Home Décor : உங்கள் வீட்டுக்குள் இதை மட்டும் செய்யுங்கள்; வீட்டிற்கு ஆசிர்வாதம் நிறைந்து வழியும்!
Aug 20, 2024, 04:18 PM IST
Home Décor : உங்கள் வீட்டுக்குள் இதை மட்டும் செய்யுங்கள்; வீட்டிற்கு ஆசிர்வாதம் நிறைந்து வழியும்!
உங்கள் வீட்டில் நீங்கள் பாம்பு செடியை வைப்பதால், அது வீட்டுக்குள் கொண்டுவரும் நன்மைகள் என்னவென்று பாருங்கள்.
பாம்புச் செடியின் நன்மைகள்
பாம்புச் செடி, மாமியாரின் நாக்கு என்று அழைக்கப்படுகிறது. இந்தச் செடியை உங்கள் வீட்டுக்குள் வைப்பதால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படுகிறது. பாம்புச் செடி உங்கள் வீட்டுக்கு ஆசிர்வாதங்களைக் கொண்டுவருகிறது.
வீட்டில் உள்ள காற்றை சுத்தம் செய்கிறது
உங்கள் வீட்டில் பாம்புச்செடிகளை வைக்கும்போது, அது வீட்டின் உள்ளே உள்ள காற்றை சுத்தம் செய்கிறது. பாம்புச்செடியை நாசாவும் வீட்டுக்குள் செடிகளை வளர்க்க அறிவுறுத்துகிறது. அவை வீட்டின் உள்ளே உள்ள நச்சுக்களை அகற்ற உதவும். இதனால் உங்கள் வீட்டில் பென்ஜென், ஃபார்மால்டிஹைட் போன்ற நச்சுக்கள் உங்கள் வீட்டில் சூழாமல் இருக்கும். இதனால் உங்கள் வீட்டின் சூழல் நன்றாக இருக்கும்.
காற்றின் தரம்
பாம்புச் செடி காற்றில் உள்ள நச்சுக்களை அகற்றும் தன்மை கொண்டது. இதனால் உங்கள் வீட்டுக்குள் காற்றின் தரம் மேம்படுகிறது.
பாராமரிப்பு குறைவு
நீங்கள் சோம்பேறியான தோட்ட பரிமரிப்பாளராக இருந்தீர்கள் என்றால், பாம்புச்செடி, உங்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இவற்றை பராமரிப்பது மிகவும் எளிது. இதற்கு குறைவான வெளிச்சம் போதும். தண்ணீரும் முறையாக விடவேண்டும் என்ற தேவையில்லை. இதற்கு எந்த உரமும் தேவையில்லை. அதனால் இதை பராமரிப்பதும் எளிது.
அழகியல் தன்மை
பாம்புச் செடிகள் நீண்டு, நேரான இலைகளாக வளர்பவை. பச்சை மற்றும் மஞ்சள் நிற இலைகள் கொண்டிருக்கும். அது பார்ப்பவர் கண்களை கவரும். வீட்டுக்கு அழகைத்தரும். இவற்றை நீங்கள் வீட்டிலும், வெளியிலும் நடலாம். இது உங்கள் வீட்டில் பசுமையை சூழச்செய்யும். உங்கள் கண்களுக்கு இதமளிக்கும்.
மனநிலையை மாற்றும்
உங்கள் வீட்டில் பாம்புச் செடி வளர்ப்பது உங்களின் மனநிலையை மேம்படுத்துகிறது. உங்கள் வீடு அல்லது பணியிடம் இரண்டிலும் வளர்ப்பது உங்கள் மனநிலையை நன்றாக வைத்திருக்கும். வீட்டுக்குள் நீங்கள் செடிகள் வளர்ப்பது, உங்கள் மனநிலையைக் குறைக்க உதவும். இது உங்களின் கவனத்தை அதிகரிக்கும். பாம்புச் செடியும் வளர்க்கலாம்.
நேர்மறையான புவியியல் மதிப்பீடு
சீன புவியியல் மதிப்பீட்டில் பாம்புச் செடி, அதிர்ஷ்டத்தை கொண்டுவரும் செடியாக உள்ளது. இதன் வலுவான, நீளமான இலைகள், ஆற்றலின் அளவீடாகவும், நேர்மறை எண்ணங்களை அதிகம் கவர்வதாகவும் கூறப்படுகிறது.
மண் இல்லாமலும் வளர்க்கலாம்
பாம்புச் செடிகளை மண் இல்லாமலும் வளர்க்க முடியும். இவற்றை தொட்டிகளில் வைத்து வளர்க்கும் போது மண்ணில் வைக்கவேண்டும். நல்ல ஒரு ஆரோக்கியமான இதழில் ஒன்றை எடுத்து ஒரு பாட்டிலில் தண்ணீர் ஊற்றி அதில் வைத்தும் வளர்க்கலாம். புதிய வேர்களும் இலையுமாக அதிலும் இந்தச்செடி செழித்து வளரும்.
பூச்சிகள் வராது
பாம்புச் செடியின் இலைகளுக்கு பூச்சிகள் வராது. மற்ற செடிகளைப்போல் இல்லாமல், இது பூச்சிகளை அண்டவிடாது என்பதால், இதை வீட்டிற்குள் வைத்து வளர்ப்பதும் நல்லது. தோட்டத்தில் வைக்கும்போது, தோட்டத்துக்கும் பூச்சிகள் வராது.
உறக்கம்
பாம்புச் செடிகள் கார்பன்டைஆக்ஸைடை இரவு நேரத்தில் ஆக்ஸிஜனான மாற்றும் என்று கூறப்படுகிறது. இதனால், இந்தச் செடி உங்கள் உறக்கத்தின் தரத்தை அதிகரிக்கும். எனவே இந்தச் செடியை வீட்டுக்குள் வளர்த்து மகிழுங்கள்.
டாபிக்ஸ்