தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  High Mileage Maruti Suzuki Swift S-cng Launched In India

Swift S-CNG: என்னது… இவ்வளவு மைலேஜ் கொடுக்குமா!

Aug 16, 2022, 11:57 AM IST

அதிக மைலேஜ் கொடுக்கும் ஸ்விஃப்ட் எஸ் சிஎன்ஜி (Maruti Suzuki Swift S-CNG) என்ற மாடலை மாருதி சுசுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
அதிக மைலேஜ் கொடுக்கும் ஸ்விஃப்ட் எஸ் சிஎன்ஜி (Maruti Suzuki Swift S-CNG) என்ற மாடலை மாருதி சுசுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அதிக மைலேஜ் கொடுக்கும் ஸ்விஃப்ட் எஸ் சிஎன்ஜி (Maruti Suzuki Swift S-CNG) என்ற மாடலை மாருதி சுசுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் இருக்கும் பிரபலமான முன்னணி கார் நிறுவனங்களில் மாருதி சுசுகி நிறுவனமும் ஒன்று. பட்ஜெட் கார்களில் இருந்து மைலேஜ் கொடுக்கும் கார்கள் வரை இந்நிறுவனம் பல மாடல்களை வெளியிட்டு வருகின்றது. மாருதி சுசுகி நிறுவனம் வெளியிட்டுள்ள ஸ்விஃப்ட் கார்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Parenting Tips : கவனம் பெற்றோர்களே! இந்த விஷயங்களை உங்கள் குழந்தைகளிடம் கூறிவிடாதீர்கள்!

Pomegranate Peel Tea : உடலுக்கு தேவையான எத்தனை நன்மைகளை கொடுக்கிறது பாருங்கள் இந்த ஒரு தேநீர்!

Liver Detox : கல்லீரை சுத்தம் செய்ய வேண்டுமா? காலை வெறும் வயிற்றில் ஒரு மணி நேரம் இந்த பானத்தை பருகவேண்டும்!

Mudakathan Keerai Rasam : மூட்டுவலியைப் போக்கும் முடக்கத்தான் கீரை ரசம்! எத்தனை ஆரோக்கியம் உள்ளது பாருங்கள்!

அந்த வகையில் அதிக மைலேஜ் கொடுக்கும் ஸ்விஃப்ட் சிஎன்ஜி மாடல் காரை மாருதி சுசுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை உச்சத்தில் இருப்பதால் இந்த மாடல் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இருக்கும் சூழலில் எலக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி கார்கள் மிக வேகமாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது.

இதுவரை எந்த எலக்ட்ரிக் காரையும் விற்பனை செய்யாத மாருதி சுசுகி நிறுவனம் சிஎன்ஜி கார் விற்பனையில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றது. தற்போது மாருதி சுசுகி ஸ்விஃப்ட் எஸ் சிஎன்ஜி ( Maruti Suzuki Swift S CNG ) என்ற பெயரில் புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது அம்சங்கள்

  • இந்த மாடலின் விலை 7.77 லட்சம் ரூபாயிலிருந்து தொடங்குகிறது. மாத சந்தா திட்டத்தின் மூலம் வாங்க வேண்டுமென்றால், மாத சந்தா 16,499 ரூபாயிலிருந்து தொடங்குகிறது.
  • இது மாருதி சுசுகி நிறுவனத்தின் 9வது சிஎன்ஜி மாடலாகும். இந்த கார் VXi, ZXi என 2 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த மாடல்களில் எக்ஸ் ஷோரூம் விலையானது, Vxi வேரியண்ட்டின் விலை 7.77 லட்சம் ரூபாயாகவும், ZXi வேரியண்ட்டின் விலை 8.45 லட்ச ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
  • இந்த காரில் 1.2 லிட்டர், K-சீரிஸ் ட்யூயல்-ஜெட், ட்யூயல் விவிடி என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இது 6,000 ஆர்பிஎம்மில் 76 பிஹெச்பி பவர் மற்றும் 4,300 ஆர்பிஎம்மில் 98 என்எம் டார்க் இழுவிசை தரக்கூடியது.
  • இந்த காரில் மிகவும் சிறப்பான விஷயம் ஒரு கிலோவிற்கு 30.90 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கொடுக்கும்.