தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வீட்டில் தோட்டம் அமைக்கும் ஆர்வத்தில் செய்துவிடக்கூடிய சிறிய தவறுகள் என்னவென்று பாருங்கள்!

வீட்டில் தோட்டம் அமைக்கும் ஆர்வத்தில் செய்துவிடக்கூடிய சிறிய தவறுகள் என்னவென்று பாருங்கள்!

Priyadarshini R HT Tamil

Oct 12, 2024, 07:00 AM IST

google News
வீட்டில் தோட்டம் அமைக்கும் ஆர்வத்தில் செய்துவிடக்கூடிய சிறிய தவறுகள் என்னவென்று பாருங்கள். அவற்றைக் களைந்தாலே வீட்டின் தோட்டம் சிறப்பாக இருக்கும்.
வீட்டில் தோட்டம் அமைக்கும் ஆர்வத்தில் செய்துவிடக்கூடிய சிறிய தவறுகள் என்னவென்று பாருங்கள். அவற்றைக் களைந்தாலே வீட்டின் தோட்டம் சிறப்பாக இருக்கும்.

வீட்டில் தோட்டம் அமைக்கும் ஆர்வத்தில் செய்துவிடக்கூடிய சிறிய தவறுகள் என்னவென்று பாருங்கள். அவற்றைக் களைந்தாலே வீட்டின் தோட்டம் சிறப்பாக இருக்கும்.

உங்கள் வீட்டில் சிறிய தோட்டம் அமைக்கும் ஆர்வத்தில் நீங்கள் செய்யக்கூடிய தவறுகள் என்னவென்று தெரிந்துகொள்வது முதலில் அவசியம். உங்கள் வீட்டின் முன்புறத்திலோ அல்லது கொல்லையிலோ அல்லது எங்கேனும் ஓரிடத்தில் அழகிய தோட்டம் அமைத்து அதை பராமரிப்பது உங்களுக்கு பிடித்த விஷயமாக இருக்கும். ஆனால் அதைச் செய்வது எளிதல்ல. அழகிய பசுமையான தோட்டம் மற்றும் வண்ணமயமான பூக்கள் இருந்தால் அந்த இடமே பார்ப்பதற்கு எத்தனை ரம்யமாக இருக்கும்? அதற்கு அதிக முயற்சிகள் தேவை. அதற்கு நீங்கள் நிறைய விஷயங்களை மனதில் கொள்ளவேண்டும். இதற்கு கொஞ்சம் சிரமமான காரியம்தான். ஆனால் நீங்கள் சில வழிமுறைகளை கற்றுக்கொண்டுவிட்டால் உங்கள் வீட்டில் அழகிய தோட்டம் இருக்கும். ஆனால் சிலர் தெரியாமல் செய்யும் சிறிய தவறுகள் கூட தோட்டம் முழுமையையும் பாதித்துவிடும். இந்த தவறுகளை தவிர்த்துவிட்டால் போதும். இது பொதுவான தவறுகள்தான். நீங்கள் அவை என்னவென்று தெரிந்துகொண்டு தவிர்த்துவிடுங்கள்.

தண்ணீர்

நீங்கள் உங்கள் தாவரங்களுக்கு தண்ணீர் ஊற்றுகிறீர்கள் என்றால், அதன் வேர்களில் ஊற்றவேண்டும். மேல்புறத்தில் மட்டும் ஊற்றினால் தாவரங்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காது. தாவரங்களின் வேர்களில் தண்ணீர் ஊற்றவேண்டும். நீங்கள் தண்ணீர் ஊற்றும் முறை, நேரம் ஆகியவை மிகவும் முக்கியம். வெயில் நேரத்தில் தண்ணீர் ஊற்றும்போது உங்களின் தாவரங்கள் ஈரப்பதத்தை இழப்பதுடன் சேதமடைகின்றன. உங்கள் தாவரங்களுக்கு காலையில் அல்லது இரவு நேரத்தில் தண்ணீர் ஊற்றுங்கள்.

