தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Weather Update March 23 - Chennai Zonal Meteorological Center Weather Reports In Tamil Nadu

Weather Update: ’அதிக வெப்பநிலையால் அசௌகரியம் ஏற்படலாம்!’ சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Kathiravan V HT Tamil
Mar 23, 2024 01:56 PM IST

”Weather Update: கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி உள்ளது. குறிப்பாக ஈரோட்டில் அதிகபட்சமாக 39.0 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளது”

தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த 24 மணி நேர வானிலை

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி உள்ளது. குறிப்பாக ஈரோட்டில் அதிகபட்சமாக 39.0 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளது.

குறைந்த வெப்பநிலை அளவை பொறுத்தவரை சமவெளி பகுதியான நாமக்கலில் 18.5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் மலைப்பகுதியான கொடைக்கானலில் 8.6 டிகிரி செல்ஷிஸ் வெப்பநிலையும் பதிவாகி உள்ளது. 

இன்று காலை 8.30 மணி உடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளை பகுதியில் 52.4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கன்னியாகுமரி, காயல்பட்டினத்தில் தலா 5 மில்லிமீட்டரும், ஊத்து, தக்கலை, இரணியல், மாஞ்சோலை பகுதிகளில் தலா 2 மில்லி மீட்டரும், ராதாபுரம், குலசேகரபட்டினம், அடையாமடை, அழகரை எஸ்டேட், ஸ்ரீவைகுண்டத்தில் தலா ஒரு மில்லிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. 

திருநெல்வேலி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இயல்பை விட அதிக வெப்பநிலையும், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இயல்பை விட குறைந்த வெப்பநிலையும் பதிவாகி உள்ளது. 

இன்றைய வானிலை நிலவரம்

இன்று முதல் மார்ச் 29ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

மார்ச் 23 தேதி முதல் மார்ச் 27ஆம் தேதி வரை தமிழ்நாட்டுல் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மார்ச் 23 மற்றும் மார்ச் 24 தேதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது, ஓரிரு இடங்களில் அதிக அசௌகரியம் ஏற்படலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. 

கோடை வெப்பத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள்:-

தண்ணீர்

 • தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.
 • வெளியே செல்லும்போது தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லவும்.
 • தண்ணீர், எலுமிச்சை சாறு, தேன், இஞ்சி போன்றவை சேர்த்து பானங்கள் தயாரிக்கவும்.

உணவு

 • லேசான மற்றும் ஜீரணிக்க எளிதான உணவுகளை சாப்பிடவும்.
 • தர்பூசணி, வெள்ளரி, முலாம்பழம் உள்ளிட்ட நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், சாலட் போன்றவை அதிகம் சாப்பிடவும்.
 • வறுத்த உணவுகள், அதிக எண்ணெய் மற்றும் கொழுப்பு உள்ள உணவுகளைத் தவிர்க்கவும்.

ஆடை

 • வெளிர் நிற, இலகுவான பருத்தி ஆடைகளை அணியவும்.
 • தொப்பி, கண்ணாடி போன்றவை அணிந்து சூரிய ஒளியில் இருந்து தற்காத்துக் கொள்ளவும்.
 • வெயில் நேரத்தில் வெளியே செல்லும் நேரத்தை குறைக்கவும்.
 • சூரிய ஒளி அதிகம் இருக்கும் நேரத்தில் வெளியே செல்ல வேண்டியிருந்தால், நிழலில் நடக்கவும்.
 • தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிக்கவும்.
 • வயதானவர்கள் மற்றும் குழந்தைகளை சிறப்பு கவனத்தில் கொள்ளவும்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்