Top 8 Parenting Tips : ஸ்கிரீன் பார்த்துக்கொண்டே உங்கள் குழந்தைகள் சாப்பிடுகிறார்களா? அதை தவிர்க்க என்ன செய்யலாம்?
Top 8 Parenting Tips : ஸ்கிரீன் பார்த்துக்கொண்டே உங்கள் குழந்தைகள் சாப்பிடுகிறார்களா? அதை தவிர்க்க என்ன செய்யலாம் என்று பாருங்கள்.
குழந்தைகள் செய்யும் பொதுவான தவறுகள் என்ன தெரியுமா? அது அவர்களின் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. எனவே இந்த தவறுகளை உங்கள் குழந்தைகள் செய்ய அனுமதிக்காதீர்கள். உங்கள் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பழக்கங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறப்பான ஒன்றைத்தான் தர விரும்புவார்கள். அவர்களின் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று எண்ணுவார்கள். ஆனால் சில நேரங்களில் அன்றாட பழக்கவழக்கங்கள் அவர்களின் உடல் நலனை பாதிப்பவையாக அமைந்துவிடும். உங்கள் குழந்தைகள் பழகும் சில பழக்கவழக்கங்கள் அவர்களை உடல் ரீதியாக துன்புறுத்துவையாக அமைந்துவிடும். அவை என்னவென்றும், அவற்றை தடுப்பது எப்படி என்றும் தெரிந்துகொள்ளுங்கள்.
நகம் கடித்தல்
நகம் கடிக்கும் பழக்கம் வெளியில் இருந்து பார்த்தால் அது உங்களுக்கு தீங்கு விளைவிக்காத பழக்கம்போல் தோன்றும். ஆனால் அதில் சில சிக்கல்கள் உள்ளது. நகங்களை கடிப்பது உங்கள் உடலுக்குள் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை அனுப்பிவிடும். இதனால் உங்களுக்கு தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் உங்களுக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும்.
சாப்பிடும்போது திரை பார்ப்பது
பல குழந்தைகள், காலை, மதியம் மற்றும் இரவு நேரத்தில் சாப்பிடும்போது தங்களின் டேப்கள் அல்லது டிவி அல்லது மொபைல் போன்களை வைத்துக்கொண்டு திரையில் மூழ்கிவிடுவார்கள். அப்போது உணவு மீதான அவர்களின் கவனம் சிதறடிக்கப்படும். இதனால் அதிகம் சாப்பிட்டுவிடுவார்கள். அது அவர்களுக்கு செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். திரைக்கு முன் அமர்ந்துகொண்டு சாப்பிடும்போது, அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் அல்லது எவ்வளவு சாப்பிடுகிறார்கள் என்பதெல்லாம் தெரியாது. இதனால் அவர்களுக்கு வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும்.
நீண்ட நேரம் ஹெட்ஃபோன்கள் பயன்படுத்துவது
குழந்தைகளுக்கு ஹெட்ஃபோன்கள் பயன்படுத்துவது மிகவும் பிடிக்கும். அவர்கள் இசை அல்லது விளையாட்டு என அதில் அதிக சத்தத்தை வைத்துக்கொண்டு காதில் பேசும்போது அது காதின் கேட்கும் திறனை பாதிக்கும். இதனால் அவர்களுக்கு சிறிய வயதிலேயே சத்தம் தொடர்பான காது கேளாமை பிரச்னை ஏற்படும். இதனால் அவர்களுக்கு காது பிரச்னைகள் தொடர்ந்து இருந்துகொண்டேயிருக்கும்.
இரவு படுக்கச் செல்லும் முன் ஃபோன் பயன்படுத்துவது
உங்கள் குழந்தைகளை இரவு உறங்கச் செல்லும் முன் ஃபோன் அல்லது டேப்களை பயன்படுத்த வைத்தால் அது அவர்களின் உறக்க சுழற்சியை மாற்றிவிடும். திரைகளில் இருந்து வரும் ஊதா நிற விளக்கொளி, அவர்களுக்கு மெலாட்னின் உற்பத்தியில் பிரச்னைகளை ஏற்படுத்தி, அது அவர்கள் உறங்குவதையே கடினமாக்கிவிடும். எனவே 5 மணிக்கு மேல் திரை நேரத்தை குறைத்துவிடவேண்டும். பின்னர் 7 மணிக்கு இரவு உணவு 9 மணிக்கு இரவு உறக்கம் என்பதை முறைப்படுத்திக்கொள்ளவேண்டும்.
பெட்டில் அமர்ந்துகொண்டு சாப்பிடுவது
பெரும்பாலான குழந்தைகள் பெட்டில் அமர்ந்துகொண்டு அல்லது படுத்துக்கொண்டு சாப்பிடும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் இது ஒரு கெட்ட பழக்கம் ஆகும். இந்தப்பழக்கம் அவர்களின் செரிமான மண்டலத்தை பாதிக்கும். இதனால் அவர்களின் உடல் எடை அதிகரிக்கும். படுத்துக்கொண்டே சாப்பிடுவது அவர்கள் உடலின் திறனையும், உணவை அது சரியாக செரிக்கச்செய்யாமல் போவதற்கும் வாய்ப்பாகிவிடும். இதனால் அவர்களுக்கு விழுங்கும்போது கூட பிரச்னைகள் ஏற்படலாம்.
பற்களை கடிக்கும் பழக்கம்
சில குழந்தைகள், உறங்கும் நேரத்தில் பற்களை கடிக்கும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் அவர்கள் பல்வேறு பல் பிரச்னைகளுக்கு ஆளாகிவிடுவார்கள். நாள்பட்ட இந்தப்பழக்கம் பற்களில் உள்ள எனாமலை நீக்கிவிடும். இது பற்கூச்சம், தாடை வலி ஆகியவற்றை ஏற்படுத்தும். இதனால் குழந்தைகளுக்கு தலைவலி மற்றும் உறக்கத்தின் தரம் குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.
கட்டுப்பாடற்ற கோவம்
குழந்தைகள் எதற்கெடுத்தாலும் கோவப்படும்போது அல்லது அவர்கள் சில நேரங்களில் கத்துகிறார்கள். அழுகிறார்கள். சில நேரங்களில் பொருட்களை தூக்கி வீசுகிறார்கள். இதனால் அவர்களுக்கு உடல் ரீதியான பிரச்னைகள் ஏற்படுகிறது. இதை அவர்கள் தொடர்ந்து செய்யும்போது, மனஅழுத்தத்தின் அளவை அதிகரித்து, அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவிழக்கச் செய்கிறது.
கொரித்தல்
உணவை அதிகமாக எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக வாயில் வைத்து கொரிக்கும்போது, அது அவர்களுக்கு போதிய ஊட்டச்சத்தை கொடுக்காமல் போக வாய்ப்பு உள்ளது. மேலும் இது பெற்றோருக்கு பெரும் சவாலாகும். குழந்தைகள் பல்வேறு வகை காய்கறிகள், உணவுகள் மற்றும் பழங்கள் என அனைத்தையும் சாப்பிடாமல் போனால் அது அவர்களுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் குறைபாட்டை ஏற்படுத்தும். இது அவர்களின் வளர்ச்சிக்கு அடிப்படையாகும். இவை இல்லாவிட்டால் அவர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்