Children Immune Booster: குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அந்த 5 பொருட்கள் என்ன தெரியுமா?
Sep 20, 2024, 10:43 AM IST
Children Immune Booster: பழங்காலத்தில் இருந்தே சுக்கு,மிளகு, திப்பிலி, அஸ்வகந்தா, அதிமதுரம் ஆகிய ஐந்து பொருட்கள் நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பொருட்கள் நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இயல்பாகவே குழந்தைகளுக்கு எளிதாக பல நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருப்பதை இதற்கு முக்கிய காரணமாகும். மழை, வெயில் காலங்களில் பரவக்கூடிய பல நோய்கள் குழந்தைகளை அதிக அளவில் பாதிப்படைய செய்கிறது. இத்தகைய நோய்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதில் முக்கியமான ஒன்று மூலிகை வைத்தியம். பழங்காலத்தில் இருந்தே சுக்கு,மிளகு, திப்பிலி, அஸ்வகந்தா, அதிமதுரம் ஆகிய ஐந்து பொருட்கள் நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பல்வேறு நோய்களுக்கு மருந்து
சுக்கு,மிளகு, திப்பிலி, அஸ்வகந்தா, அதிமதுரம் ஆகிய ஐந்தையும் தொடர்ந்து சாப்பிடும் போது நுரையீரல் தொற்று முதல் ஜீரண மண்டல இயக்கம் வரை பல விதான நோய்களுக்கு தீர்வாக இவை உள்ளன. காய்ந்த இஞ்சியே சுக்கு என பயன்படுத்தப்படுகிறது. சுக்கு நுரையீரல் தொடர்பான இருமல், சளி மற்றும் வயிறு தொடர்பான தொல்லைகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது. பிரசவ காலங்களில் குமட்டலை குறைக்கவும், மாதவிடாய் காலங்களில் வலியை குறைக்கவும் பயன்படுகிறது.
சுக்கு,மிளகு,திப்பிலி எனும் மூன்று பொருட்களையும் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கும் போது அனைத்து விதமான சளி தொந்தரவுகளும் சரியாகி விடும். குறிப்பாக அஸ்வகந்தா, அதிமதுரம் ஆகிய பொருட்களை தினமும் சூடு நீரில் பொடியாக்கி கலக்கி குடித்தால் கரகர குரல் சரியாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி
குழந்தைகளுக்கு எளிதாக பரவும் நெஞ்சு சளி, வயிற்று தொற்று ஆகியவைகளில் இருந்து அதிமதுரம், சுக்கு, மிளகு திப்பிலி ஆகியவை நோய் எதிர்ப்பு காரணியாக உள்ளது. மேலே கூறிய ஐந்து பொருட்களையும் பொடியாக்கி பால், பனகற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பானத்தை தினமும் குழகதைகளுக்கு கொடுக்க வேண்டும்.
ஓடி விளையாடும் குழந்தைகளுக்கு எலும்புகள் வலிமையுடன் இருக்க வேண்டும். அவர்களது உடல் வலிமைக்கும், சோர்வை தவிர்க்கவும் இந்த பொருட்கள் உதவுகின்றன. அடிக்கடி நோய்வாய் படும் குழந்தைகளுக்கு இந்த ஐந்து பொருட்களையும் தொடர்ந்து கொடுப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்