Palak Keerai Rice : பாலக்கீரை சாதம்! சுவை மற்றும் மணம் இரண்டும் மனதை அள்ளும் வகையில் செய்வது எப்படி?
Palak Keerai Rice : அதை வைத்தே எளிதாக செய்துவிடலாம். இதை மதிய உணவு மற்றும் இரவு உணவு இரண்டுக்கும் செய்துகொள்ளலாம். இதன் சுவை மற்றும் மணம் அனைவரையும் சுண்டு இழுக்கச் செய்யும் தன்மைகொண்டது. இதற்கு உருளைக்கிழங்கு வறுவல் அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸ் சிறந்த காம்பினேசனாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – ஒரு கப் (30 நிமிடம் ஊறவைத்தது)
பாலக்கீரை – ஒரு கொத்து
பூண்டு – 6 பற்கள்
இஞ்சி – ஒரு துண்டு (நறுக்கியது)
எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
பட்டை – 1
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
பிரியாணி இலை – 1
சீரகம் – அரை ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 4 (நறுக்கியது)
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
கஷ்மீரி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன்
செய்முறை -
பாஸ்மதி அரிசியை தண்ணீரில் 30 நிமிடம் ஊறவைக்கவேண்டும்.
தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தை எடுத்து கொதிக்க வைக்கவேண்டும்.
அதனுடன் ஊறவைத்த அரிசி மற்றும் உப்பு சேர்க்கவேண்டும்.
அரிசியை முழுமையாக சமைத்து, வடிகட்டி, தனியாக வைக்கவேண்டும்.
பாலக்கீரை இலைகளை கழுவி நறுக்கவேண்டும். அவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் பூண்டு பற்கள், இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் தண்ணீர் சேர்த்து அரைக்கவேண்டும்.
ஒரு அகன்ற கடாயை எடுத்து எண்ணெய், நெய் சேர்க்கவேண்டும்.
பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், மெல்லியதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து அரை நிமிடம் வதக்கவேண்டும்.
கீறிய பச்சை மிளகாயை சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வதக்கவேண்டும்.
கடாயில், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்க்கவேண்டும்.
பாலக்கீரை விழுது சேர்த்து 10 நிமிடம் சமைக்கவேண்டும்.
10 நிமிடம் கழித்து கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.
பாலக் மசாலாவுடன் சாதத்தை சேர்த்து மெதுவாக கலக்கவேண்டும். வறுத்த முந்திரி கொண்டு அலங்கரிக்கவேண்டும்.
சுவையான மற்றும் ஆரோக்கியமான பாலக்கீரை சாதம் சூடாக பரிமாற தயாராக உள்ளது. இதற்கு தொட்டுக்கொள்ள எந்த ஒரு கிரேவி அல்லது பச்சடி மற்றும் ரைத்தா கூட போதுமானது.
பாலக்கீரையில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளது. பாலக்கீரை அல்லது ஏதேனும் ஒரு கீரையை நாம் தினமுமே உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அது உடலுக்கு தேவையான இரும்புச்சத்துக்களை வழங்குகிறது. இதன் மருத்துவ நன்மைகள் தெரியாததால், பெரும்பாலானோர், இந்தக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதில்லை.
பாலக்கீரையில் சாதம் செய்து சாப்பிடும்போது அதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதற்கு வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது.
அதை வைத்தே எளிதாக செய்துவிடலாம். இதை மதிய உணவு மற்றும் இரவு உணவு இரண்டுக்கும் செய்துகொள்ளலாம். இதன் சுவை மற்றும் மணம் அனைவரையும் சுண்டு இழுக்கச் செய்யும் தன்மைகொண்டது. இதற்கு உருளைக்கிழங்கு வறுவல் அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸ் சிறந்த காம்பினேசனாக இருக்கும்.
நன்றி - ஹேமா சுப்ரமணியன்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்