தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Hair Fall : கொத்துக்கொத்தாக கொட்டும் முடி! மரபணுக்கள் முதல் மனஅழுத்தம் வரை எத்தனை காரணங்கள் பாருங்கள்!

Hair Fall : கொத்துக்கொத்தாக கொட்டும் முடி! மரபணுக்கள் முதல் மனஅழுத்தம் வரை எத்தனை காரணங்கள் பாருங்கள்!

Priyadarshini R HT Tamil

Jul 26, 2024, 06:25 PM IST

google News
Hair Fall : கொத்துக்கொத்தாக கொட்டும் முடி! மரபணுக்கள் முதல் மனஅழுத்தம் வரை எத்தனை காரணங்கள் பாருங்கள்!
Hair Fall : கொத்துக்கொத்தாக கொட்டும் முடி! மரபணுக்கள் முதல் மனஅழுத்தம் வரை எத்தனை காரணங்கள் பாருங்கள்!

Hair Fall : கொத்துக்கொத்தாக கொட்டும் முடி! மரபணுக்கள் முதல் மனஅழுத்தம் வரை எத்தனை காரணங்கள் பாருங்கள்!

திடீரென முடி கொட்டுகிறதா? அதற்கான காரணங்கள் இதுவாகத்தான் இருக்க முடியும். என்னவென்று தெரிந்துகொண்டு உடனடியாக தீர்வுகாண முயற்சியுங்கள்.

மரபணு கோளாறுகள்

தலைமுடி உதிர்வுக்கு மரபணு மாற்றங்களும் காரணமாக இருக்கலாம். ஆன்ரோடஜெனிடிக் அலோபெசியா என்பது ஆண் மற்றும் பெண்களின் தலையில் வழுக்கை விழுவதற்கு காரணமாக இருக்கலாம். இது வயதுக்கு வந்தவுடன் ஏற்படுகிறது. 

ஆண்களுக்கு தலைமுடி ஆங்காங்கே கொட்டி, வழுக்கை தெரிகிறது. பெண்களுக்கு தலை முடி குறைந்து, தலைமுடியின் வேர்க்கால்களில் ஆரோக்கியமின்மை காரணமாக வலுவிழக்கிறது.

ஹார்மோன்களில் மாற்றம்

கர்ப்ப காலம், குழந்தை பேறு, மெனோபாஸ், தைராய்ட் பிரச்னைகள் போன்றவையும் பெண்களுக்கு தலைமுடி கொத்துக்கொத்தாக கொட்டுவதற்கு காரணமாகின்றன. இதனால் உங்களுக்கு நிரந்தர மற்றும் அவ்வப்போது தலைமுடி உதிர்வு ஏற்படுகிறது. 

எடுத்துக்காட்டாக பெண்களுக்கு, குழந்தை பிறந்த பின் ஏற்படும் போஸ்ட்பார்ட்டம் நிலையில், ஈஸ்ரோஜெனில் ஏற்படும் கடும் சரிவாலும் தலைமுடி உதிர்வு ஏற்படுகிறது. குழந்தைகள் பிறந்த பின்னர், தலைமுடி உதிர்வு என்பது பெண்களுக்கு பொதுவாக ஏற்படும் பிர்சனையாகும். தைராய்ட் கோளாறுகள் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் ஆகியவை உங்களுக்கு தலைமுடி வளர்வதை தடுக்கிறது. இந்த ஹார்மோன்களால் ஏற்படும் பிரச்னைகள் என்பது பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது.

மன அழுத்தம்

உளவியல் மற்றும் உடல் ரீதியான அழுத்தங்களும், தலைமுடி உதிர்வுக்கு காரணமாகின்றன. டெலோஜென் எப்ஃளூவியம் என்ற தலைமுடி உதிர்வு நிலை உள்ளது. இதில், தலை முடியின் வேர்க்கால்கள், முன்னதாகவே ஓய்வெடுக்கும் நிலைக்கு சென்று, தலைமுடி அதிர்வை அதிகரிக்கின்றன. எனவே மனஅழுத்தம் அல்லது உடல் நிலை பாதிப்பு, பெரிய அறுவைசிகிச்சைகள் அல்லது உணர்வு ரீதியான அதிர்ச்சி ஆகியவை தலைமுடி உதிர்வுக்கு காரணமாக இருக்கலாம்.

ஊட்டச்சத்துக்கள் குறைபாடு

தலைமுடி உதிர்வுக்கு ஊட்டச்சத்துக்கள் குறைபாடுகள் காரணமாக இருக்கலாம். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் கிடைக்காமல் போனால், உங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஊட்டச்சத்துக்களான வைட்டமின் சி, டி, இரும்புச்சத்துக்கள், பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் தலைமுடி ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

தலைமுடியின் வேர்க்கால்களை அதிகரிக்க வைட்டமின் டி மிகவும் தேவையானது. இரும்புச்சத்துக்கள் புதிய வேர்க்கால்களுக்கு தேவையான ஆக்ஸிஜனை வழங்குகிறது. தலைமுடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் குறையும்போது, அது தலைமுடி ஆரோக்கியத்தை குறைக்கிறது. மேலும் தலைமுடி உதிர்வைக் குறைக்கிறது.

மருந்துகள்

சில மருந்துகளும் உங்களுக்கு தலை முடி உதிர்வை அதிகரிக்கும். சில மருந்துகள் பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்கும். குறிப்பாக புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்துகள், ஆர்த்ரிட்டிஸ், ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு பயன்படுத்தக்கூடிய மருந்துகள் உங்களுக்கு தலைமுடி உதிர்வை ஏற்படுத்தும். 

