தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Chevrolet வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

Chevrolet வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

Aug 17, 2022, 12:38 PM IST

இந்தியா முழுவதும் செவ்ரோலெட் கார்களுக்கு 170 இடங்களில் சர்வீஸ் சென்டர் உள்ளன.
இந்தியா முழுவதும் செவ்ரோலெட் கார்களுக்கு 170 இடங்களில் சர்வீஸ் சென்டர் உள்ளன.

இந்தியா முழுவதும் செவ்ரோலெட் கார்களுக்கு 170 இடங்களில் சர்வீஸ் சென்டர் உள்ளன.

இந்தியாவில் பிரபலமாக இருந்த கார் நிறுவனங்களில் ஒரு காலத்தில் செவ்ரோலெட் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் பல மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. 

ட்ரெண்டிங் செய்திகள்

Cucumber Salad : சன் ஸ்ட்ரோக்கில் இருந்து தப்பிக்க வேண்டுமா? இந்த ஒரு சாலட் மட்டும் போதும்!

Gongura Pachadi : வாயில் எச்சில் ஊறவைக்கும் சுவையில் புளிச்ச கீரை பச்சடி செய்வது எப்படி? இதோ ரெசிபி!

Hair Care : பட்டுபோல் மின்னும் நீண்ட கூந்தல் வேண்டுமா? இதோ வீட்டிலே தயாரிக்கலாம் ஷாம்பூ!

Benefits of Papad : சைட் டிஷ் அல்லது ஸ்னாக்ஸ் தான்! ஆனால் எத்தனை நன்மைகள் பாருங்கள் இந்த அப்பளத்தில்!

ஆனால் கடும் போட்டியில் தாக்குப் பிடிக்க முடியாத செவ்ரோலெட் நிறுவனம் கடந்த 2017 ஆம் ஆண்டு கார் விற்பனையை இந்தியாவில் நிறுத்துவதாக அறிவித்தது. இந்நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமாகும்.

அதேசமயம் தங்கள் கார்களுக்கு ஷோரூம் சென்று சர்வீஸ் செய்து கொள்ளலாம் என வாடிக்கையாளர்களுக்கு இந்நிறுவனம் வசதியைச் செய்து கொடுத்தது. 

இது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த சேவையானது ACDelco என்ற ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட உள்ளது.

உங்களுக்கு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் செய்தி தொடர்பாளர் கொடுத்த அறிக்கையில், இந்த புதிய வசதி மூலம் செவ்ரோலெட் கார்களுக்கு தேவையான ஆக்சஸரீஸ்கள் கொடுக்கும் வசதி செய்து தரப்படும். 

இந்நிறுவனம் வாடிக்கையாளர்களை மையப்படுத்தி இயங்கி வருகிறது. அவர்களுக்குத் தேவையான சேவையையும் வசதிகளையும் செய்து தருவது எங்களது கடமையாகும்.

சமீபத்தில் எங்கள் நிறுவனத்தின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட Cruze காரில் ஏர்பேக் சரி செய்ய கார்கள் திரும்ப அழைக்கப்பட்டன பின்னர் அவை இலவசமாகச் சரி செய்யப்பட்டு எந்த கட்டணமும் இல்லாமல் வாடிக்கையாளர்களிடம் வழங்கப்பட்டது. 

இந்தியாவைப் பொறுத்தவரைப் பல இடங்களில் சேவை மையங்கள் அமைக்கப்பட்டு கார்களுக்கு தேவையான ஆக்சஸரீஸ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியா முழுவதும் செவ்ரோலெட் கார்களுக்கான சர்வீஸ் சென்டர்கள் 170 இடங்களில் இயங்கி வருகின்றன. மேலும் புது கார்களில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அதனை இலவசமாகச் செய்து தர நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.