தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Papaya : ஒரு கப் பப்பாளிப்பழத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

Benefits of Papaya : ஒரு கப் பப்பாளிப்பழத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

Priyadarshini R HT Tamil

Sep 09, 2024, 04:32 PM IST

google News
Benefits of Papaya : ஒரு கப் பப்பாளிப்பழத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
Benefits of Papaya : ஒரு கப் பப்பாளிப்பழத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Benefits of Papaya : ஒரு கப் பப்பாளிப்பழத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஒரு கப் பப்பாளி பழத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். அதை தெரிந்தால் நீங்கள் கட்டாயம் சாப்பிடுவீர்கள். இந்த பழம் உங்கள் உடலில் எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தும். இது மிகவும் எளிதாகக் கிடைக்கக்கூடிய பழம். பப்பாளியில் அதிகளவில் வைட்டமின்கள் உள்ளது. இதில் உள்ள எண்சைம்கள் உங்களின் அன்றாட வழக்கத்திற்கு நல்லது. இந்த பழத்தை தினமும் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்வதால் அது உங்கள் பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளி வழங்குகிறது. இது செரிமானத்தை அதிகரிக்கிறது. உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள காரணங்களை நீங்கள் தெரிந்துகொண்டால் இந்தப்பழத்தை தேடிப்போய் வாங்கி வந்து உண்பீர்கள். இந்த பழத்தை சாப்பிட உங்களை ஊக்குவிக்க இது கொடுக்கப்பட்டுள்ளது.

செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

பப்பாளிப்பழம் உங்கள் உடலின் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பப்பாளியில் உள்ள பப்பைன் என்ற எண்சைம்கள், உங்கள் உடலில் புரதத்தை உடைக்கிறது. இதனால் உங்களுக்கு நல்ல செரிமானம் கிடைக்கிறது. பப்பாளி பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அது உப்புசத்தை போக்கும். மலச்சிக்கலைத் தீர்க்கும். செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை காக்கும்.

உடல் எடை குறைக்க உதவும்

நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் பப்பாளியை கடித்து மென்று சாப்பிடுங்கள். இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. கலோரிகள் குறைவாக உள்ளது. இது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழம், உங்கள் உடல் எடையை பராமரிக்க உதவுகிறது. இதனால் உங்களின் பசி கட்டுப்படுத்தப்படுகிறது. நீங்கள் தேவையற்ற தீனிகளை சாப்பிட்டு உங்கள் கலோரிகளை அதிகரிப்பதை தவிர்க்கிறீர்கள். இது நாள் முழுவதுமே உங்களுக்கு உதவுகிறது.

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

இதில் உள்ள நார்ச்சத்துக்கள், குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. பப்பாளியில் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளது. இது குடலின் இயக்கத்தை முறைப்படுத்துகிறது. செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இது குடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. இதில் உள்ள எண்சைம்கள் செரிமானத்தை தவிர்க்கின்றன.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலில் போராளிகளை நோய் தாக்கியபின் மீண்டும் துளிர்க்கச் செய்பவையாகும். அவை உங்களின் அன்றாட வாழ்வில் நீங்கள் சந்திக்கும் சிறுசிறு பிரச்னைகளை எதிர்த்து போராட உதவும். இதில் வைட்டமின் ஏ, சி, இ ஆகியவை உள்ளனு. பப்பாளி உடலுக்கு நல்ல ஆன்டி ஆக்ஸிடன்ட்டாக உள்ளது. இதை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, அது உங்கள் உடலில் உள்ள ஃப்ரீ ராடிக்கல்களை முறைப்படுத்துகிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.

சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

நீங்கள் தினமும் ஒரு கப் பப்பாளி பழத்தை சாப்பிட்டால் உங்கள் சருமம் பளபளப்பாகும். இதில் அதிகளவில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இது உங்கள் உடலில் கொலாஜென் உற்பத்தியை அதிகரித்து, உங்கள் சருமத்தின் ஜொலிப்பை அதிகரித்து உங்களின் இளமை தோற்றத்தை தக்கவைக்கிறது. பப்பாளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சரும பளபளப்பை அதிகரிக்கிறது. சருமத்தை ஜொலிக்கச் செய்து, உங்கள் அழகாக மாற்றுகிறது.

இதய ஆரோக்கியம்

உங்கள் உடலில் அதிகம் கொழுப்பு சேர்ந்தால், அது கொழுப்பு கல்லீரல் மற்றும் இதய செயலிழிப்பு போன்ற நோய்களுக்கு காரணமாகிறது. பப்பாளியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதனால் இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை தடுக்கிறது. வீக்கத்தை குறைதுது, தமனிகள் ப்ளேக் சேருவதை தடுக்கிறது. தினமும் பப்பாளியை சாப்பிட்டால் அது இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது

நீங்கள் அடிக்கடி உடல் நலன் பாதிக்கப்படுவீர்கள் எள்ல், தினமும் வெறும் வயிற்றில் கட்டாயம் பப்பாளியை சாப்பிடுங்கள். அது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்யும். இதில் உள்ள வைட்டமின் சி அதற்கு உதவும். உங்கள் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்க வேண்டுமெனில் காலையில் தினமும் கட்டாயம் பப்பாளிப் பழங்களை சாப்பிட்டு, நோய் கிருமிகளை எதிர்த்து போராடுங்கள்.

அமில அளவை பராமரிக்கிறது

உங்களுக்கு வயிற்றில் தொல்லைகள் இருந்தால், உங்களுக்கு பப்பாளி ஒரு சிறந்த நண்பன். பப்பாளியில் ஆல்கலைன்கள் உள்ளது. இது உங்கள் வயிற்றில் அதிகப்படியாகத் தோன்றும் அமிலத்தை சமப்படுத்த உதவும். இதை நீங்கள் வெறும் வயிற்றில் சாப்பிடுவது உங்களுக்கு அசிடிட்டி, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகளை தீர்க்க உதவுகிறது. இது உங்கள் செரிமான கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை