தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Viral Video: மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்!

Viral Video: மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்!

May 06, 2024 08:37 PM IST Karthikeyan S
May 06, 2024 08:37 PM IST
  • கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மழை வேண்டி கழுதைகளுக்கு கிராம மக்கள் திருமணம் செய்து வைத்த சம்பவம் நடைபெற்றது. அன்னூர் அருகே உள்ள லக்கேபாளையம் கிராமத்தில் கடந்த பல மாதமாக மழை இல்லாமல் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பஞ்ச கல்யாணி திருமணம் செய்வது என கிராம மக்கள் முடிவு எடுத்தனர். அதன்படி, சுப்பிரமணியர் கோவிலில் கழுதைகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதில் லக்கேபாளையம் பகுதியை சேர்ந்த பெண் கழுதைக்கும், பக்கத்து கிராமமான கோவில்பாளையம் ஆண் கழுதைக்கும் மேள தாளம் முழங்க திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம் எனவும், கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் கடுமையான வறட்சி நிலவிய போது, கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்ததை தொடர்ந்து மழை பெய்தாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
More