ஓவன் தேவையில்லை! வாழைப்பழம் மட்டுமே போதும்! சூப்பரா செய்யலாம் கேக்! சிம்பிள் ரெசிபி இதோ!
Nov 17, 2024, 10:09 AM IST
நாம் வீட்டிலேயே எளிமையாக கேக் செய்யும் போது எதற்காக பேக்கரிக்கு செல்ல வேண்டும். இதற்கு ஓவன் தேவையில்லை. வீட்டிலேயே எளிமையாக வாழைபழம் வைத்து சாஃப்ட் ஆன கேக் செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.
வீட்டில் யாருக்காவது பிறந்தநாள் என்றால் உடனே நாம் அனைவரும் பேக்கரிக்கு செல்வது வழக்கம். அவர்களுக்கு விருப்பமான ஒரு கேக் வாங்கி அவர்களை வெட்ட வைத்து மகிழ்ச்சியுடன் அந்த பிறந்தநாளை கொண்டாடுவோம். பிறந்தநாள் அல்லாது பல நிகழ்ச்சிகளிலும் இப்போது கேக் வெட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். திருமண நிகழ்வு, ஆபீஸ் பார்ட்டி, வெற்றி விழாக்கள் என அனைத்து விதமான விழாக்களிலும் கேக் வெட்டுகின்றனர். ஆனால் கேக் வெட்ட வேண்டும் என்றால் உடனே பேக்கரிக்கு சென்று தான் வாங்கி வருகிறோம். ஆனால் சில சமயங்களில் பேக்கரிகளில் விற்கப்படும் கேக்குகளில் அதிகமான ஈஸ்ட், பேக்கிங் சோடா ஆகியவை கலந்திருக்க வாய்ப்பு உள்ளது . நாம் வீட்டிலேயே எளிமையாக கேக் செய்யும் போது எதற்காக பேக்கரிக்கு செல்ல வேண்டும். இதற்கு ஓவன் தேவையில்லை. வீட்டிலேயே எளிமையாக வாழைபழம் வைத்து சாஃப்ட் ஆன கேக் செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
4 வாழைபழங்கள்
250 கிராம் கோகோ பவுடர்
300 கிராம் குக்கிங் எண்ணெய்
400 கிராம் மைதா
அரை லிட்டர் பால்
100 கிராம் வெண்ணெய்
200 கிராம் சாக்கலேட் குக்கீஸ்
1 டீஸ்பூன் பேக்கிங் சோடா
1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
ஒரு பட்டர் பேப்பர்
செய்முறை
முதலில் 4 வாழைபழங்களை தோல் உரித்து ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். அதில் கோகோ பவுடர், குக்கிங் எண்ணெய் ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். மேலும் இதில் மைதா மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும். இதனை இடைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். மேலும் இதில் பால் மற்றும் சாக்கலேட் குக்கீஸ் ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும். மேலும் இந்த கேக் மிக்சிங்கில் பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் ஆகியவற்றை போட்டு கிளற வேண்டும்.
பின்னர் ஒரு ட்ரே அல்லது ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் தடவி அதன் மேல் பட்டர் பேப்பரை போட வேண்டும். மேலும் இதில் இந்த கேக் மிக்சை ஊற்றி சம தளமாக இருக்க வேண்டும். மேலும் இந்த ட்ரேயை ஒரு குக்கர் அல்லது ஒரு பெரிய பாத்திரத்தில் ஒரு ஸ்டாண்ட் வைத்து தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். மேலும் இந்த ஸ்டாண்ட் மீது இந்த ட்ரேயை வைத்து ஒரு மூடியை வைத்து மூட வேண்டும். இதனை ஒரு 30 முதல் 35 நிமிடங்கள் வரை வேக விட வேண்டும். வெந்த பின்னர் அதனை ஒரு குச்சியை வைத்து அதனுள் நுழைத்து பார்க்க வேண்டும். அதில் கேக் ஒட்டாமல் இருந்தால் கேக் வெந்து விட்டது என அர்த்தம். வெந்த கேக்கை எடுத்து தனியாக போட்டு சாப்பிட வேண்டியதுதான். சுவையான கெமிக்கல் கலக்காத கேக் தயார். இதனை நீங்களும் வீட்டில் ட்ரை செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்.
டாபிக்ஸ்