நீங்கள் கடும் அழுத்தத்தில் உழல்கிறீர்களா? உளவியல் ரீதியாக நீங்கள் அமைதியாக இருப்பது எப்படி?
Oct 25, 2024, 12:24 PM IST
நீங்கள் கடும் அழுத்தத்தில் உழல்கிறீர்களா? உளவியல் ரீதியாக நீங்கள் அமைதியாக இருப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் கடும் மன உளைச்சலில் இருக்கும்போதும் அமைதியாக இருப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். மௌனம் பலரின் மோசமான செயல்பாடுகளை சுட்டிக்காட்டும் ஆயுதம் ஆகும். நாம் இன்று ஒரு பரபரப்பான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அமைதி எப்போதும் நமக்கு எட்டாக்கனிதான். எனினும், இந்த சவாலான கால கட்டத்திலும் நாம் அமைதியாக வாழ கற்றுக்கொள்ளவேண்டும். அப்போதுதான் நமது உடல் மற்றும் மனதின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். நாம் இங்கு சில உளவியல் ரீதியான குறிப்புக்களை கொடுதுள்ளோம். இவை உங்களுக்கு நீங்கள் எத்தனை அழுத்தத்தில் இருந்தாலும் வாழ்வில் வெற்றி பெறுவதற்கு அமைதியாக இருப்பது எப்படி என்று உணர்த்தும்.
சூழலை ஏற்றுக்கொள்ளுங்கள்
உங்களுக்கு ஆதரவாக ஒரு விஷயமும் நடக்காதபோது, அதை எதிர்த்து போராடுவதற்கு பதிலாக நீங்கள் சூழல் மற்றும் மக்களை ஏற்றுக்கொள்ள பழகுங்கள். அவர்களை அவர்களாகவே ஒற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் முறையற்று இருந்தாலும், அதை கண்டுகொள்ளாதீர்கள். இதனால் உங்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம் குறையும். நீங்கள் பதற்றமின்றி செயல்பட முடியும்.
உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதில் கவனம்செலுத்துங்கள்
தவறு எது என்பதில் கவனம்செலுத்துவதற்கு பதில், உங்கள் கவனத்தை நீங்கள் கட்டுப்படுத்துவதிலும், உங்களை மேம்படுத்திக்கொள்வதிலும் செலுத்துங்கள். இது நீங்கள் ஒன்றுக்கு உதவாதவர் என்ற உணர்வைக் குறைக்கும்.
நேர்மறை எண்ணம்
நீங்கள் எப்போது நேர்மறை எண்ணத்துடன் இருக்கவேண்டும். இது உங்களுக்கு சவாலான காலகட்டங்களை சந்திக்க உதவும். உங்களின் பயத்தைப் போக்கி, உங்களை வலுவாக்கும். எனவே நீங்கள் நேர்மறையான வாசகங்களை பயன்படுத்துங்கள். இதனால் நீங்கள் மனஅமைதியுடனும், தன்னம்பிக்கையுடனும் நடந்துகொள்ள முடியும். அதற்கு நீங்கள் எப்போது, என்னால் செய்ய முடியும், நான் செய்யவேண்டும், நான் செய்தே ஆகவேண்டும் என்பவற்றை எப்போதும் நெஞ்சில் நிறுத்திக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு பல்வேறு நிலைகளிலும் உதவும்.
பெரிய இலக்குகளை சிறிதாகவும், சாதிக்க முடிந்ததாகவும் மாற்றுங்கள்
நீங்கள் உங்களுக்கு வேலைப்பளு அல்லது இலக்குகள் அதிகம் இருப்பதாக உணர்ந்தால், அவற்றை சிறியதாக்கிவிடுங்கள். சாதிக்க முடிந்த அளவுக்கு உடைத்துக்கொள்ளுங்கள். இதனால் உங்களால் அவற்றை எளிதாக முடிக்க முடியும். உங்களுக்கு உங்களின் வேலைகளை முடித்த மனநிறைவு கிட்டும்.
நேரத்தை கடந்து திட்டமிடுங்கள்
நீங்கள் கடைசி நேரத்தில் எந்த வேலையைச் செய்தாலும், அது உங்களுக்கு பல பிரச்னைகளை ஏற்படுத்துவதாக இருக்கும். எனவே நீங்கள் எப்போதும் தயாராயிருப்பது நல்லது. இதனால் உங்களின் இறுதி நேர டென்சன் குறைக்கப்படும். சூழலும் உங்கள் கட்டுக்குள் இருக்கும்.
அன்றாட வாழ்வில் கவனம்
நீங்கள் அனைத்திலும் கவனத்துடன் நடந்துகொள்வது மிகவும் முக்கியமாகும். இந்த நேரத்தில் என்ன நடக்கிறது என்பதை உற்று கவனியுங்கள். உங்கள் வார்த்தைகள் மற்றும் சிந்தனைகளில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். இது உங்களின் பயத்தையும், பதற்றத்தையும் குறைக்க உதவும்.
தியானம் பழகுங்கள்
நீங்கள் அன்றாடம் தியானம் பழகுவது உங்களின் மனதை அமைதிப்படுத்த உதவும். அது உங்களின் மனதை அமைதியாக்கி, உங்களின் கவனத்தை அதிகரிக்க உதவும். எனவே நீங்கள் எப்போதும் ஆழ்ந்து சுவாசிப்பதில் கவனம் செலுத்துங்கள். இதுவும் உங்களை அமைதிப்படுத்தும்.
ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள்
நீங்கள் சாப்பிடுவதில் சரிவிகித உணவு எடுத்துக்கொள்வது, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் சரியான நேரத்தில் உறங்குவது என உங்களின் மனஅழுத்தத்தை முறைப்படுத்தும் நடவடிக்கைகளில் கட்டாயம் ஈடுபடுவது அவசியம். இது நீங்கள் அழுத்தங்களையும், கடின காலங்களையும் எளிதாக கையாளத் தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ள உதவும்.
டாபிக்ஸ்