தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ladies Finger Mor Kulambu : கடலை மாவு சேர்த்த மசாலா மோர் குழம்பு; வெண்டைக்காய் சேர்த்து செய்வது எப்படி?

Ladies Finger Mor Kulambu : கடலை மாவு சேர்த்த மசாலா மோர் குழம்பு; வெண்டைக்காய் சேர்த்து செய்வது எப்படி?

Priyadarshini R HT Tamil
Feb 06, 2024 11:55 AM IST

Ladies Finger Mor Kulambu : கடலை மாவு சேர்த்த மசாலா மோர் குழம்பு; வெண்டைக்காய் சேர்த்து செய்வது எப்படி?

Ladies Finger Mor Kulambu : கடலை மாவு சேர்த்த மசாலா மோர் குழம்பு; வெண்டைக்காய் சேர்த்து செய்வது எப்படி?
Ladies Finger Mor Kulambu : கடலை மாவு சேர்த்த மசாலா மோர் குழம்பு; வெண்டைக்காய் சேர்த்து செய்வது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

எண்ணெய் – ஒன்றரை டேபிள் ஸ்பூன்

வெங்காயம் – 1

கஷ்மீரி மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்

இஞ்சி-பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்

கரம் மசாலா அரை ஸ்பூன்

சீரகத்தூள் – ஒரு ஸ்பூன்

கடலை மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

கொத்துமல்லித்தழை – கைப்பிடி

காய்ந்த சிவப்பு மிளகாய் – 2

தயிர் – 200 கிராம்

கசூரி மேத்தி – 2 ஸ்பூன்

எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு – ஒரு ஸ்பூன்

செய்முறை

வெண்டைக்காய் மோர் குழம்பு செய்ய வெண்டைக்காயை சற்று நீளமாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடேற்றிய பின்னர் நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கிக்கொள்ள வேணடும்.

அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் சீரகம், காய்ந்த சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கிக்கொள்ள வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமானவுடன் அதில் இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள் தூள், கஷ்மீரி மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், உப்பு, கசூரி மேத்தி மற்றும் கடலை மாவு சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.

இந்த கலவையில் கடைந்த தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்கவிடவேண்டும்.

இதில் வறுத்த வெண்டைக்காய், கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக கலந்து கடாயை மூடி ஐந்து நிமிடம் கொதிக்கவிடவேண்டும்.

கடைசியில் கொத்தமல்லி சேர்த்து வெண்டைக்காய் மோர் குழம்பை பரிமாறவேண்டும்.

நன்றி - ஹேமா சுப்ரமணியன். 

வெண்டைக்காயின் நன்மைகள்

இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. வெண்டைக்காயில் கொழுப்பு இல்லை. இதில் உள்ள பெக்டின் என்ற உட்பொருள் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. கெட்ட கொழுப்புக்கள்தான் இதய நோய்கள் ஏற்பட காரணமாகிறது. இதய ஆரோக்கியத்துக்கு வெண்டைக்காயை அதிகம் உணவில் எடுத்துக்கொள்ளலாம்.

ரத்த சர்க்கரை அளவை பராமரிக்கிறது

நீரிழிவு நோயாளிகளுக்கு வெண்டைக்காய் மிகவும் நல்லது. இதில் உள்ள அதிக நார்ச்சத்து, சர்க்கரையை உங்கள் ரத்தத்தில் மெதுவாக வெளியிட்டு, செரிமானம் மெதுவாக நடைபெறவைக்கிறது. இதனால், சர்க்கரை திடீரென உயர்வதில்லை.

புற்றுநோயை எதிர்த்து போராடுகிறது

மற்ற காய்களைவிட இதில் அதிகளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது செல்கள் சிதைவதை தடுத்து, புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது.

நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது

வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் சி சத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பொதுவாக தொற்றுகளை தடுக்கிறது. 100 கிராம் வெண்டைக்காயில், 40 சதவீதம் வைட்டமின் சி சத்து உள்ளது.

அனீமியாவை தடுக்கிறது

வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் கே, ஃபோலேட் மற்றும் இரும்புச்சத்தக்கள் ரத்தத்தில் ஆரோக்கியத்தை அதிகரித்து, அனீமியாவை தடுக்கிறது.

உடல் எடை குறைக்க உதவுகிறது

100 கிராம் வெண்டைக்காயில் 33 கலோரிகள் மட்டுமே உள்ளது. எனவே உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வு. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் வயிறு நிறைந்த உணர்வை நீண்ட நேரம் கொடுப்பதால் உங்களுக்கு வேறு உணவு சாப்பிடும் எண்ணம் ஏற்படாது.

குடல் புற்றுநோயை தடுக்கிறது

வெண்டைக்காயில் அதிகளவில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளது. இது ஒட்டுமொத்த செரிமான மண்டலத்தையுமே சுத்தம் செய்கிறது. குறிப்பாக குடலில் அழுக்குகள் தங்காமல் பார்த்துக்கொள்கிறது. இதனால், குடலை ஆரோக்கியமாக பராமரித்து, குடல் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.

கர்ப்பத்துக்கு நல்லது

இதில் உள்ள ஃபோலேட்கள், கரு வளர்ச்சிக்கு மிகவும் தேவையானவை. இதில் அதிகளவில் ஃபோலேட்கள் உள்ளதால், குழந்தைக்கு சரியான நரம்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்