Karthigai Deepam: போலீஸ் கொடுத்த அதிர்ச்சி.. கார்த்தியால் மண்ணை கவ்விய ஐஸ்வர்யா - கார்த்திகை தீபம்-karthigai deepam serial today episode promo on august 19 2024 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: போலீஸ் கொடுத்த அதிர்ச்சி.. கார்த்தியால் மண்ணை கவ்விய ஐஸ்வர்யா - கார்த்திகை தீபம்

Karthigai Deepam: போலீஸ் கொடுத்த அதிர்ச்சி.. கார்த்தியால் மண்ணை கவ்விய ஐஸ்வர்யா - கார்த்திகை தீபம்

Aarthi Balaji HT Tamil
Aug 19, 2024 03:32 PM IST

Karthigai Deepam: கரெக்டா சொன்ன கடத்திட்டியா என்று அஞ்சு கொலை ஆறுமுகம் மீது சந்தேகப்பட அவன் கோபப்பட்டு கிளம்பி செல்ல நான் உன்னை நம்புறேன் சமாதானப்படுத்துகிறாள்‌.

போலீஸ் கொடுத்த அதிர்ச்சி.. கார்த்தியால் மண்ணை கவ்விய ஐஸ்வர்யா - கார்த்திகை தீபம்
போலீஸ் கொடுத்த அதிர்ச்சி.. கார்த்தியால் மண்ணை கவ்விய ஐஸ்வர்யா - கார்த்திகை தீபம்

இதனிடையே கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய ( ஆகஸ்ட் 19 ) எபிசோட் அப்டேட் பற்றி பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சிகள் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோட் தீபாவை கடைசி சொல்லி கை காட்ட மைதிலி அங்கு வந்து நிற்க அஞ்சு கொலை ஆறுமுகம் மைதிலியை கடத்திய நிலையில் இன்று ( ஆகஸ்ட் 19 ) நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

உன்னை நம்புறேன்

அதாவது, ஐஸ்வர்யா கரெக்டா சொன்ன கடத்திட்டியா என்று அஞ்சு கொலை ஆறுமுகம் மீது சந்தேகப்பட அவன் கோபப்பட்டு கிளம்பி செல்ல நான் உன்னை நம்புறேன் சமாதானப்படுத்துகிறாள்‌.

நீ ஸ்டேஷனில் இருக்கணும்

அதைத் தொடர்ந்து ரியா வீட்டில் ரெடி ஆகிக் கொண்டிருக்க திடீரென வீட்டில் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு வெளியே வந்து கதவை திறக்க போலீஸ் நின்று கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். இன்னைக்கு ஒரு நாள் நீ ஸ்டேஷனில் இருக்கணும் என்று சொல்லிக் கூப்பிட ரியா எதுக்கு என்று காரணம் கேட்க காரணம் எல்லாம் சொல்ல முடியாது என சொல்கின்றனர்.

அதைத் தொடர்ந்து ரியா ரெடியாகி விட்டு வந்ததும் என உள்ளே சென்று ரம்யாவுக்கு போன் போட்டு போலீஸ் வந்திருக்கும் விஷயத்தை சொல்லி எல்லாம் கார்த்திக் வேலையாக தான் இருக்கும். நீ உஷாரா இரு என சொல்லி போலீஸ் உடன் கிளம்பி செல்கிறாள்.

நான் சொல்ற இடத்துக்கு வா

மறுபக்கம் ஐந்து கொலை ஆறுமுகம் கடத்தியது தீபா இல்லை, அவளோட அண்ணி மைதிலி என தெரிந்து தீபாவுக்கு போன் போட்டு உன் அண்ணியை கடத்தி வச்சிருக்கேன் ஒழுங்கா மரியாதையா நான் சொல்ற இடத்துக்கு வா என்று மிரட்டுகிறான்.

அடுத்து நடக்க போவது என்ன

தீபாவும் வருவதாக சொல்லி ஃபோனை வைக்க அடுத்து கார்த்திக் இந்த குடோனுக்கு வந்து அதிர்ச்சி கொடுத்து ரவுடிகளுடன் சண்டையிடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

கடந்த எபிசோட்

ஏற்கனவே கார்த்திக்கு, ரம்யாவின் மீது சந்தேகம் இருந்து வரும் நிலையில், ரம்யாவின் அப்பா விஸ்வநாதன் கார்த்திக்கு போன் செய்து, ரம்யா குறித்த மொத்த உண்மையும் உடைந்து விட்டார். இதனையடுத்து கார்த்திக் ரம்யாவின் முகத்திரையை கிழித்து அவளை போலீசில் ஒப்படைத்தான்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.