Sakkaravalli Kizhangu Vadai: வயிறு கோளாறே வராதுங்க.. சுவையான சக்கரவள்ளி கிழங்கு வடை
சக்கரவள்ளி கிழங்கு வடை செய்வது எப்படி என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.
சக்கரவள்ளி கிழங்கு வடை
உடலில் இருக்கக்கூடிய சிக்கல்களை போக்குவதற்குச் சரியான உணவுகளைச் சாப்பிட்டால் போதும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்படி பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட பல உணவுகள் உள்ளன. அதில் ஒன்றுதான் சர்க்கரைவள்ளி கிழங்கு.
சக்கரவள்ளி கிழங்கு உடலில் இருக்கக்கூடிய மலச்சிக்கல் சிக்கலைத் தடுக்கின்றது. இதில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதேபோல உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குறிப்பாக சக்கரவள்ளி கிழங்கினை தினமும் சாப்பிட்டு வந்தால் கரு வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த சக்கரவல்லி கிழங்கைக் கொண்டு வடை எப்படிச் செய்வது என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
- இரண்டு சக்கர வள்ளிக் கிழங்கு
- மூன்று பச்சை மிளகாய்
- ஒரு வெங்காயம்
- ஒரு கப் நிலக்கடலை
- இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு
- கால் தேக்கரண்டி பெருங்காயத்தூள்
- தேவையான அளவு உப்பு
- பொரிக்கத் தேவையான எண்ணெய்
செய்முறை
- முதலில் பச்சை மிளகாய், வெங்காயம் உள்ளிட்டவற்றைப் பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் ஒரு கடாயில் நிலக்கடலையைப் போட்டு நன்றாக வறுத்து ஆற வைத்து அதனை மிக்ஸியில் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- சக்கரவள்ளி கிழங்கின் நன்றாகக் கழுவி அதன் தோலை சீவி துருவி வைத்துக்கொள்ள வேண்டும்.
- துருவிய சக்கரவள்ளி கிழங்கு அரைத்து வைத்திருக்கும் நிலக்கடலையுடன் சேர்த்து நன்றாகக் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் அந்த கலவையோடு ஏற்கனவே நெருக்கி வைத்திருக்கக் கூடிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தையும் சேர்த்துப் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- கடைசியாக இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு கலந்து சேர்த்து வடை மாவு பதத்திற்கு அதனைப் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- அடுப்பில் ஒரு கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அந்த எண்ணெய் சூடானதும் மிதமான தீயில் வைத்து, மாவை வடை போலத் தட்டி பொன்னிறமாகப் பொரித்து எடுக்க வேண்டும்.
- அவ்வளவுதான் சுவையான சக்கரவள்ளி கிழங்கு வடை தயார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.