தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Cold Home Remedy : சளியை அருகில் நெருங்கவிடாமல் விரட்டும் கஷாயம்! வாரத்தில் ஒரு நாள் எடுக்க நுரையீரல் வலுப்பெறும்!

Cold Home Remedy : சளியை அருகில் நெருங்கவிடாமல் விரட்டும் கஷாயம்! வாரத்தில் ஒரு நாள் எடுக்க நுரையீரல் வலுப்பெறும்!

Priyadarshini R HT Tamil

Jul 12, 2024, 10:16 AM IST

google News
Cold Home Remedy : சளியை அருகில் நெருங்கவிடாமல் அடித்து விரட்டும் கஷாயம். இதை வாரத்தில் ஒரு நாள் எடுத்தீர்கள் என்றால் நுரையீரல் வலுப்பெறும்.
Cold Home Remedy : சளியை அருகில் நெருங்கவிடாமல் அடித்து விரட்டும் கஷாயம். இதை வாரத்தில் ஒரு நாள் எடுத்தீர்கள் என்றால் நுரையீரல் வலுப்பெறும்.

Cold Home Remedy : சளியை அருகில் நெருங்கவிடாமல் அடித்து விரட்டும் கஷாயம். இதை வாரத்தில் ஒரு நாள் எடுத்தீர்கள் என்றால் நுரையீரல் வலுப்பெறும்.

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

காமன் கோல்ட் எனப்படும் சளி 

பொதுவாக சளி என்பது பெரும்பாலும் அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒன்றுதான். இதை வீட்டிலேயே குணப்படுத்தவும் முடியும். பெரும் பிரச்னையாகும்போது, மருந்து, மாத்திரைகள் தேவைப்படுகிறது. சளி மூக்கு முதல் தொண்டை வரை பாதிப்பை ஏற்படுத்துகிறது.

சளிக்கு வைரசும் காரணமாகிறது. சாதாரண சளி முதல் கொரோனா வரை ஏற்படுத்தக்கூடியது. ஆனால் இவை குணமாகும் தன்மைகொண்டிருந்தாலும், சில நேரங்களில் மரணம் வரை அழைத்துச் சென்றுவிடுகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். மிகவும் சிறிய குழந்தைகளுக்கு அடிக்கடி சளித்தொற்று ஏற்படுகிறது. ஒரு வாரம் அல்லது 10 நாளில் குணமாகிவிடும். புகைக்கும் பழக்கம் உடையவர்களுக்கு அறிகுறிகள் நீண்ட நாட்கள் இருக்கும். தானாகவே குணமாகாவிட்டால், மருத்துவரின் உதவி கட்டாயம் தேவை.

சளியின் அறிகுறிகள்

மூக்கு ஒழுகுதல்

தொண்டை கரகரப்பு

இருமல்

தும்மல்

சுகமின்மை

உடல் வலி மற்றும் லேசான தலைவலி

சில நேரங்களின் குறைவான அளவு காய்ச்சல்

எப்போது மருத்துவரிடம் செல்லவேண்டும்?

சளி மோசமாகும்போது

101.3 டிகிரிக்கு மேல் காய்ச்சல், மூன்று நாட்களை கடந்து தொடர்ந்தால்,

மீண்டும், மீண்டும் காய்ச்சல் வந்தால்,

மூச்சுத்திணறல்,

மூச்சுவிடுவதில் சிரமம்

தொண்டை கரகரப்பு, தலைவலி மற்றும் சைனஸ் வலி,

குழந்தைகளை எப்போது மருத்துவரிடம் அழைத்துச்செல்ல வேண்டும்?

100.4 டிகிரிக்கு மேல் தொடர்ந்து இருந்தால்,

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால்,

தலைவலி, தொண்டை வலி மற்றும் இருமல் தொடர்ந்து இருப்பது,

காது வலி,

மூச்சுத்திணறல்,

சாப்பிடப் பிடிக்காமை,

சோர்வு மற்றும் மயக்கம் ஏற்படுதல்,

நுரையீரலை பலப்படுத்தும் வெற்றிலைக் கஷாயம் செய்ய தேவையான பொருட்கள்

வெற்றிலை – 1

மிளகு – 10

கிராம்பு – 5

இஞ்சி – சிறிய துண்டு

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

பனங்கற்கண்டு – ஒரு ஸ்பூன்

செய்முறை

வெற்றிலை, மிளகு, கிராம்பு, இஞ்சி என அனைத்தையும் இடித்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் 200 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்த்து, அதில் இடித்த பொருட்கள், மஞ்சள் தூள் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக கலக்கவேண்டும்.

இதை அடுப்பில் வைத்து 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்கவிடவேண்டும். அப்போதுதான் அனைத்தின் சாறும், தண்ணீரில் நன்றாக இறங்கும்.

பின்னர் வடிகட்டி மிதமான சூட்டில் பருகவேண்டும்.

இதை வாரத்திற்கு ஒருமுறை பருகிவந்தால், உங்கள் நுரையீரல் வலுப்பெறும், சுவாச உறுப்புக்களின் ஆரோக்கியம் மேம்படும். சளி, இருமல், தும்மல் போன்ற சுவாசம் தொடர்பான பிரச்னைகள் தெறித்து ஒடும்.

இந்த கஷாயத்தை மூன்று வயத்துக்கு மேல் உள்ள அனைவரும் கட்டாயம் பருகலாம். எனவே இனிவரும் மழைக்காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது.

எனவே, அவற்றை எதிர்கொள்ள தயாராக இந்த கஷாயம் குடிக்கத் துவங்குங்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி