Homemade Omapodi: வீட்டிலேயே ஓமப்பொடி செய்வது எப்படி? சிம்பிள் ஸ்டெப்ஸ் தான்! பார்க்கலாம்!
Sep 22, 2024, 05:17 PM IST
Homemade Omapodi: பேக்கரிகளில் விற்கப்படும் மிக்சரில் போடப்படும் ஓமப்பொடி மிகவும் ருசியான ஒரு பொருளாகும். இதுவே மிக்ஸருக்கு முழுமையான சுவையை தருகிறது.
தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் நமது வீடுகளில் பலகரங்கள் செய்வது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. பேக்கரிகளில் விற்கப்படும் பெரும்பானமையான பொருட்களை நாமே எளிதாக வீடுகளில் செய்யலாம். இதில் முக்கியமான ஒரு உணவு பொருள் தான் ஓமப்பொடி, இது இல்லாத பலகாரங்கள் எதுவும் இருப்பதில்லை. இதனை எளிய முறையில் நாம் வீட்டிலேயே செய்யும் முறையை இங்கு காண்போம்
உங்களது குழந்தைகள் விரும்பும் விதத்தில் இந்த ஓமப்பொடியை செய்து தனது அசத்துங்கள். மேலும் இதனை மட்டும் வைத்து சாப்பிடலாம். இதனுடன் நிலக்கடலை, காரப்பூந்தி உட்பட மேலும் சிலவற்றை சேர்த்து மிக்ஸர் செய்தும் சாப்பிடலாம். உங்கள் வீட்டில் உள்ளவர்களும் விரும்பி சசாப்பிடும் விதம் இந்த ரெசிபி இருக்கும்.
தேவையான பொருட்கள்
1. 1 கப் கடலை மாவு
2. ½ கப் அரிசி மாவு
3. மிதமான சூட்டில் உருக்கிய 1 தேக்கரண்டி வெண்ணெய்
4. 2 தேக்கரண்டி சூடான எண்ணெய்
5. 2 தேக்கரண்டி ஓமம் விதைகள்
6. தேவையான அளவு உப்பு
7. வறுக்க தேவவையான எண்ணெய்
செய்முறை
முதலில் வறுத்த ஓமத்தை மிக்ஸியில் போட்டு தூளாக வரும் வரை பொடியாக்கவும். பின்னர் கால் கப் தண்ணீர் சேர்த்து மீண்டும் அரைக்கவும்.இதை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். (இதனை கழுவி, ஒரு மணி நேரம் ஊறவைத்து, பின்னர் அரைத்தும் செய்யலாம்). மற்றொரு பாத்திரத்தில் கடலை மாவு மற்றும் அரிசி மாவை ஒன்றாக சேர்த்து கலந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். மேலும் அதில் உப்பு, வெண்ணெய், சூடான எண்ணெய் மற்றும் ஓமம் சாறு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து (சிறிது, சிறிதாக தண்ணீரை சேர்க்க வேண்டும்.) நன்கு கலந்து, மாவு ஒட்டும் பதத்தில் எடுத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக கொதிக்கும் வரை காய வைக்க வேண்டும். பின்னர் சூடான எண்ணெயில் இடியாப்பம் பிழியும் சாதனம் வைத்து அதன் உள்ளே இந்த மாவு கலவையை போட்டு அழுத்தி பிழிய வேண்டும். ஓமப்பொடி செய்வதற்கு எண்ணெய் நன்றாக சூடாக்கப்பட வேண்டும். அதனை சோதனை செய்து பார்க்க முதலில் ஒரு சிட்டிகை மாவை சேர்த்தால், அது உடனடியாக பொரியுமாறு சூடாக இருத்தல் வேண்டும்.
சரியான அளவு ஓமப்பொடி
சூடான எண்ணெயில் சரியான அளவில் வட்டமாக மாவை பிழிந்து விட வேண்டும். பிழியும் போது மாவு ஒன்றன் மேல் ஒன்று சேர விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நன்றாக வேகும் வரை பொறுத்து இருந்து திருப்பி போட வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வேண்டும் அளவிற்கு ஓமப்பொடி செய்து வைத்தக் கொள்ளுங்கள்.
இதனை ஒரு காகிதத்தின் மீது வைத்து எண்ணெய் வடியும் வரை காத்திருக்க வேண்டும். ஆறிய பின்னர் சிறு சிறு துண்டுகளாக உடைத்து சாப்பிடலாம். மிக்ஸர் கலவையில் இந்த ஓமப்பொடியை போட்டு சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இதனை சாப்பிடலாம்.
டாபிக்ஸ்