Benefits of Prunes: மலச்சிக்கல், தலைமுடி உதிர்வை விரட்டும் கொடிமுந்திரி..! வேறு நன்மைகள் என்ன?
- மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள் அதிக நார்ச்சத்து மிக்க உணவுகளை சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனால் உடலின் நிரேற்றமானது தக்க வைக்கப்பட்டு குடல் இயக்கம் சீராக இருக்கும்
- மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள் அதிக நார்ச்சத்து மிக்க உணவுகளை சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனால் உடலின் நிரேற்றமானது தக்க வைக்கப்பட்டு குடல் இயக்கம் சீராக இருக்கும்
(1 / 6)
கோடை காலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவது பொதுவான விஷயமாகவே இருக்கிறது. அதிக வெப்பம் காரணமாக உடலில் நீர் இழப்பு ஏற்படும். அதேபோல் தவறான உணவு தேர்வுகள் குடல் இயக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் மலச்சிக்கலும் உண்டாகும். இதிலிருந்து விடுபடுவதற்கான சிறந்த உணவாக கொடிமுந்திரி உள்ளது
(2 / 6)
ஊட்டச்சத்துகளின் களஞ்சியமாக இருந்து வரும் கொடி முந்திரியில் செம்பு, மெக்னீசியம், வைட்டமின் கே போன்ற சத்துக்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் உடல் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாததாக உள்ளது.
(3 / 6)
அதிக அளவில் நார்ச்சத்து கொண்ட உணவாக கொடிமுந்திரி உள்ளது. இதில் இருக்கும் சார்பிடோல் என்ற குடலுக்கு நன்மை தரும் சேர்மானம் மலச்சிக்கலை போக்க உதவுகிறது.(Pixabay)
(4 / 6)
கொடிமுந்திரியில் இருக்கும் நார்ச்சத்துகள் வயிறு இயல்பாக செயல்பட உதவுகிறது. இதனால் குடல் திசுக்கள் வலுவாக செயல்பட்டு சீராக செரிமானமும் மேம்படுகிறது
(5 / 6)
கொடி முந்திரியில் இருக்கும் பாலிபினால்கள் ஆன்டிஆக்ஸிடன்ட்களாக செயல்பட்டு அழற்சியை குறைத்து, எலும்புகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
மற்ற கேலரிக்கள்