தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Detox Drink : ஓரிரவு இவற்றை ஊறவைத்து, ஒரு நாள் முழுவதும் இந்த தண்ணீரை பருகினால் உடல் கழிவு கரைந்து ஓடும்!

Detox Drink : ஓரிரவு இவற்றை ஊறவைத்து, ஒரு நாள் முழுவதும் இந்த தண்ணீரை பருகினால் உடல் கழிவு கரைந்து ஓடும்!

Priyadarshini R HT Tamil

Jul 25, 2024, 03:00 PM IST

google News
Detox Drink : தண்ணீரில் ஓரிரவு சில பொருட்களை சேர்த்து ஊறவைத்து அடுத்த நாள் முழுவதும் அந்த தண்ணீரை மட்டும் பருகிவந்தால், உங்கள் உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் கரைந்து ஓடிவிடும்.
Detox Drink : தண்ணீரில் ஓரிரவு சில பொருட்களை சேர்த்து ஊறவைத்து அடுத்த நாள் முழுவதும் அந்த தண்ணீரை மட்டும் பருகிவந்தால், உங்கள் உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் கரைந்து ஓடிவிடும்.

Detox Drink : தண்ணீரில் ஓரிரவு சில பொருட்களை சேர்த்து ஊறவைத்து அடுத்த நாள் முழுவதும் அந்த தண்ணீரை மட்டும் பருகிவந்தால், உங்கள் உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் கரைந்து ஓடிவிடும்.

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுககு ஆளாக நேரிடுகிறது. 

இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

நமது உடலில் தேங்கும் கழிவுகளே நமது உடலில் ஏற்படும் பெரும்பாலான நாள்பட்ட நோய்களுக்கு காரணமாகின்றன. எனவே நமது உடலில் உள்ள கழிவுகளை அவ்வப்போது நீக்குவதுதான் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. நீங்கள் அதற்கு பெரியளவில் மெனக்கெட தேவையில்லை.

நாம் வீட்டில் அன்றாடம் நமது சமையலுக்கு பயன்படுத்தப்படும் உணவுப்பொருட்களை வைத்தே கழிவு நீக்க பானங்களை எளிதில் தயாரித்துவிடமுடியும். வெறும் தண்ணீரே நமது உடலில் உள்ள கழிவுகளை நீக்கக்கூடிய மருந்துதான்.

ஆனால், அந்த தண்ணீரில் நீங்கள் சில பொருட்களை சேர்த்தால், அந்த தண்ணீரே சிறந்த பலனைத்தரக்கூடிய ஒரு கழிவு நீக்க பானமாகிவிடும். அந்த எளிய பானத்தை வீட்டில் தயாரிப்பது எப்படி என்று தெரிந்துகொண்டு பலன்பெறுங்கள்.

தேவையான பொருட்கள்

தண்ணீர் – 2 லிட்டர்

வெள்ளரி பிஞ்சு – 1

எலுமிச்சை பழம் – 1

இஞ்சி – 2 இன்ச்

சப்ஜா விதைகள் – ஒரு ஸ்பூன்

புதினா இலைகள் – ஒரு கைப்பிடியளவு

செய்முறை

இரண்டு லிட்டர் தண்ணீரில், நறுக்கிய வெள்ளரி துண்டுகள், எலுமிச்சை பழம், இஞ்சி, சப்ஜா விதைகள் மற்றும் புதினா இலைகள் என அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு ஓரிரவு ஊறவைக்கவேண்டும்.

அடுத்த நாள் முழுவதும் உங்களுக்கு தண்ணீர் தேவைப்படும்போதெல்லாம் அந்த தண்ணீரை மட்டுமே பருகவேண்டும். அந்த தண்ணீரை மட்டுமே பருகினால் உங்கள் உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் கடகடவென வெளியேற்றப்படும்.

இந்த தண்ணீரை பருகும்போது உங்கள் உடலில் சிறுநீரை பெருகச் செய்கிறது. இது உங்கள் உடலில் உள்ள கழிவுகளை சிறுநீர் வழியாக வெளியேற்றிவிடுகிறது. மேலும் இவையனைத்தும் உடலுக்கு நன்மை தரக்கூடிய உணவுப்பொருட்கள் என்பதால் எவ்வித பக்கவிளைவையும் ஏற்படுத்துவதில்லை.

இது வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய கழிவு நீக்க பானம். உங்கள் உடலில் உள்ள கழிவுகள் நீங்கினாலே போதும் உங்களுக்கு நோய்கள் ஏற்படாமல் அது தடுக்கும். அதற்கு உதவும் இந்த பானத்தை வாரத்தில் ஒருமுறை அல்லது இருமுறை கட்டாயம் பருகி பலன்பெறுங்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி