சாஃப்ட் அரிசி கேக்! இனி கேக் செய்ய மைதா தேவையில்லை அரிசியே போதும்! இன்னைக்கே செஞ்சு பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சாஃப்ட் அரிசி கேக்! இனி கேக் செய்ய மைதா தேவையில்லை அரிசியே போதும்! இன்னைக்கே செஞ்சு பாருங்க!

சாஃப்ட் அரிசி கேக்! இனி கேக் செய்ய மைதா தேவையில்லை அரிசியே போதும்! இன்னைக்கே செஞ்சு பாருங்க!

Suguna Devi P HT Tamil
Oct 24, 2024 01:23 PM IST

நமது வீடுகளில் அடிக்கடி பேக்கரிகளுக்கு சென்று வாங்கும் உணவுகளில் முதன்மையாக பொருளாக கேக் உள்ளது. இந்த கேக் செய்வதற்கு ஓவன் மற்றும் சில இன்கிரிடியன்கள் தேவைப்படுகின்றன.

சாஃப்ட் அரசி கேக்! இனி கேக் செய்ய மைதா தேவையில்லை அரிசியே போதும்! இன்னைக்கே செஞ்சு பாருங்க!
சாஃப்ட் அரசி கேக்! இனி கேக் செய்ய மைதா தேவையில்லை அரிசியே போதும்! இன்னைக்கே செஞ்சு பாருங்க!

தேவையான பொருட்கள் 

400 கிராம் பச்சரிசி 

அரை கப் தண்ணீர் 

500 கிராம் வெல்லம் 

தேவையான அளவு உப்பு

இரண்டு டீஸ்பூன் நெய் 

ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா

செய்முறை 

முதலில் 400 கிராம் பச்சரிசியை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்த பின் மூன்று முதல் நான்கு மணி நேரங்கள் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு தேங்காயை துருவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுத்ததாக அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 500 கிராம் வெல்லத்தை சேர்த்து மேலும் 400 கிராம் அளவுள்ள தண்ணீரை சேர்த்து வெல்லம் நன்கு கரையும் வரை சூடாக்கவும். இதற்கு எந்த பதமும் தேவையில்லை வெல்லம் முழுவதுமாக கரைந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

பின்னர் துருவிய தேங்காயை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் சில ஏலக்காய் துண்டுகளை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த அரைத்து எடுத்த கலவையை ஒரு துணியில் போட்டு வடிகட்டி தேங்காய் பாலாக மாற்றி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஊறவைத்து எடுத்த பச்சரிசியை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மாவாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு அகன்ற பாத்திரத்தில் முதலில் அரைத்த பச்சரிசி மாவை போட்டு அதில் தேங்காய் பாலை ஊற்றி கலக்கி கொள்ள வேண்டும். மேலும் அதனுள் காய்ச்சி எடுத்த வெல்லப்பாகை வடிகட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிதளவு பேக்கிங் சோடா மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கி எடுத்துக் கொள்ளவும். 

பின்னர் அடிப்பகுதி கனமாக உள்ள பாத்திரம் அல்லது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் மிதமான சூட்டில் நெய்யை ஊற்ற வேண்டும் மெய் நன்கு உருகியதும் அதனால் நாம் எடுத்து வைத்திருக்கும் கலவையை ஊற்ற வேண்டும்.  முதலில் சில நிமிடங்கள் அடுப்பை முழுவதுமாக வைத்து வேக விட வேண்டும். பின் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து 15 நிமிடங்கள் வேக விட வேண்டும். இதனை ஒரு பாத்திரத்தைக் கொண்டு மூடி வைக்க வேண்டும் நன்றாக வெந்த பின்பு மீண்டும் அப்படியே 15 நிமிடங்கள் முடி வைக்கவும். இறுதியாக நன்றாக ஆறிய பின் எடுத்து கத்தியால் வெட்டி சாப்பிடலாம். சுவையான மற்றும் சாப்டான அரிசியால் செய்யப்பட்ட கேக் ரெடி நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பார்த்து மகிழுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.