தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Vata Remedy : வாத நீரை அடித்து வெளியேற்றும் தேநீர்! ஒரு வாரம் பருகினால் போதும்! மூட்டு வலி பறந்தோடும்!

Vata Remedy : வாத நீரை அடித்து வெளியேற்றும் தேநீர்! ஒரு வாரம் பருகினால் போதும்! மூட்டு வலி பறந்தோடும்!

Priyadarshini R HT Tamil

May 04, 2024, 12:28 PM IST

google News
Vata Remedy : வாத நீரை அடித்து வெளியேற்றும் தேநீர் எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
Vata Remedy : வாத நீரை அடித்து வெளியேற்றும் தேநீர் எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Vata Remedy : வாத நீரை அடித்து வெளியேற்றும் தேநீர் எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. 

இதனால், 30 முதல் 40 வயதுக்கு பின்னரே பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

நமது உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சமஅளவில் இருந்தால்தான் உடல் நல்ல முறையில் இயங்கும். இதில் ஒன்றில் மாற்றம் ஏற்பட்டாலும் உடல் சமநிலையை இழக்கும். பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

உடல் வலி, உடல் சோர்வு, பாதம் மற்றும் மூட்டுகளில் நீர்கோர்த்து, உடல் வலி, வீக்கம், எரிச்சல் போன்றவை ஏற்படும். முழங்கால் வலியும் ஏற்படும். அதற்கு காரணம் உடலில் வாத நீர் எனப்படும் கெட்டநீர் தங்கியிருப்பது. இதை எளிதாக வெளியேற்றக்கூடிய தேநீர் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

சோம்பு – ஒரு ஸ்பூன்

புதினா இலைகள் – 4

மிளகு – 2

இதில் வைட்டமின் ஏ, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன. நமது உடலில் உள்ள வாதநீரை எளிதாக கரைத்து வெளியேற்றும்.

செய்முறை

ஒரு டம்ளர் தண்ணீரில் சோம்பு, மிளகு மற்றும் புதினா இலைகள் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த தண்ணீரை கொதிக்கவைத்து, வடிகட்டி, தேவைப்பட்டால் தேன் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் பருகவேண்டும். காலை, மாலை இருவேளையும் குறைந்தபட்சம் ஒரு வாரம் பருகவேண்டும்.

அப்போதுதான் பாதங்களில் நீர் கோர்த்தல், பாத வலி, பாத எரிச்சல், மூட்டு வலி, மூட்டுகளில் நீர்கோர்த்தல், மூட்டு வீக்கம், முழங்கால் வலி என அனைத்தும் குணமாகும்.

இதை ஒன்றரை மாதம் வரை பருகலாம். இதை வாரத்தில் இரண்டு முறை எப்போது எடுத்துக்கொள்ள, உடலில் வாதம், பித்தம் மற்றும் கபத்தை சரிசெய்யும். வயிறு உப்புசத்தை குறைக்கும்.

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைக்கும். கெட்ட நீரை கரைத்து வெளியேற்றும். செரிமான மண்டலம் நன்முறையில் வேலை செய்யும்.

மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைக்க இஞ்சியை அரைத்து வலி உள்ள பகுதிகளில் தடவினால், அந்தப்பகுதிகளில் இருக்கக்கூடிய வாத நீரை இஞ்சி உறிஞ்சும்.

இஞ்சிக்கு பதில், சுக்குப்பொடியையும் பற்றுப்போடலாம். அதுவும் மூட்டுகளில் உள்ள வாத நீரை உறிஞ்ச உதவும். இந்த இரண்டையும் சேர்த்து செய்யும்போது உங்கள் உடலில் உள்ள மூட்டுவலிகள் அனைத்தும் குணமாகும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி