தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Bachelor Instant Rasam : பேச்சுலர்ஸ் உங்களுக்குதான்.. கம கம வாசனையில்.. செம ருசியாக ரசம் செய்யலாம்..10 நிமிடம் போதும்!

Bachelor Instant Rasam : பேச்சுலர்ஸ் உங்களுக்குதான்.. கம கம வாசனையில்.. செம ருசியாக ரசம் செய்யலாம்..10 நிமிடம் போதும்!

Divya Sekar HT Tamil

Aug 24, 2024, 11:47 AM IST

google News
Bachelor Instant Rasam : ஜீரணத்தில் பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி இந்த ஜீரக ரசத்தை எடுத்துக்கொள்வது அவர்களின் ஜீரண உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவி, ஜீரணத்தை எளிதாக்கும். குடல் புற்றுநோய் வராமல் தடுக்க சீரகம் உதவுகிறது.
Bachelor Instant Rasam : ஜீரணத்தில் பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி இந்த ஜீரக ரசத்தை எடுத்துக்கொள்வது அவர்களின் ஜீரண உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவி, ஜீரணத்தை எளிதாக்கும். குடல் புற்றுநோய் வராமல் தடுக்க சீரகம் உதவுகிறது.

Bachelor Instant Rasam : ஜீரணத்தில் பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி இந்த ஜீரக ரசத்தை எடுத்துக்கொள்வது அவர்களின் ஜீரண உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவி, ஜீரணத்தை எளிதாக்கும். குடல் புற்றுநோய் வராமல் தடுக்க சீரகம் உதவுகிறது.

நாம் உட்கொண்ட உணவு வகைகள் அனைத்தும் உடனடியாக ஜீரணமாகி அது உடலுக்கு சக்தியை அளித்தால் மட்டுமே நம்மால் தொடர்ந்து இயங்க முடியும். நாம் உண்ணும் உணவு பல்வேறு வழிகளில் செரிமானம் ஆகிறது. அதில் ஒரு வழிதான் நாம் உண்ணும் உணவிலே செரிமானத்துக்கான உணவை சேர்த்து எடுத்துக்கொள்வது.

ஜீரணத்தை எளிதாக்கும்

ஜீரணத்தில் பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி இந்த ஜீரக ரசத்தை எடுத்துக்கொள்வது அவர்களின் ஜீரண உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவி, ஜீரணத்தை எளிதாக்கும். குடல் புற்றுநோய் வராமல் தடுக்க சீரகம் உதவுகிறது. 

திராட்சைப் பழச்சாறுடன், சிறுது சீரகத்தைப் பொடித்து போட்டு பருகினால் ஆரம்பநிலை ரத்த அழுத்த நோய் குணமாகும். ரத்ததில் சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ளவும், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. உடலின் தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்க உதவுகிறது. இப்போது இதில் பேச்சுலர்ஸ் உடனடி ரசம் எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

பேச்சுலர்ஸ் உடனடி ரசம்

தேவையான பொருட்கள்

ஜீரா 1 டீஸ்பூன்

மிளகு 1 டீஸ்பூன்

புளி எலுமிச்சை அளவு

தக்காளி 1

கொத்தமல்லி இலைகள்

கறிவேப்பிலை

பூண்டு 10

பச்சை மிளகாய் 1

உப்பு 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்

பெருங்காயம்  1/4 டீஸ்பூன்

தாளிக்க

எண்ணெய்

கடுகு

கறிவேப்பிலை

சிவப்பு மிளகாய்

செய்முறை

பேச்சுலர்ஸ் இது உங்களுக்கு தான். ஐந்து நிமிடம் போதும் சுவையான காரசாரமான ரசம் செய்யலாம். இனி நீங்கள் சமைக்க தெரியவில்லை என்றால் கவலையை விட்டு விடுங்கள். ஏனென்றால் இந்த ரசம் அவ்வளவு ஈசியாகவும் இருக்கும். சுவையாகவும் இருக்கும். ஒரு முறை செய்தால் போதும் இரண்டு நாள் வைத்து சாப்பிடலாம்.

அதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், எலுமிச்சை அளவு புளி, புளியில் கல் மண் ஏதாவது இருந்தால் அதனை கழுவி விட்டு சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு மீடியம் சைஸ் தக்காளியை வெட்டி செய்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

லைட்டாக கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள்

பின்னர் அதில் சிறிது கொத்தமல்லி, சிறிது கருவேப்பிலை, ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு ஸ்பூன் உப்பு, 10 பல் பூண்டு, பச்சை மிளகாய் ஒன்று, பெருங்காயம் ஒரு டீஸ்பூன் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். அதனை அப்படியே தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு கடாய் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு ஒரு காய்ந்த மிளகாய் கொஞ்சமாக கருவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் நாம் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து நன்கு வதக்கி பின்பு தண்ணீர் தாராளமாக ஊற்றி நுரை வரும் வரை காத்திருந்து லைட்டாக கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். அதிகமாக கொதித்தால் ரசத்தின் சுவை குறைந்துவிடும். எனவே நுரை பொங்கும் போது அடுப்பை அணைத்துவிட்டு பரிமாறவும். மிகவும் சுவையாக இருக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை