல யுக்தியாகும். அவர்களை வலிமைப்படுத்தும் உளுந்து மற்றும் அரிசியை வைத்து எளிமையான முறையில் உளுந்தம் புட்டு செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள். 

தேவையான பொருட்கள் 

1கப் தோலுரித்த முழு வெள்ளை உளுந்து

அரை கப் பச்சரிசி

2 தேங்காய்

200 கிராம் நாட்டு சர்க்கரை 

1 டீஸ்பூன் குங்குமப்பூ

1 டீஸ்பூன் ஏலக்காய் பொடி

1 டீஸ்பூன்  நெய்

1 டீஸ்பூன் உப்பு

1 கப் முந்திரி

செய்முறை 

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்துக் அதில் உளுந்தை போட்டு வறுக்க வேண்டும். நன்கு சிவந்து வாசனை வரும் வரை வறுக்க வேண்டும். பின்னர் அதனை எடுத்து தட்டில் வைத்து ஆற வைக்க வேண்டும். மேலும் இதே மிதமான சூட்டில் அரசியையும் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரிசியையும் அடுப்பை அணைத்து வெளியே எடுத்து தட்டில் ஆற வைக்க வேண்டும். இவை இரண்டும் நன்கு ஆறிய பின்னர் ஒரு மிக்சியில் போட்டு ரவை போல சற்று சொர சொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

பின் இந்த அரைத்த மாவில் சூடு தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்ற வேண்டும். கட்டி இல்லாமல் நன்கு கலந்துக் கொள்ள வேண்டும். உதாரணாத்திற்கு  இந்த மாவவை பிடித்தால் உதிரியாகுமாறு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த மாவை ஒரு சல்லடை வைத்து சலித்து எடுத்துக் கொள்ளவும். இதில் சிறிதளவு உப்பு, 1 கப் துருவிய தேங்காய் சேர்த்து கலக்கவும். பின்னர் இட்லி வேக வைப்பது போல வேக வைக்க வேண்டும் இட்லி தட்டு மேல் சீஸ் துணி  வைத்து வேகா விடவும். இதற்கு புட்டு குழாய் இருந்தால் அதிலும் வேகவைக்கலாம். நெய், தேவையான அளவு தேங்காய் துருவல் நாட்டு சர்க்கரை, ஏலக்காய் பொடி, முந்திரி பொடி, குங்குமப்பூ சேர்த்தால் உளுந்தப் புட்டு தயார். இதனை உணங்கல் வீடுகளில் செய்து பெண் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சுவையான சத்தான எலும்பு வலிப்படுத்தும் புட்டு ருசிக்க தயார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி