தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  இனி ஈசியா செய்யலாம் சக்கரவள்ளி கிழங்கு அல்வா! சூப்பர் ரெசிபி!

இனி ஈசியா செய்யலாம் சக்கரவள்ளி கிழங்கு அல்வா! சூப்பர் ரெசிபி!

Suguna Devi P HT Tamil

Oct 10, 2024, 05:29 PM IST

google News
இந்தியாவில் சாப்பிடப்படும் இனிப்பு உணவுகளில் முக்கியமான ஒன்று தான் அல்வா. இந்த அல்வா பல பொருட்களை வைத்து பல விதமாக செய்யப்படுகிறது. மேலும் இந்த அல்வா பலரது விருப்ப உணவாகவும் இருந்து வருகிறது. (meena's unique recipe)
இந்தியாவில் சாப்பிடப்படும் இனிப்பு உணவுகளில் முக்கியமான ஒன்று தான் அல்வா. இந்த அல்வா பல பொருட்களை வைத்து பல விதமாக செய்யப்படுகிறது. மேலும் இந்த அல்வா பலரது விருப்ப உணவாகவும் இருந்து வருகிறது.

இந்தியாவில் சாப்பிடப்படும் இனிப்பு உணவுகளில் முக்கியமான ஒன்று தான் அல்வா. இந்த அல்வா பல பொருட்களை வைத்து பல விதமாக செய்யப்படுகிறது. மேலும் இந்த அல்வா பலரது விருப்ப உணவாகவும் இருந்து வருகிறது.

இந்தியாவில் சாப்பிடப்படும் இனிப்பு உணவுகளில் முக்கியமான ஒன்று தான் அல்வா. இந்த அல்வா பல பொருட்களை வைத்து பல விதமாக செய்யப்படுகிறது. மேலும் இந்த அல்வா பலரது விருப்ப உணவாகவும் இருந்து வருகிறது. கடைகளில் வாங்கும் அல்வா மிகவும் சரியான பதத்தில் இருக்கும். உதாரணமாக திருநெல்வேலியில் விற்பனையாகும் இருட்டுக்கடை அல்வா, மதுரையில் விற்கப்படும் ஸ்பெஷல் அல்வா என ஒவ்வொரு ஊர்களிலும் பிரபலமான உணவாக இந்த அல்வா இருந்து வருகிறது. நாம் வீட்டிலேயே சத்தான பொருட்களை வைத்தும் அல்வா செய்யலாம். சக்கரவள்ளி கிழங்கை வைத்து சூப்பர் அல்வா செய்வது என்பது குறித்து இங்கு காண்போம்.  

தேவையான பொருட்கள்

2 சக்கரவள்ளிக்கிழங்கு 

125-150 கிராம் வெல்லம்

தேவையான அளவு தண்ணீர்

1.5 டீஸ்பூன் நெய்

2 டீஸ்பூன் கோதுமை மாவு

3-4 டீஸ்பூன் நெய்

ஏலக்காய் தூள்

வறுத்த முந்திரி கொட்டைகள்

செய்முறை 

முதலில் சக்கரவள்ளிக் கிழங்குகளை இரண்டாக வெட்டி ஒரு இட்லி சட்டியில் சரியான அளவு தண்ணீர் ஊற்றி வைத்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நன்கு வெந்ததும் அதனை எடுத்து தகவல் உரித்து, ஒரு மிக்சியில் போட்டு பேஸ்ட் ஆக அரைத்து எடுத்துக் கொள்ளவேண்டும். பின்னர் அல்வாவிற்கு தேவையான இனிப்பிற்கு வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அது நன்கு கரையும் வரை காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் ஒன்றரை ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும். நெய் நன்றாக உருகியதும் அதில் 2 டீஸ்பூன் கோதுமை மாவை சேர்க்க வேண்டும். இது சிறிது நேரம் வதங்க விட வேண்டும். 

பின் அதில் நாம் அரைத்து வைத்திருந்த சக்கரவள்ளிக் கிழங்கு பேஸ்ட்டை போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.பின்னர் இதில் காய்ச்சி வைத்திருந்த வெல்லக் கரைசலை ஒரு வடிகட்டி வைத்து வடிகட்டி ஊற்ற வேண்டும்.  இதனை மிதமான தீயில் செய்ய வேண்டும். கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பின் மீண்டும் ஒன்றரை ஸ்பூன் நெய் ஊற்றி கிண்ட வேண்டும். இப்போது சற்று மென்மையான பதத்தில் இருக்கும். மறுபடியும் நெய் ஊற்றி அல்வா பதத்திற்கு வரும் வரை இதனையே தொடர்ந்து செய்ய வேண்டும். தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்து விட்டு இறுதியாக வறுத்த முந்திரி பருப்பை போட்டு கிளறி விட வேண்டும். இப்போது சுவையான மற்றும் சூடான சக்கரவள்ளிக் கிழங்கு அல்வா தயார். அதை அப்படியே ஒரு வாழை இலையில் வைத்து பரிமாறவும். 

இதனை செய்யும் போது கிளறுவதை நிறுத்தக் கூடாது. ஏனெனில் கிளறுவதை நிறுத்தினால் அந்த பதம் இறுகி கட்டியாகிவிடும். எனவே அல்வாவிற்கு தேவையான நெய் பயன்படுத்த வேண்டும். குறைவான நெய் ஊற்றினாலும் அல்வா இறுகி போய் விடும். இதனை பக்குவமாக செய்து உங்கள் வீடுகளில் இருப்பவர்களுக்கு கொடுங்கள். சாப்பிட்டு விட்டு கடைகளில் விற்கப்படும் அளவாவை விட சுவையாக இருக்கும். நீங்களும் சாப்பிட்டு மகிழுங்கள். 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை