தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  75th Independence Day: ஆஃபர்களை அள்ளிக் கொடுத்த ஸ்டார் ஹோட்டல்கள்!

75th Independence day: ஆஃபர்களை அள்ளிக் கொடுத்த ஸ்டார் ஹோட்டல்கள்!

Aug 15, 2022, 11:44 AM IST

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் இருக்கும் ஸ்டார் ஹோட்டல்கள் பல சலுகைகளை வழங்கி உள்ளன.
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் இருக்கும் ஸ்டார் ஹோட்டல்கள் பல சலுகைகளை வழங்கி உள்ளன.

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் இருக்கும் ஸ்டார் ஹோட்டல்கள் பல சலுகைகளை வழங்கி உள்ளன.

75 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் பல நிறுவனங்கள் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் பல சலுகைகளை வழங்கி வருகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Sensitive Teeth : பற்களில் கூச்சமா? இந்த எளிய வீட்டு தீர்வுகளே போதும்! உங்களுக்கு நிவாரணம் தரும்!

Parenting Tips : உங்கள் குழந்தைகளுக்கு நேர்மையை கற்றுக்கொடுக்காதீர்கள்; மாறாக இதை செய்யுங்கள்!

Benefits of Beetroot : மூளை மற்றும் குடல் ஆரோக்கியம்; மொனோபாஸ்க்கு பின் பலன் என பீட்ரூட்டின் நன்மைகள் என்ன?

Vata Remedy : வாத நீரை அடித்து வெளியேற்றும் தேநீர்! ஒரு வாரம் பருகினால் போதும்! மூட்டு வலி பறந்தோடும்!

அந்த வகையில் சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டல்கள் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் ஆஃபர்களை அறிவித்துள்ளனர். எந்தெந்த ஹோட்டல்கள் என்னென்ன சலுகைகளை வழங்கியுள்ளன என்பது குறித்து இங்கே காண்போம்.

கிண்டி ஐடிசி கிராண்ட் சோலா ஹோட்டல்

இந்த ஹோட்டல் தங்குமிடம் அனைத்து வகையான உணவுகள் போன்றவைக்குப் பல சிறப்பு சலுகைகளைக் கொடுத்துள்ளது. மெட்ராஸ் பெவிலியன், மெக்காரா எக்ஸ்பிரஸ் ஆகியவைக்குச் சென்றால் சீனியர் சிட்டிசன்களுக்கு சிறப்புச் சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு மொத்த பில்லில் 25 விழுக்காடு சலுகைகள் வழங்கப்படுகிறது. மதிய உணவு இரவு உணவு சுதந்திர தின பஃபே உணவு மெட்ராஸ் பெவிலியனில் வழங்கப்படுகிறது.

சென்னை சேமியாஸ் சாலை நோவோடெல்

இந்த ஹோட்டலில் தமிழ்நாடு கர்நாடகா கேரளா ஆகிய மூன்று மூன்று மாநிலங்களில் உணவு வகைகளைச் சலுகையுடன் வழங்குகிறது. தமிழ்நாடு மீன் குழம்பு, கேரள மாநிலத்தின் மீன் பொலிச்சது, கர்நாடகா மங்களூர் மீன் குழம்பு ஆகிய மூன்று மாநிலங்களில் சுவைகளைச் சிறந்த சமையல் கலைஞர்களைக் கொண்டு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சலுகை மதியம் 12.30 மணி முதல் மாலை 4 மணி வரை வழங்கப்படுகிறது. பாதுகாப்புப் பணியில் இருப்பவர்களுக்கு வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை இந்த சலுகைகள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் ஷெரட்டன் கிராண்ட் சென்னை ரிசார்ட் அண்ட் ஸ்பா

இந்த ஹோட்டல் சுதந்திர தின சிறப்புச் சலுகையாக, இந்திய நாடு முழுவதும் இருக்கும் அனைத்து வகையான ஸ்பெஷல் உணவுகளையும், லைவ் பேண்ட் கொண்டாட்டத்துடன் வழங்குகிறது. இந்த சலுகைகள் மதியம் 12.30 முதல் நாளை 4.00 மணி வரை வழங்கப்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்த உணவுகள் சிறப்பான உணவுகளும் அவை இங்கே கொடுக்கப்படுகின்றன.

ஃபோர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் சலுகை

இந்த ஹோட்டலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்குப் பலவிதமான இனிப்பு வகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் இருக்கும் வீரர்களுக்கு 20 விழுக்காடு தள்ளுபடி மதிய உணவில் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் மதிய உணவுக்கான நேரம் 12:30 மணி முதல் மூன்று முப்பது வரை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாபிக்ஸ்