Black Urad Rice : திருநெல்வேலி ஸ்பெஷல் உளுந்து சோறு! மட்டன் குழம்புடன் சாப்பிட சுவை அள்ளும்!-black urad rice tirunelveli special urad rice delicious to eat with mutton gravy - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Black Urad Rice : திருநெல்வேலி ஸ்பெஷல் உளுந்து சோறு! மட்டன் குழம்புடன் சாப்பிட சுவை அள்ளும்!

Black Urad Rice : திருநெல்வேலி ஸ்பெஷல் உளுந்து சோறு! மட்டன் குழம்புடன் சாப்பிட சுவை அள்ளும்!

Priyadarshini R HT Tamil
May 31, 2024 03:54 PM IST

Black Urad Rice : திருநெல்வேலி ஸ்பெஷல் உளுந்து சோறு! மட்டன் குழம்புடன் சாப்பிட சுவை அள்ளும்!

Black Urad Rice : திருநெல்வேலி ஸ்பெஷல் உளுந்து சோறு! மட்டன் குழம்புடன் சாப்பிட சுவை அள்ளும்!
Black Urad Rice : திருநெல்வேலி ஸ்பெஷல் உளுந்து சோறு! மட்டன் குழம்புடன் சாப்பிட சுவை அள்ளும்! (yummy tummy aarthi)

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

தேவையான பொருட்கள்

உளுந்து – ஒரு கப்

அரிசி – ஒரு கப்

பூண்டு – 20 பல்

தேங்காய் துருவல் – கால் கப்

வெந்தயம் – அரை ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

உளுந்து எடுத்த அதே கப்பில் அரிசியை எடுத்துக்கொள்ள வேண்டும். கருப்பு முழு உளுந்து, உடைத்த உளுந்து என எதுவேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

முதலில் ஒரு கடாயில் சேர்த்து உளுந்தை நன்றாக வாசம் வரும் வரை வறுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர், அரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும். ஊறவைக்க வேண்டாம். களைந்து எடுத்துக்கொண்டால் போதும்.

குக்கரில் கழுவிய அரிசி, உளுந்து, உறித்த பூண்டு, தேங்காய் துருவல், வெந்தயம், சீரகம், உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிட்டு மூன்று விசில் விட்டு எடுத்தால் உளுந்தஞ்சோறு தயார்.

கடாயில் எண்ணெயை காயவைத்து, அதில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து உளுந்து சாதத்தில் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும். இதை மட்டன் குழம்புடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.

கருப்பு உளுந்தின் நன்மைகள்

சர்க்கரை நோயாளிகள் கருப்பு உளுந்தை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு முறையாக பராமரிக்கப்படும்.

கருப்பு உளுந்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்துக்கு உதவுகிறது.

கருப்பு உளுந்து சருமத்துக்கு நல்லது.

கரும்புள்ளிகள், முகப்பரு மற்றும் கறைகளை எதிர்த்து போராட உதவும்.

இதய ஆரோக்கியத்துக்கு நல்லது.

செரிமானத்துக்கு நல்லது. குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது.

மலச்சிக்கலுக்கு நல்லது. வயிற்றுப்போக்கை எதிர்த்து போராட உதவுகிறது.

உடல் உறுப்புக்களுக்கு ஆக்ஸிஜனேற்றப்பட்ட ரத்தத்தை வழங்குகிறது.

உடலின் ஆற்றல் அதிகரிக்க உதவுகிறது.

எலும்புகளை வலுவாக்குகிறது.

மூட்டு வலி மற்றும் எலும்பு பிரச்னைகளை தடுக்கிறது.

உடலில் இரும்புச்சத்தை அதிகப்பதால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் நல்லது.

உடலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதை மேம்படுத்துகிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.