Hemoglobin Level : உங்கள் உடலில் மளமளவென ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க வேண்டுமா? இதோ மிளகு லேகியம்!
Hemoglobin Level : உங்கள் உடலில் மளமளவென ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க வேண்டுமெனில், இதற்கு மிளகு லேகியம் உதவும்.
மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அதற்கு நாம் சில மருத்துவகுறிப்புக்களை, குறிப்பாக நமது வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே செய்யக்கூடியவற்றை தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
உங்கள் உடலில் ரத்தம் குறைந்துவிட்டதா? உடலின் ஹீமோகுளோபின் அளவை முதலில் பரிசோதித்து விடுங்கள். பின்னர் ஒரு மாதம் இந்த மிளகு லேகியத்தை சாப்பிட்டு வாருங்கள். பின்னர் உங்கள் உடலின் ஹீமோகுளோபின் அளவை சரிசெய்யுங்கள். உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அதிகரித்து இருக்கும்.
தேவையான பொருட்கள்
பால் – அரை லிட்டர்
மிளகு – ஒரு கப்
கட்டி கற்கண்டு – அரை கப்
நெய் – ஒரு கப்
செய்முறை
பாலை காய்ச்ச வேண்டும். பின்னர் அதில் மிளகை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும். மிளகு நன்றாக வேகவேண்டும். பின்னர் அதை எடுத்து நன்றாக ஆறவைத்து மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். பின்னர் அதை அடுப்பில் வைத்து கட்டி கற்கண்டு சேர்த்து கிண்ட வேண்டும்.
நன்றாக தளதளவென வரும்போது, அதில் நெய்யை ஊற்றி கிளறி இறக்கினால், சூப்பரான மிளகு லேகியம் தயார். இதை தினமும் காலையில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும், உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்துவிடும்.
உங்கள் உடலில் ஹீமோகுளோபின் குறைந்தால் என்ன நடக்கும்?
உங்கள் உடலின் ரத்தத்தில் உள்ள ரத்த சிவப்பணுக்களில் உள்ள புரதம்தான் ஹீமோகுளோபின். ரத்த சிவப்பணுக்கள் உங்கள் உடல் முழுவதும் ஆக்ஸிஜனை சுமந்து செல்கின்றன.
உங்கள் உடலில் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாவதில் சிக்கல் ஏற்பட்டால், உங்கள் ஹீமோகுளோபின் அளவு பாதிக்கப்படும். இதனால் புற்றுநோய் மற்றும் அனீமியா ஆகிய நோய்கள் ஏற்படுகிறது.
இந்த ரத்தச்சிவப்பணுக்கள் உடலில் கடத்தும் ஆக்ஸிஜன்கள்தான் உங்கள் உடலின் மற்ற செல்களுக்கு ஆற்றலை அளிக்கிறது. ஹீமோகுளோபின் அளவு குறைந்தால், உங்களுக்கு அனீமியா மற்றும் புற்றுநோய் ஆகியவை ஏற்படுகிறது.
நமது உடலில் ஹீமோகுளோபினின் பொதுவான அளவு என்ன?
ஆண்கள் உடலில் பொதுவாக 14 முதல் 17.5 வரை ஹீமோகுளோபின் அளவு இருக்க வேண்டும். பெண்களுக்கு 12.3 முதல் 15.3 வரை இருக்க வேண்டும். 13.5க்கு கீழ் குறைந்தால் ஆண்களுக்கு ஆபத்து. 12க்கு கீழ் குறைந்தால் பெண்களுக்கு ஆபத்து.
எதனால் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது?
உங்கள் உடலால் போதிய அளவு ரத்தச்சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய முடியாவிட்டால் உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது. உங்கள் உடல் எலும்பு மஜ்ஜைகளில் இருந்து உங்கள் உடல் ரத்த சிவப்பணுக்களையும், வெள்ளை அணுக்களையும் உற்பத்தி செய்கிறது.
சில நேரங்களில் உங்கள் எலும்பு மஜ்ஜைகள், போதிய ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதற்கு உதவ முடியாமல்போனால் உங்கள் உடலில் ரத்த சிவப்பணுக்கள் குறைகிறது.
உங்கள் உடல் தேவையான அளவு ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது. ஆனால், அது அழிந்துவிடுகிறது. மீண்டும் உற்பத்தி செய்வதற்கு இணையாக அது உடலில் இருக்க முடியாமல் போவதால் ரத்த சிவப்பணுக்கள் குறைகிறது.
விபத்து உள்ளிட்ட காரணங்களில் உடலில் அதிக ரத்த இழப்பு ஏற்படுவதால், ரத்தம் இழக்கும்போது, உங்கள் உடலில் இரும்புச்சத்தும் குறைகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிக உதிரப்போக்கு ஏற்பட்டால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைகிறது.
உடலுக்குள் ரத்தப்போக்கு ஏற்பட்டாலும், உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது. இதனால் ரத்த அல்சர் ஏற்படுகிறது.
உங்கள் உடல் இரும்புச்சத்தை உறிஞ்ச முடியாது. இதனால், உங்கள் உடலில் ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய முடியாது.
வைட்டமின் பி12, பி9 மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உங்கள் உடலுக்கு கிடைக்காவிட்டாலும் உடலில் ரத்தசிவப்பணுக்கள் குறையும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்