Gardening : உங்கள் பால்கனியிலே ஆரோக்கியமான கற்றாழைச் செடி வளர்க்க முடியும்! அது எப்படி எனப்பாருங்கள்!
By Priyadarshini R Aug 18, 2024
Hindustan Times Tamil
கற்றாழைச் செடி வைக்க ஆழமான தொட்டி தேவைப்படாது, எனவே அகலமான தொட்டியை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
கற்றாழைச் செடி வைக்க ஆழமான தொட்டி தேவைப்படாது, எனவே அகலமான தொட்டியை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
கற்றாழைச் செடிக்கு நல்ல சூரியஒளி தேவை. அதன் இலைகள் நன்றாக செழித்து வளர வேண்டுமெனில், அதற்கு நல்ல சூரிய ஒளி படும் இடத்தில் செடியை நீங்கள் வைக்கவேண்டும்.
கற்றாழைச் செடி சதைப்பற்றுள்ள செடிகளைப்போல்தான் சில நேரங்களில் இருக்கும். நீங்கள் வேருக்கு அதிக தண்ணீர் ஊற்றினால் அது செடியைக் கொன்றுவிடும்.
கற்றாழைக்கு 30 டிகிரிக்கு மேல் வெப்பம் ஏறினால் பிடிக்காது. அந்த அளவு வெப்பத்தில் வைக்கும்போது, கற்றாழையில் மஞ்சள் படரும். உள்ளே உள்ள ஜெல்லும் வெளியில் வரத்துவங்கும். எனவே அதைத்தடுக்க கடும் வெயிலில் தொட்டியை நேரடியாக வைக்கக்கூடாது.
கற்றாழைச் செடியை டிரிம் செய்வது மிகவும் அவசியம். இதனால் புதிய இலைகள் தொடர்ந்து வளரும்.
கற்றாழையை நீங்கள் அதன் ஜெல்லுக்காக வளர்க்கும்போது, அதை நன்றாக வளர்க்கவேண்டும். அது நன்றாக படர்ந்து வளர்வதை உறுதிசெய்யுங்கள்.