பிரேசில் நட்ஸ்கள்; குளிர் காலத்தில் இவை உங்கள் உடலுக்கு செய்யும் 10 நன்மைகள் என்ன தெரியுமா?
Dec 15, 2024, 06:00 AM IST
பிரேசில் நட்ஸ்கள் உடலுக்கு தரும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
பிரேசில் நட்ஸ்களில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இவற்றில் அதிகளவில் செலினியம், ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இதனால் நீங்கள் பிரேசில் நட்ஸ்களின் நன்மைகளை ஆண்டு முழுவதும் பெற முடியும். ஆனால் குறிப்பாக குளிர் காலத்தில் ஏன் நீங்கள் கட்டாயம் சாப்பிடவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். ஆது உங்கள் ரத்தத்தின் வெப்பநிலையை முறைப்படுத்துகிறது. இது உங்கள் தைராய்ட் நன்முறையில் இயங்க உதவுகிறது. இதில் உள்ள எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது
இதில் உள்ள அதிகப்படியான செலினியச் சத்துக்களால், பிரேசில் நட்ஸ்கள் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது. இது உங்கள் உடலில் உள்ள தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது உங்கள் நோய்மையைப் போக்குகிறது. குறிப்பாக குளிர்காலத்தில் மோசமடையும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
பிரேசில் நட்ஸ்களில் ஆரோக்கிய கொழுப்புகள் உள்ளது. இதில் ஒமேகா 3 சத்து உள்ளது. இது உங்கள் கொழுப்பு அளவைக் குறைக்கிறது. இது உங்கள் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இது உங்களுக்கு பக்கவாதம், இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது.
தைராய்ட் இயங்குவதற்கு உதவுகிறது
பிரேசில் நட்ஸில் உள்ள செலினியம், உங்கள் தைராய்ட் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இது உங்களுக்கு தைராய்ட் ஹார்மோன்கள் நன்முறையில் சுரக்க உதவுகிறது. இது உங்கள் உடலின் வளர்சிதையை முறைப்படுத்துகிறது. உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது. ஒட்டுமொத்த ஹார்மோன்களின் அளவையும் முறைப்படுத்துகிறது.
நாள்பட்ட வீக்கம்
பிரேசில் நட்ஸில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. இது உங்களுக்கு ஏற்படும் நாள்பட்ட வீக்கத்தைப் போக்குகிறது. இது உங்கள் இதய ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. இது உங்கள் உடலின் சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவுகிறது.
மூளை இயக்கத்தை அதிகரிக்கிறது
பிரேசில் நட்ஸ்களில் உள்ள செலினியம் மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள், உங்கள் மூளையின் இயக்கத்தை அதிகரிக்கிறது. இது உங்கள் மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. நரம்பியல் கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாப்பு அளிக்கிறது. ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தைக் குறைத்து அல்சைமர் மற்றும் பார்க்கின்சன்ஸ் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
பிரேசில் நட்ஸ்களில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் வைட்டமின்கள் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இது உங்கள் சருமத்துக்கு ஊட்டமளிக்கிறது. உங்கள் சருமத்தின் நெகிழ்தன்மையை அதிகரிக்கிறது. உங்களுக்கு தேவையான நீர்ச்சத்தைக் கொடுக்கிறது.
உடல் எடை மேலாண்மைக்கு உதவுகிறது
பிரேசில் நட்ஸ்களில் ஆரோக்கியமான நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள புரதம் மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. இது உங்களுக்கு அதிகம் சாப்பிடுவதைத் தடுக்கிறது. ரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்கிறது. இதனால் உங்கள் உடல் எடையை முறையாக பராமரிக்க உதவுகிறது.
செரிமானத்தை மேம்படுத்துகிறது
இதில் உள்ள நார்ச்சத்துக்கள், உங்களின் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. இது உங்கள் குடல் நுண்கிருமிகளின் ஆரோக்கியம் மற்றும் சமமாக பராமரிப்பதற்கும் உதவுகிறது.
சர்க்கரை நோயை பராமரிக்கிறது
பிரேசில் நட்ஸ்கள் உங்கள் உடலில் இன்சுலின் அளவைக் குறைக்கிறது. இதில் உள்ள செலினியச் சத்துக்கள் உங்களுக்கு அதைச் செய்கிறது. இது உங்கள் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. எனவே டைப் 2 டையபடீஸ் உள்ள நோயாளிகள் எப்போதும் இந்த பிரேசில் நட்ஸ்களை தங்கள் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.
மனநலனை மேம்படுத்துகிறது
பிரேசில் நட்ஸ்களில் அதிகளவில் மெக்னீசியம் மற்றும் செலினியச்சத்துக்கள் உள்ளன. இது உங்கள் மனநலனைக் காக்கிறது. உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இது உங்கள் மனஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இது உங்களுக்கு உள்ள மனஅழுத்த ஹார்மோன்களை முறைப்படுத்த உதவுகிறது.
டாபிக்ஸ்