தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உணவு செரிமானத்தைத் தூண்டும் மிளகு மல்லி ரசம் செய்வது எப்படி?

உணவு செரிமானத்தைத் தூண்டும் மிளகு மல்லி ரசம் செய்வது எப்படி?

I Jayachandran HT Tamil

Mar 31, 2023, 11:16 PM IST

Healthy Reciepe; உணவு செரிமானத்தைத் தூண்டும் மிளகு மல்லி ரசம் செய்வது எப்படி என்பது குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்
Healthy Reciepe; உணவு செரிமானத்தைத் தூண்டும் மிளகு மல்லி ரசம் செய்வது எப்படி என்பது குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்

Healthy Reciepe; உணவு செரிமானத்தைத் தூண்டும் மிளகு மல்லி ரசம் செய்வது எப்படி என்பது குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்

உணவு செரிமானத்தைத் தூண்டும் ஆற்றல் மிளகு மல்லி ரசத்துக்கு உண்டு. மிளகு குளிர்ச்சியைத் தருவதோடு செரிமானத்துக்கான நொதிகளை உடலில் உருவாக்கும். அதேபோலத்தான் மல்லியும். இரண்டையும் வைத்து ரசம் வைத்தால் அஜீரணக் கோளாறுகள் அறவே போய்விடும்.

ட்ரெண்டிங் செய்திகள்

Summer Days : இன்னும் 25 ஆண்டுகளுக்கு கோடைக்காலம் எப்படி இருக்கும்? அண்ணா பல்கலை. அதிர்ச்சி ஆய்வு!

Parenting Tips : உங்கள் குழந்தைகளை ஜீனியஸ் ஆக்க படாதபாடு படுகிறீர்களா? இதை தெரிந்துகொள்ளுங்கள் முதலில்!

Gongura Benefits : பாலியல் நோய்களுக்கு தீர்வு; பார்வை குறைபாட்டை சரிசெய்யும் புளிச்சக்கீரையின் நன்மைகள்!

Benefits of Beetroot Juice : தினமும் ஒரு டம்ளர்; 10 நாள் தொடர்ந்து பருகவேண்டிய சாறு! ரத்த சோகையை விரட்டியடிக்கும்!

மிளகு மல்லி ரசம் செய்யத் தேவையான பொருட்கள்.:

மிளகு – 2 டீஸ்பூன்,

மல்லி (தனியா) – ஒரு டீஸ்பூன்,

ரசப்பொடி – ஒரு டீஸ்பூன்,

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,

தக்காளி – ஒன்று,

புளி – சிறிதளவு,

வெல்லம் அல்லது சர்க்கரை – சிறிதளவு,

நெய் – ஒரு டீஸ்பூன்,

பூண்டுப் பல் – 2,

கடுகு – சிறிதளவு,

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,

கறிவேப்பிலை– சிறிதளவு,

கொத்த மல்லித்தழை – சிறிதளவு,

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,

உப்பு – தேவைக்கேற்ப.

மிளகு – மல்லி ரசம் செய்முறை.:

நெய்யில் மிளகு, தனியாவை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். புளியில் 2 கப் நீர் விட்டு புளிக்கரைசல் தயார் செய்யவும்.

கடாயில் புளிக்கரைசலை விட்டு உப்பு, பெருங்காயத்தூள், நசுக்கிய பூண்டுப் பல், நறுக்கிய தக்காளி சேர்த்து கொதிக்க விடவும்.

இப்போது மிளகு-தனியா பொடி, ரசப்பொடி, மஞ்சள் தூள் சேர்த்து கொதி வந்தவுடன் இறக்கி, வெல்லம் அல்லது சர்க்கரை சேர்க்கவும்.

எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் சேர்க்கவும். கொத்த மல்லித்தழை தூவி, ரசப் பாத்திரத்தை மூடவும்.

ரசத்தை அடுப்பிலிருந்து இறக்கிய உடனேயே மூடி விட்டால் ரசத்தின் மணம், சுவை அப்படியே கிடைக்கும்.

டாபிக்ஸ்