இதய நோய்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தத்துக்கு நீங்கள் உட்கொள்ளும் மருந்துகளும் உங்களுக்கு தலைமுடி உதிர்வை ஏற்படுத்தக் கூடியவைதான். 

புற்றுநோய் பாதித்தவர்களுக்கு வழங்கப்படும் கீமோதெரபி சிகிச்சைக்கு வழங்கப்படும் மருந்துகள், குறிப்பாக அவை தலைமுடி உதிர்வை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் மருந்து உங்களுக்கு தலைமுடி உதிர்வை ஏற்படுத்தினால், அது உங்களுக்கு தற்காலிகம்தான். உங்களின் சிகிச்சை முடிந்தவுடனே தலைமுடி மீண்டும் வளர்ந்துவிடும்.

மருத்துவ காரணங்கள்

பல்வேறு மருத்துவ காரணங்களும் தலை முடி உதிர்வுக்கு காரணமாகின்றன. ஆட்டோ இம்யூன் நோய்களும் முடி உதிர்வுக்கு காரணமாகின்றன. இந்த நிலையில் உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறன் தலைமுடியின் வேர்க்கால்களை பாதிக்கும். இதனால் உங்களுக்கு தலை முடி உதிர்வு ஏற்படும். 

இதனால் தலையில் குறிப்பிட்ட இடத்தில் ஏற்படும் முடி உதிர்வு, சிறிய வட்ட வடிவில் சில இடங்களில் முடியை கொட்டவைத்து அந்த இடத்தில் மட்டும் வழுக்கையை ஏற்படுத்திவிடும். வேர்க்கால்களில் தொற்று, சொரியாசிஸ், லுபஸ் போன்ற சரும நோய்களும் தலைமுடி உதிர்வுக்கு காரணமாகின்றன. இவை தலைமுடியின் வேர்க்கால்களை சேதப்படுத்துகின்றன.

புற்றுநோய் சிகிச்சைகள்

புற்றுநோய் சிகிச்சைகளான கீமோதெரபி மற்றும் ரேடியேசன் ஆகியவை தலைமுடி இழப்புக்கு காரணங்கள் ஆகின்றன. இந்த சிகிச்சைகள் செல்களை வேகமாக பிரியச் செய்கின்றன. இதனால் தலைமுடியின் வேர்க்கால்களில் உள்ள செல்களும் பகுப்படைகின்றன. 

இதனால் தலைமுடி விரைவாக உதிர்கிறது. சில நேரங்களில் கொத்துக்கொத்தாகவும் கொட்டுகிறது. புற்றுநோய் மருத்துவ சிகிச்சையால் முடிஉதிர்வு ஏற்படுவது தற்காலிகமானது. சில மாதங்கள் சிகிச்சைக்குப் பின்னர் தலைமுடி மீண்டும் வளர்ந்துவிடுகிறது.

அதிகப்படியான திடீர் உடல் எடையிழப்பு

விரைவான மற்றும் குறிபபிடும்படியான உடல் எடை இழப்பு உடலை நிலைகுலையச் செய்து, தலைமுடி உதிர்வுக்கு காரணமாகிறது. இது உடலில் ஏற்பட்ட திடீர் அழுத்தத்தால் ஏற்பட்ட உணவு மாற்றத்தாலும், ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறையாலும் தவிர்க்கப்பட்ட உணவுகளாலும் ஏற்படுகிறது. 

உடல் எடையிழப்பால் ஏற்பட்ட தலைமுடியிழப்பு என்பதும் தற்காலிகமானதுதான், நீங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் எடுத்துக்கொள்ள துவங்கும்போது, அது தானாகவே மீண்டும் வளர்ந்துவிடும்.

அறுவைசிகிச்சை மற்றும் நோய்

பெரிய அறுவை சிகிச்சைகள் அல்லது கடும் நோய் காரணமாக, உங்கள் தலைமுடியின் வேர்க்கால்கள் பாதிக்கப்படுகிறது. இதனால் நீங்கள் தற்காலிகமாக தலைமுடியை இழக்கிறீர்கள். அறுவைசிகிச்சைகளால் ஏற்பட்ட அழுத்தங்கள், மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் ஏற்பட்ட அழுத்தங்கள் அல்லது நோய்வாய்ப்பட்டது ஆகியவற்றால், வழக்கமான தலைமுடி உதிர்வு ஏற்படுகிறது. 

இதுபோன்ற தலைமுடியிழப்பு ஏற்படுவதால், சம்பவம் நடந்த சில காலங்கள் கழித்து துவங்கி, சில மாதங்கள் வரை இருக்கும். சில மாதங்களில் தலைமுடி மீண்டும் வளர்கிறது.

கர்ப்பம்

கர்ப்ப காலத்தில் உங்களின் ஈஸ்ட்ரோஜெனின் அளவுகள் அதிகரித்து, தலைமுடி வளரும் காலகட்டத்தை நீட்டிக்கிறது. இதனால், முடி வளர்கிறது. ஆனால், இதற்கு பின்னர் குழந்தை பிறந்து, ஈஸ்ட்ரோஜென் அளவுகள் குறைந்து, குறிப்பிட்ட அளவு தலைமுடி உதிர்வை ஏற்படுத்துகிறது. 

இந்த நிலை போஸ்ட்பார்டம் தலைமுடியிழப்பு என்று அழைக்கப்படுகிறது. தற்காலிகமாக சில காலங்கள் இருந்துவிட்டு, பின்னர் மீண்டும் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி