Dry Cough Home Remedy : வறட்டு இருமல், சளி, அலர்ஜியைப் போக்கும்! தினமும் பாலுடன் இதை மட்டும் சேர்த்து குடிங்க போதும்!
Mar 24, 2024, 12:27 PM IST
Dry Cough Home Remedy : வறட்டு இருமல், சளி, அலர்ஜியால் அவதிப்படுகிறீர்களா? தினமும் பாலுடன் இந்த பொருட்களை மட்டுத் சேர்த்து குடித்தாலே போதும். உங்களுக்கு தீர்வு கிடைக்கும்.
வறட்டு இருமல், சளி மற்றும் அலர்ஜியால் அவதிப்படுகிறீர்களா? அதற்கு ஒரு வாரம் இந்த பாலை மட்டும் குடித்து வர உங்களுக்கு பலன் கிட்டும்.
தேவையான பொருட்கள்
மல்லி விதை – ஒரு ஸ்பூன்
மிளகு – 5 மிளகு
பால் – அரை டம்ளர்
தண்ணீர் – அரை டம்ளர்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
பனங்கற்கண்டு – ஒரு ஸ்பூன்
செய்முறை
ஒரு உரல் அல்லது மிக்ஸியில் மல்லி விதைகள் மற்றும் மிளகு சேர்த்து நன்றாக இடித்துக்கொள்ள வேண்டும்.
பாலையும், தண்ணீரையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பால் கொதித்து வந்தவுடன் அதில் இடித்து வைத்துள்ள பொருட்களை சேர்க்க வேண்டும்.
பின்னர் மஞ்சள் தூளும் சேர்த்து, அதை நன்றாக குறைவான தீயில் 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு, அதன் சாறுகள் இதில் இறங்கவேண்டும்.
பின்னர் எடுத்து வடிகட்டி, அதில் பனங்கற்கண்டு சேர்த்து கலந்து பருகவேண்டும்.
சளி, இருமல் இருக்கும்போது பால் அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது. எனவே பாலில் அதிகம் தண்ணீர் சேர்க்க வேண்டும்.
அதேபோல், பனங்கற்கண்டு சேர்த்து பருக வேண்டும். அப்போதுதான் சளி, இருமல் குறையும். இது எவ்வித பக்கவிளைவும் இல்லாததால் இதை தினமுமே இரவு உறங்கச்செல்லும் முன் பருகலாம்.
பொதுவாகவே பனங்கற்கண்டை வாயில் போட்டு சுவைத்துகொண்டிருந்தால் சளி, இருமலுக்கு தீர்வு கொடுக்கும் அல்லது பனங்கற்கண்டுடன் மிளகு சேர்த்து மிக்ஸியில் அடித்து இருமல் மற்றும் சளி அதிகம் இருக்கும் நேரங்களில் எடுத்து வாயில் போட்டு சுவைக்க, அது சளியை வெளியேற்றிவிடும்.
குறிப்பாக இதுபோல் மருத்துவமாக ஒன்றை பயன்படுத்தும்போது கட்டாயம் வெள்ளைச்சர்க்கரையை தவிர்க்க வேண்டும். பனங்கற்கண்டு இல்லாதபட்சத்தில் நாட்டுச்சர்க்கரை கூட அளவாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
சளி, இருமல் அதிகம் இருக்கும்போது காலை, மாலை என இருவேளை ஒரு வாரம் கட்டாயம் சாப்பிடவேண்டும். மற்ற நாட்களில் ஒரு வேளை மட்டும் எடுத்துக்கொண்டால் போதும்.
நாள்பட்ட சளி, இருமல், வறட்டு இருமல், வானிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய சளி என அனைத்துக்கும் தீர்வுகொடுக்கும். தலைவலி, சளி, இருமல் என அனைத்தையும் குறைத்து, மலம் வழியாக அனைத்து சளியையும் வெளியேற்றிவிடும்.
மல்லி விதைகள் சேர்ப்பதால், இது உடல் சோர்வு மற்றும் சோம்பலையும் போக்கும். மல்லி விதைகள் உடலில் சோர்வை நீக்கக்கூடியவை, அதனால்தான் உடல் வலி, கை-கால் வலி அதிகம் இருந்தால் நாம் சுக்கு-மல்லி கஷாயம் எடுத்துக்கொள்கிறோம். இதனுடன் தேவைப்பட்டால் கொஞ்சம் சுக்குப்பொடியும் சேர்த்துக்கொள்ளலாம்.
பக்கவிளைவுகள் எதுவும் கொடுக்காத இந்த பாலை கட்டாயம் பருகி சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபங்கள்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்