JIO NEW PREPAID PLAN: ஜியோ அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுடன் இரண்டு புதிய பிளான்..எவ்வளவு விலை, எத்தனை நாள் வேலிடிட்டி
- Jio New Prepaid Plan: ஜியோ அன்லிமிடெட் கால்கள், ஒரு நாளைக்கு 2ஜிபி 5ஜி டேட்டாவுடன் மலிவான புதிய ரீசார்ஜ் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த திட்டத்தின் முழுவிவரத்தை பார்க்கலாம்
- Jio New Prepaid Plan: ஜியோ அன்லிமிடெட் கால்கள், ஒரு நாளைக்கு 2ஜிபி 5ஜி டேட்டாவுடன் மலிவான புதிய ரீசார்ஜ் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த திட்டத்தின் முழுவிவரத்தை பார்க்கலாம்
(1 / 10)
ரிலையன்ஸ் ஜியோ அன்லிமிடெட் கால்கள், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவுடன் கூடிய புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது
(2 / 10)
ஜியோவின் மலிவான ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.198 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 3 செயலிகள் சந்தா இலவசமாக கிடைக்கும்
(3 / 10)
இது குறித்து ரிலையன்ஸ் ஜியோ அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. ரூ.198 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் நன்மைகள் என்ன? இதோ விவரம்
(4 / 10)
இந்த பேக்கின் செல்லுபடியாகும் காலம் 14 நாட்கள். ஒவ்வொரு நாளும் இரண்டு ஜிபி 5ஜி டேட்டாவைப் பெறுவீர்கள். அதாவது, வாடிக்கையாளர்கள் ரூ.198 பேக்கில் மொத்தம் 28ஜிபி 5ஜி டேட்டாவைப் பெறுவார்கள்
(5 / 10)
தினசரி 2ஜிபி டேட்டா வரம்பை கடந்தால் டேட்டா வேகம் குறையும். வாடிக்கையாளர்கள் 64 கேபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம்
(6 / 10)
இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் இலவசம். வாடிக்கையாளர்கள் ஜியோ டிவி, ஜியோ சினிமா-ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான இலவச சந்தாவைப் பெறுகிறார்கள்
(7 / 10)
ஜியோ சினிமா பிரீமியம் சேவை கிடைக்காது என்று ரிலையன்ஸ் ஜியோ தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இதே போன்ற சேவைகளுடன் 28 நாட்களுக்கு மலிவான திட்டமும் கிடைக்கிறது
(8 / 10)
ஜியோவின் மலிவான திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.349 ஆகும். 198 திட்ட பலன்கள், ரூ 349 திட்டத்திலும் கிடைக்கும். இதற்கு செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள்
(9 / 10)
நீங்கள் ரூ.448 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், அதன் வேலிடிட்டி 28 நாட்களாக இருக்கும், மேலும் ஒரு நாளைக்கு 2ஜிபி 5ஜி டேட்டா கிடைக்கும். வரம்பற்ற அழைப்புகள், 100 எஸ்எம்எஸ் அனுப்பலாம்
மற்ற கேலரிக்கள்