World Donkey Day : பொறுமை.. மிகவும் குறைவாக தான் சாப்பிடும்.. உலக கழுதை தினம்.. சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!
May 09, 2024, 01:59 PM IST
World Donkey Day : பாரம் தூக்கி வேலை செய்தாலும் கழுதைகள் மிகவும் குறைவாக தான் சாப்பிடும். புல் தாவரங்கள் அதிகமாக சாப்பிடும். ஆனால் இந்த பேப்பர் சாப்பிடுவதை எப்படி பழக்கினார்கள் என்பது குறித்து தகவல் இல்லை.
உலக கழுதை தினம்
மே 8 ஆம் தேதி உலக கழுதை தினம் கொண்டாடப்படுகிறது. கழுதைகள் அமைதி, போர் மற்றும் வேலை காலங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்களுக்கு உறுதியான உதவியாளர்களாக இருந்த விலங்குகள், ஆனால் அவை எப்போதும் சரியான முறையில் நடத்தப்படவில்லை. உலக கழுதை தினம் என்பது பாலைவன விலங்குகள் மீது சிறப்பு அக்கறை கொண்ட விஞ்ஞானி ராஸிக் ஆர்க்கின் யோசனையாகும்.
2018 ஆம் ஆண்டில் உலக கழுதை தினம் நிறுவப்பட்டது. உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும் தாழ்மையான கழுதையின் முயற்சிகளை அங்கீளிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.
பெரும்பாலும் வளர்ச்சியடையாத நாடுகளில் இவை மூட்டை விலங்குகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. வேலை செய்யும் கழுதைகள் பெரும்பாலும் வாழ்வாதார மட்டத்தில் அல்லது அதற்குக் கீழே வாழ்பவர்களுடன் தொடர்புடையவை. வளர்ந்த நாடுகளில் சிறிய எண்ணிக்கையிலான கழுதைகள் இனப்பெருக்கத்திற்காக அல்லது செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன.
கழுதை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்
நமது அன்றாட வாழ்க்கையில் கழுதைப் பற்றி பேசாமல் இருக்க மட்டும் ஒருவரை திட்டவோ அல்லது அதன் சிறப்பு பற்றி கூறவும் அதனை நாம் தினமும் ஏதாவது ஒரு வகையில் பேசி விடுவோம்.
இந்த கழுதையின் சிறப்புகள் குறித்து இதில் நாம் பார்க்கலாம். குதிரை இனத்தை சேர்ந்தது தான் இந்த கழுதை. இது மாமிசத்தை உண்ணாது. கழுதை மிகவும் பொறுமையாக சாந்தமாக இருப்பதால்தான் இதனை பலரும் பயன்படுத்துகிறார்கள்.
கழுதைக்கு ரெசிஸ்டன்ஸ் பவர் அதிகம். அதனால்தான் வறண்ட பகுதியில் கூட சோர்வாகாமல் வேலை செய்கிறது. அதை மட்டுமல்லாமல் காற்றில் வாழும் கழுதைக்கு கொஞ்சம் மூர்க்கத்தனம் இருக்கும் ஆனால் வீட்டில் வாழும் கழுதைக்கு அந்த இடத்திற்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொள்ளும்.
பாரம் தூக்கி வேலை செய்தாலும் கழுதைகள் மிகவும் குறைவாக தான் சாப்பிடும். புல் தாவரங்கள் அதிகமாக சாப்பிடும். ஆனால் இந்த பேப்பர் சாப்பிடுவதை எப்படி பழக்கினார்கள் என்பது குறித்து தகவல் இல்லை.
50 வருடம் உயிர் வாழும்
அதிகமா சாப்பாடு கொடுத்து அதிக வேலை வாங்கலாம் என அதிகமாக உணவு கொடுத்தால் கழுதைக்கு லெமிடினிஸ் என்ற நோய் வந்து படுத்துவிடும்.
உண்மையில் குதிரைகளை விட கழுதைகள் வலிமையானது. அதுமட்டுமில்லாமல் சமூக விலங்குகள் மிகவும் புத்திசாலியான விலங்கு இந்த கழுதை.
சராசரியாக கழுதைகள் 50 வருடம் உயிர் வாழும். 25 வருடங்களுக்கு முன்பு சந்தித்த நண்பர்கள் மற்றும் நபர்களை இது ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும்.
என்னதான் கழுதைகள் அப்ராணி விலங்குகளாக இருந்தாலும் இது ஒரு தன்மான சிங்கம். தனக்கு பிடிக்கவில்லை என்றால் நாம் என்னதான் வற்புறுத்தினாலும் அடித்தாலும் அந்த இடத்தை விட்டு நகராது. அதை மீறி நாம் கட்டாயப்படுத்தினால் அது நம்மை உதைத்து விடும்.
அதுவே கழுதைக்கு ஒருவரை பிடித்து விட்டால் சோறு தண்ணீர் இல்லாமல் பாரம் தூக்கும். கழுதைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள் சில சிறப்பூட்டும் விஷயத்தை சொல்லி உள்ளார்கள் அதாவது கழுதைகள் எந்த விஷயத்தை செய்தாலும் அதை யோசித்து தான் செய்யுமாம். பாதுகாப்பு இல்லை என அது உணர்ந்தால் அந்த விஷயத்தை செய்யாது.
கழுதைகளுக்கு மழை என்றாலே பிடிக்காது
கழுதைகளுக்கு காதுகள் இரண்டும் பெரிதாக இருக்கும். அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது. ஒரு கழுதை வெட்ட வெளியில் கத்தினால் 60 மைலுக்கு அந்த புறம் இருக்கிற கழுதைக்கு அது கேட்குமாம். மற்றொரு விஷயம் காதுகள் பெரிதாக இருப்பதினால் உடம்பு சூடாகாமல் குளிர்ச்சியாக தன்னை பாதுகாத்துக் கொள்ளும்.
கழுதைகளுக்கு மழை என்றாலே பிடிக்காது. அதற்கு காரணம் மழையை தாங்கக்கூடிய தோல் அதற்கு இல்லை. அதனுடைய தோல் மிகவும் சென்சிட்டிவ். மழையில் நனைந்தால் தனது உடல் பாதிப்படையும் என்பது அதற்கு நன்றாகவே தெரியும்.
கழுதைகளுக்கு கூட்டமாக இருப்பதை விட தனியாக இருப்பது தான் பிடிக்கும் அதனால் தான் கூட்டத்தில் இருக்கும் கவிதைகளை விட தனியாக இருக்கும் கழுதைகள் சுறுசுறுப்பாக வேலை செய்யும்.அதைப் போல கழுதைகளுக்கு ஆடுகளுடன் இருப்பது பிடிக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்