அதிகப்படியான தண்ணீர்

தாவரங்களும் ஒரு உயிர்தான். அவற்றுக்கு காற்று வேண்டும். அதன்மூலம்தான் அவை மற்ற உயிர்களைப்போல் சுவாசிக்க முடியும். எனவே மண்ணிலும் அவற்றுக்கு காற்றுவேண்டும். எனவே அந்த காற்று துவாரங்களில் நீங்கள் தண்ணீர் ஊற்றி நிரப்பினால் உங்கள் தாவரங்கள் மூழ்கிவிடும். நீங்கள் அதிக தண்ணீர் ஊற்றக்கூடாது. அவைகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் ஊற்றவேண்டும். அவற்றுக்கு சுவாசிக்க நேரம் ஒதுக்கவேண்டும்.

வெட்டுதல்

அடர்ந்து படர்ந்து வளரும் செடிகளை அடிக்கடி வெட்டவேண்டும். குறிப்பாக இறந்த இலைகளை வெட்டி நீக்கிவிட்டால்தான், அது தாவரங்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும். செடிகள் ஆரோக்கியமாக வளரவேண்டுமெனில், அவற்றை முறையாகப் பராமரிக்கவேண்டும். அப்போது, அவை நன்றாக வேர்பிடித்து தண்டுகள் வலுவாகி, நல்ல பழங்களைத்தரும். தாவரங்களை முறையாகப் பராமரிப்பதன் மூலம் ஆரோக்கியமான தோட்டத்தை வளர்த்தெடுக்க முடியும்.

வானிலை

நீங்கள் தோட்டம் அமைக்க விரும்பினால் வானிலை மிகவும் முக்கியம். குறிப்பாக செடிகளை நடும்போது சரியான நேரத்தில் நடவேண்டும். செடிகளின் ஒவ்வொரு காலகட்டத்திலும் வானிலை முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் செடிகளை வளர்க்கக்கூடிய வானிலை அமைவது முக்கியம். அப்போதுதான் செடிகள் செழித்து வளரும். எனவே நிபுணர்களின் அறிவுரையைப் பெறுவது மிகவும் அவசியம். அதுகுறித்த ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளவேண்டும். தவறான காலநிலை செடிகளின் வளர்ச்சியை பாதிக்கும்.

தவறான இடம்

சில தாவரங்களுக்கு நேரடி சூரிய ஒளி தேவைப்படும், அப்போதுதான் அவை ஆரோக்கியமாக வளரும். சிலவற்றுக்கு, நிழல் தேவைப்படும். எனவே எந்தச் செடிக்கு நேரடி சூரிய ஒளி தேவை, எதற்கு மறைமுக சூரியஒளி தேவை என்பதை பார்த்து நீங்கள் செடிகளை நடவேண்டும். அப்போதுதான், உங்களுக்கு நல்ல பலன் கிட்டும். இல்லாவிட்டால் அவற்றால் செழித்து வளர முடியாமல் போய்விடும். ஒரு தாவரம் செழித்து வளரவேண்டுமெனில் அதற்கு சரியான அளவு சூரிய ஒளி தேவை.

இதனுடன், ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு செடிகளை வைப்பதும் தவறான செயலாகும். அவற்றுக்கு தேவையான அளவு இடம் கொடுக்கவில்லையென்றால், அவை செழித்து வளராது. நோய்வாய்ப்படும். இந்த நோய் ஒரு தாவரத்தில் இருந்து மற்றொரு தாவரத்துக்கு எளிதில் பரவும். இது அந்த தோட்டத்தையே காலி செய்துவிடும். செடிகளை ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக வளர்க்கும்போது அது அவை செழித்து வளர இடமளிக்காது. அவற்றுக்கு இடையில் இடம் கொடுப்பது மிகவும் முக்கியமானதாகும்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை