தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Brinjal Podi Curry : கத்தரிக்காய் பொடிக்கறி, தயிர் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அடடா சொல்லவைக்கும்!

Brinjal Podi Curry : கத்தரிக்காய் பொடிக்கறி, தயிர் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அடடா சொல்லவைக்கும்!

Priyadarshini R HT Tamil

Jul 29, 2024, 09:39 AM IST

google News
Brinjal Podi Curry : கத்தரிக்காய் பொடிக்கறி, தயிர் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அடடா சொல்லவைக்கும். இங்கு கொடுக்கப்பட்டுள்ளதைப்போல் செய்து அசத்துங்கள்.
Brinjal Podi Curry : கத்தரிக்காய் பொடிக்கறி, தயிர் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அடடா சொல்லவைக்கும். இங்கு கொடுக்கப்பட்டுள்ளதைப்போல் செய்து அசத்துங்கள்.

Brinjal Podi Curry : கத்தரிக்காய் பொடிக்கறி, தயிர் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அடடா சொல்லவைக்கும். இங்கு கொடுக்கப்பட்டுள்ளதைப்போல் செய்து அசத்துங்கள்.

கத்தரிக்காயில் செய்யக்கூடிய சுவையான உணவுகளுள் ஒன்று கத்தரிக்காய் பொடிக்கறி. இதை சாம்பார், ரசம் மற்றும் தயிர் சாதத்துடன் சாப்பிட சுவை அள்ளும்.

தேவையான பொருட்கள்

மசாலாப் பொடி செய்ய

வரமல்லி – ஒரு டேபிள் ஸ்பூன்

கடலை பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்

உளுந்து – அரை டேபிள் ஸ்பூன்

கடலை – ஒரு டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

வர மிளகாய் – 4

எள்ளு – ஒரு டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், அதில் வரமல்லி, கடலை பருப்பு, உளுந்து, கடலை, கறிவேப்பிலை, வரமிளகாய், எள்ளு என அனைத்தையும் சேர்த்து வறுத்துக்கொள்ளவேணடும்.

பின்னர் ஆறவைத்து காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.

கத்தரிக்காய் பொடிக் கறி செய்ய தேவையான பொருட்கள்

எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு – அரை ஸ்பூன்

உளுந்து – அரை ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

கத்தரிக்காய் – 8

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

புளிக்கரைசல் – கால் கப்

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும். பின்னர் அலசி நீளவாக்கில் நறுக்கிய கத்தரிக்காய்களை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக பிரட்டி புளித்தண்ணீரை கொட்டி நன்றாக கொதிக்கவிடவேண்டும். 

கடைசியாக அரைத்து வைத்துள்ள மசாலாப்பொடியை சேர்த்து நன்றாக பிரட்டி எடுத்தால் சூப்பர் சுவையில் கத்தரிக்காய்ப் பொடி தயார். இதை தயிர் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் சுவை அள்ளும்.

குறிப்பு

பொடிக்கு வறுக்கும்போதே ஒரு கொட்டை புளியை சேர்த்து வறுத்து அரைத்து பொடித்துக்கொண்டும் பயன்படுத்தலாம் அல்லது கரைத்து தண்ணீராக வேகவிடலாம்.

பொடியில் சேர்த்து அரைக்கும்போது கத்தரிக்காய் வேக கால் டம்ளர் தண்ணீர் அல்லது தேங்காய்ப்பாலும் சேர்க்கலாம்.

பொடி அரைக்கும்போது, ஒரு ஸ்பூன் கொப்பரை தேங்காய் துருவல் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்.

கத்தரிக்காயின் நன்மைகள்

கத்தரிக்காய் சாம்பாருக்கு நல்ல சுவையை அளிக்கக்கூடிய காய்களுள் ஒன்று. கத்தரிக்காய், முருங்ககைக்காய், மாங்காய் இந்த மூன்று காய்களையும் சேர்த்து வைக்கக்கூடிய சாம்பார் மிகவும் சுவையானதாக இருக்கும்.

அதனுடன் பலாக்கொட்டையும் சேர்த்துக்கொள்ள எந்தவிட மசாலாக்களும் சேர்க்காமலே சாம்பார் சுவை அள்ளும்.

இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆன்டிஆக்ஸ்டன்ட்கள் நிறைந்துள்ளது. இது உடலை பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது. புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற நீண்ட கால நோய்கள் வராமல் தடுக்கும்.

ஆந்தோசியனின் என்பது கத்தரிக்காயில் அதிகம் உள்ளது. இதில் உள்ள இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்தான் கத்தரிக்காய் இந்த நிறத்தை கொடுக்கின்றன. இது பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது.

இதய நோய்கள் வராமல் காக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. எடை குறைப்பில் உதவுகிறது. புற்றுநோய்க்கு எதிராக போராடுகிறது.

இதை எளிதாக உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதை வறுத்து சாப்பிடலாம். சாம்பார் வைத்து சாப்பிடலாம். சாம்பாரில் சேர்ததால் கூடுதல் சுவையை கொடுக்கிறது.

கத்தரிக்காய் சிலருக்கு சரும அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே சரும பிரச்னைகள் உள்ளவர்கள் கத்தரிக்காயை அடிக்கடி உணவில் சேர்க்கக்கூடாது.

கத்தரிக்காய் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும் வாய்ப்பு உள்ளவர்களும் கத்தரிக்காயை உணவில் அடிக்கடி எடுத்துக்கொள்ளக்கூடாது. மற்றபடி அனைவரும் வாரத்தில் ஒருமுறை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய காய்தான் கத்தரிக்காய்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை