Mint To Coriander: புதினா முதல் கொத்தமல்லி வரை: உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் உணவுகள்
Mint To Coriander: புதினா முதல் கொத்தமல்லி வரை உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் உணவுகள் குறித்துக் காண்போம்.

Mint To Coriander: புதினா முதல் கொத்தமல்லி வரை: உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் உணவுகள் (Freepik)
Mint To Coriander: உங்கள் உடலை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்திருக்கவும், வெப்பத்தை வெல்ல உதவும் மூலிகைகள் குறித்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
உடலின் வெப்பநிலையை சமாளிக்க புதினா, பெருஞ்சீரகம், கொத்தமல்லி, செம்பருத்தி போன்ற மூலிகைகளையும் நம் அன்றாட வழக்கத்தில் சேர்க்கலாம்.
எந்த உணவுகள் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன:
ஆயுர்வேதத்தின் படி, உப்பு மற்றும் காரமான உணவுகளிலிருந்து ஒருவர் விலகி இருக்க வேண்டும். மேலும், சிலருக்கு மசாலாப் பொருட்கள் ஆரோக்கியமான குடல் செயல்பாட்டை பாதிக்கும். இஞ்சி மற்றும் மிளகாய் உடலை வெப்பப்படுத்தும் என்பதால் மிதமாக எடுத்துக்கொள்ளவேண்டும். உடல் வெப்பநிலையை சீராகவும் குளிர்ச்சியாக வைத்திருக்கவும் புதினா, சீரகம், கொத்தமல்லி, பெருஞ்சீரகம் போன்ற மசாலாப் பொருட்களை உணவில் சேர்க்க வேண்டும்.