தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  துவர்க்கும் என்று தூக்கிவீசும் ஆரஞ்சு பழத்தின் விதைகள் உடலுக்குத் தரும் அதிசய நற்குணங்களைப் பாருங்கள்!

துவர்க்கும் என்று தூக்கிவீசும் ஆரஞ்சு பழத்தின் விதைகள் உடலுக்குத் தரும் அதிசய நற்குணங்களைப் பாருங்கள்!

Priyadarshini R HT Tamil

Oct 12, 2024, 10:00 AM IST

google News
துவர்க்கும் என்று தூக்கிவீசும் ஆரஞ்சு பழத்தின் விதைகள் உடலுக்குத் தரும் அதிசய நற்குணங்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
துவர்க்கும் என்று தூக்கிவீசும் ஆரஞ்சு பழத்தின் விதைகள் உடலுக்குத் தரும் அதிசய நற்குணங்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

துவர்க்கும் என்று தூக்கிவீசும் ஆரஞ்சு பழத்தின் விதைகள் உடலுக்குத் தரும் அதிசய நற்குணங்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் ஆரஞ்சு பழத்தை வாங்கி சாப்பிடும்போது, அதன் சுளைகளை மட்டும்தான் பிரதானமாக உட்கொள்வீர்கள். அதன் தோல் மற்றும் விதைகளிலும் எண்ணற்ற நன்மைகள் உள்ளது என்று தெரிந்துகொண்டால், அவற்றை தூக்கி வீசமாட்டீர்கள். உங்களின் சருமத்தை அது பாதுகாக்கிறது. உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைக் காக்கிறது. ஆரஞ்சு விதைகளில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் ஒளிந்துள்ளது. அவை முழுவமையும் தெரிந்துகொண்டால் நீங்கள், அவற்றை தேடிச்செல்வீர்கள் அல்லது தூக்கி வீசமாட்டீர்கள். ஆரஞ்சு பழத்தின் விதைகளில் உள்ள அற்புத குணங்கள் என்னவென்று பாருங்கள். ஆரஞ்சு பழத்தின் விதைகளை நாம் பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை. ஆனால் நாம் வேண்டாம் என்று தூக்கிவீசும் இந்த விதைகளில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது உங்களுக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கிறது. உங்கள் சருமத்தை காக்கிறது. உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. ஆரஞ்சு பழத்தின் விதைகள் உங்களுக்கு ஆச்சர்யமூட்டும் நன்மைகளைக் கொடுக்கின்றன. ஆரஞ்சு பழத்தின் விதைகள் தரும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

ஆரஞ்சு பழத்தின் விதைகள் அள்ளித்தரும் ஆரோக்கிய நன்மைகள்

ஆன்டிஆக்ஸ்டன்ட்கள் நிறைந்தது

ஆரஞ்சு பழத்தின் விதைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் உடல் ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்து போராட உதவுகிறது. ஃப்ரி ராடிக்கல்கள் உங்கள் உடலில் உள்ள செல்களை அழித்து வீக்கம், வயோதிகம், நோய் தொற்றுகள் ஏற்பட காரணமாகின்றன. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உங்கள் உடலில் உள்ள நச்சு மாலிக்யூல்களை சமப்படுத்துகின்றன. இது உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தையும், உங்கள் உடல் மீண்டு எழும் திறனையும் கொடுக்கிறது. ஆரஞ்சு பழத்தின் விதைகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது, உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் இயற்கையான முறையில் மேம்படுத்துவதாகும்.

நோய் எதிர்ப்பு மண்டலம்

ஆரஞ்சு பழத்தின் விதைகளில் எண்ணற்ற முக்கிய ஊட்டச்சத்துக்களான வைட்டமின் சி போன்றவை உள்ளன. இது உங்கள் உடலுக்கு நோய் எதிர்ப்புத்தன்மையை அளிக்கக்கூடிய திறன் கொண்டது. எனவே ஆரஞ்சு பழத்தின் விதைகளை நீங்கள் உட்கொள்வதாலும், உங்கள் உடலுக்கு கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. இதனால் உங்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொற்றுக்களில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது. ஆரஞ்சு பழத்தின் விதைகளில் உங்கள் உடலின் திறனை அதிகரிக்கக் கூடிய மினரல்கள் உள்ளன. இதனால் உங்கள் உடல் தொற்றுக்களை எதிர்த்து போராடுகிறது.

செரிமானம்

ஆரஞ்சுப்பழத்தின் விதைகளில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இவை உங்களுக்கு செரிமானம் சிறப்பாக நடைபெற உதவுகிறது. மலச்சிக்கலைத் தடுக்கிறது. நார்ச்சத்துக்கள் குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. உங்கள் குடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்களை வழங்குகின்றன. ஆரோக்கியமான செரிமான மண்டலம் உங்களின் ஆற்றல் அளவை நாள் முழுவதும் பராமரிக்க தேவையான ஒன்று.

இதய ஆரோக்கியம்

ஆரஞ்சு பழத்தின் விதைகளில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள், இதய ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது. இந்த விதைகளில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. இது உங்கள் உடலில் கெட்ட கொழுப்புக்களை குறைக்க உதவுகிறது. இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. இந்த விதைகளில் உள்ள ஆரோக்கிய கொழுப்புக்களை உட்கொள்வதை நீங்கள் வழக்கமாக்கிக்கொண்டால், அது உங்கள் இதய ஆரோக்கியத்துக்கும், இதயத்தை வலுவாக்கவும் உதவும். இது ரத்தத்தை நன்றாக பம்ப் செய்ய உதவுகிறது.

ஆரோக்கியமான சருமம்

உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க விரும்பினால், ஆரஞ்சு பழத்தின் விதைகள் அதற்கு கட்டாயம் உதவும். மாசு, சூரிய ஒளி போன்ற சுற்றுச்சூழல் பாதிப்புக்களால் ஏற்படும் சரும சேதத்தை ஆரஞ்சு விதைகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தடுக்கும். இதில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள், கொலாஜென் உற்பத்தியைத் தடுக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் உங்கள் சருமத்தை இறுக்கமாகவும், மிருதுவாகவும், இளமை தோற்றத்துடனும் வைத்துக்கொள்கின்றன. இந்த விதைகளைப் பயன்படுத்தி உங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தினால், அது உங்கள் சருமத்துக்கு நல்ல பொலிவைத்தரும்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை