Gardening Tips: வீட்டு தோட்டத்தின் செடி உலர்ந்தும், காய்ந்தும் போகாமல் இருக்க எளிய டிப்ஸ்
- அதிகரித்து வரும் வெப்பநிலை மனிதர்களை மட்டுமல்ல, தாவரங்களையும் வெகுவாக பாதிக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலால் பச்சை செடிகள் காய்ந்து கருகினால் அதை புத்துயிர் பெற வைப்பது எப்படி என்பதை பார்க்கலாம்
- அதிகரித்து வரும் வெப்பநிலை மனிதர்களை மட்டுமல்ல, தாவரங்களையும் வெகுவாக பாதிக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலால் பச்சை செடிகள் காய்ந்து கருகினால் அதை புத்துயிர் பெற வைப்பது எப்படி என்பதை பார்க்கலாம்
(1 / 7)
உங்கள் வீட்டுத் தோட்டத்தின் வளர்க்கும் செடிகள் அதிகரிக்கும் வெயில், வெப்பம் காரணமாக காய்ந்து போகும் நிலை ஏற்பட்டால், பதட்டப்படுவதற்குப் பதிலாக, இந்த எளிய டிப்ஸை பின்பற்றலாம். பணம் செலவில்லாமல் எளிதில் அதை மீண்டும் புத்துயிர் பெற வைக்கலாம்
(2 / 7)
வெப்பத்தால் காய்ந்து போகும் செடிகளை குளிர்விக்கவும், சமையலறையில் உள்ள பொருள்கள் சிலவற்றை பயன்படுத்தினலே பலனை பெறலாம்
(3 / 7)
இலவங்கப்பட்டையை பொடியாக்கி காய்ந்து போகும் தாவரத்தின் மீது தூவலாம். இலவங்கப்பட்டை தாவரத்தின் வேர்களை விரைவாக வலுப்படுத்த உதவுகிறது. செடிகள் வாடாமல் இருக்க, செடியின் வேரில் இலவங்கப்பட்டை பொடியை தூவிவிடலாம்
(4 / 7)
உங்கள் தாவரங்கள் திடீரென உலர ஆரம்பித்திருந்தால், இது தாவரங்களில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இருக்கலாம். இந்த சிக்கலை சமாளிக்க, முதலில், கத்தரிக்கோல் உதவியுடன் தாவரத்தின் உலர்ந்த கிளைகள் மற்றும் இலைகளை வெட்டி அகற்றவும். அவ்வப்போது சீரமைப்பதன் மூலம், இறந்த செடி மீண்டும் உயிர் பெறத் தொடங்கிவிடும்
(5 / 7)
உங்கள் தோட்டத்தின் பசுமையை பராமரிப்பதற்கும், உலர்ந்த செடிகளுக்கு உயிர் கொடுப்பதற்கும் அரிசி நீர் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு ஒரு பிடி அரிசியை ஒரு லிட்டர் வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும். இப்போது இந்த தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சோடா மற்றும் வெள்ளை வினிகர் சேர்த்து, இந்த கரைசலை தாவரங்களின் மண்ணில் ஊற்றினால் அவை உலர்வதை தடுக்கலாம்
(6 / 7)
பேக்கிங் சோடா தாவரங்களை பசுமையாக வைத்திருப்பதற்கும், பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை 3 லிட்டர் தண்ணீரில் கலந்து, ஒரு பாட்டிலில் நிரப்பி, சில நாட்களுக்கு ஒருமுறை பாதிக்கப்பட்ட செடிகளில் தெளிக்க வேண்டும்
மற்ற கேலரிக்கள்