Alcoholism: ’மேஷம் முதல் மீனம் வரை!’ கடும் மதுப்பழக்கத்தால் சீரழியும் ராசி எது? சந்திரன் செய்யும் சேட்டைகள்!
Sep 09, 2024, 02:53 PM IST
குடிப்பழக்கத்திற்கு ஆளான பிறகு குடும்பம் மற்றும் உறவுகளை மதிப்பதை நிறுத்திவிடுவார்கள். சந்திரனின் நட்சத்திரங்கள் ஆன ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களில் உங்கள் லக்னத்தின் 2ஆம் அதிபதி ஆனவர் ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களில் அமர்ந்தாலும் குடிப்பழக்கம் உண்டாகும்.
மது பழக்கம் என்பது சமுதாயத்தை வெகுவாக சீரழித்துக் கொண்டு இருக்கின்றது. இந்த பழக்கம் ஆனது தனி மனிதர், குடும்பம், சமுதாயம் வரை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.
சமீபத்திய புகைப்படம்
தீராத தாகம் தரும் சந்திரன்
ஜாதகத்தில் சில கிரக அமைப்புகள் மோசமாக இருந்தால் மதுப்பழக்க்கம் பக்கமே செல்லாமல் இருப்பது சாலச்சிறந்தது. தீராத தாகம் தரக்கூடிய கிரகம் ஆக சந்திரன் உள்ளார். சந்திர பகவான் ஒரு ஜாதகத்தில் நீர் ராசிகள் என்று சொல்லக்கூடிய கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய வீடுகளில் அமர்ந்த நிலையில் அவர் பாவப்பட்ட சந்திரன் ஆக இருந்தால் ஜாதகர் தீரான குடிப்பழக்கத்தை உடையவராக இருப்பார். குடிப்பழக்கத்தை தரும் கிரகம் ஆக சந்திர பகவான் உள்ளார். சந்திரன் உடன் கடும் பாவிகள் என்று சொல்லக்கூடிய சனி, செவ்வாய், ராகு, கேது ஆகிய கிரகங்கள் இணைவது இந்த குடிப்பழக்கத்தை தீவிரம் ஆக்கும்.
சந்திரன் உடன் அமர்ந்த பாவிகள்
பொதுவாக சந்திர பகவான் பாவிகள் உடன் மிகவும் அருகில் அமர்ந்தால் மதுப்பழக்கம் வரும். இதுவே இந்த அமைப்பு நீர் ராசியில் இருந்தால் இந்த பழக்கம் மிக அதிகமாக இருக்கும்.
குடிப்பழக்கமும் சந்திரனும்
குடிப்பழக்கத்திற்கு ஆளான பிறகு குடும்பம் மற்றும் உறவுகளை மதிப்பதை நிறுத்திவிடுவார்கள். சந்திரனின் நட்சத்திரங்கள் ஆன ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களில் உங்கள் லக்னத்தின் 2ஆம் அதிபதி ஆனவர் ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரங்களில் அமர்ந்தாலும் குடிப்பழக்கம் உண்டாகும்.
உதாரணமாக கும்பம் லக்னத்தை எடுத்துக் கொள்வோம். கும்பம் லக்னத்தின் 2ஆம் அதிபதி குரு பகவான் ஆவார். இவர் ரிஷபம் ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் அமர்ந்து இருந்தால் குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆக போகிறார் என்று அர்த்தம். அல்லது கன்னியில் உள்ள அஸ்தம் நட்சத்திரத்திலும், மகரம் ராசியில் உள்ள திருவோணம் நட்சத்திலும் அமர்ந்தாலும் குடிப்பழக்கம் உண்டாகும்.
ரிஷபத்தில் குரு இருக்கும் போது மிதமான குடிப்பழக்கமும், கன்னியில் அமரும் போது மோசமான குடிப்பழக்கமும், மகரத்தில் அமரும் போது கடும் குடிப்பழக்கம் இருக்கும்.
துலாம் லக்னத்தில் 2ஆம் அதிபதியாக செவ்வாய் உள்ளார். இவர் திருவோணம், ரோகிணி, அஸ்தம் நட்சத்திரத்தில் அமர்ந்தாலும் குடிப்பழக்கம் இருக்கும்.
2ஆம் அதிபதி சந்திரன் நட்சத்திரத்தில் அமர்வதும், சந்திரன் நீர் ராசிகளில் அமர்வதும், சந்திரன் பாவிகளால் அதிகம் பாதிக்கப்பட்டாலும் குடிப்பழக்கம் மூலம் பிரச்னைகள் உண்டாகும்.
இந்த ஜாதக அமைப்பு உள்ளவர்கள் மது பருவதையும், மது அருந்துவோருடன் ஏற்படும் தொடர்பையும் உடனடியாக துண்டிப்பது முக்கியம். உடலையும், மனதையும் கெடுத்துக் கொண்டு கிடைக்கும் இந்த மகிழ்ச்சி வாழ்கையில் பெரும் சோகத்தை உண்டாக்கி செல்லும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்