Benefits of Gulkand : தினமும் ஒரு ஸ்பூன் ரோஜா குல்கந்து! ஆற்றல், அமைதி, பாலியல் உணர்வு அதிகரிப்பு என எத்தனை நன்மைகள்!
May 18, 2024, 02:56 PM IST
Benefits of Gulkand : கோடை காலத்தில் ஒரு தினமும் ஒரு ஸ்பூன் ரோஜா குல்கந்து சாப்பிடுவதால் ஏற்படும நன்மைகள் என்ன தெரியுமா?
ரோஜா குல்கந்தை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதற்கான காரணங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்வதற்கு நாம் செய்யவேண்டிய முக்கியமான விஷயங்களுள் ஒன்று, ரோஜா குல்கந்தை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது. இது உங்கள் வயிற்றை கோடையின் வெப்பத்தில் இருந்து காக்கும். இதில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. மேலும் அதிக சுவை நிறைந்தது இந்த ரோஜா குல்கந்து.
இயற்கை குளிர்விப்பான்
ரோஜா குல்கந்து, உடலை குளிர்விக்கும் இயற்கை உட்பொருட்கள் அடங்கியது. இயற்கை குளிர்விப்பான் என்பதால், கடும் வெப்பத்தையும் குறைக்கிறது. குல்கந்து, கோடை காலத்திற்கு ஏற்ற உணவு. உடல் சூட்டை குறைக்கிறது. வெயினால் ஏற்படும் வலியை போக்குகிறது. இதை தினமும் ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இல்லை
ரோஜா குல்கந்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைய உள்ளது. ரோஜா குல்கந்து, பொது உடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இது உடலில் ஏற்படும் ஆக்ஸிடேட்டிங் அழுத்தத்தை போக்குகிறது. இதனால் செல்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களிடம் இருந்து உடல் காக்கப்படுகிறது. குல்கந்தை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உடலின் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது. உடலுக்கு தேவையான உயிர்சக்தியை அதிகரிக்கிறது.
குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
இதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள், செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. குல்கந்து சக்திவாய்ந்த ப்ரோபயோடிக் ஆகும். ரோஜா குல்கந்து, அசிடிட்டி, வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற வயிறு தொடர்பான உபாதைகளை போக்குகிறது. இதனால் குடலில் உள்ள நுண்ணுயிர்களை முறைப்படுத்தி, உணவை நன்றாக செரிக்கவைக்க உதவுகிறது.
மனஅழுத்தத்தை போக்குகிறது
ரோஜா இதழ்கள் தரும் மனஅழுத்தம் போக்கும் குணம் காலங்காலமாக அனைவரும் அறிந்ததே. ரோஜாவின் மணமே நமது உடலுக்கு பல இதமான சூழலை ஏற்படுத்தித்தரும். ரோஜா குல்கந்து, மனஅழுத்தத்தைப் போக்குகிறது. பதற்றம் மற்றும் டென்சனைக் குறைக்கும். நரம்புகளை அமைதிப்படுத்தி, நல்ல மனநிலையை உருவாக்கும். இது மனதை அமைதிப்படுத்தும், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் காரணமாகும்.
கழிவுநீக்கத்துக்கு நல்லது
குல்கந்து, ரத்தத்தை சுத்தம் செய்யும். உடலில் உள்ள அழுக்குகளை அடித்து வெளியேற்றும். இதனால் இது உடலுக்கு மிதமான கழிவுநீக்கியாக செயல்படும். இதன் சிறுநீர் பிரிப்புத்திறன் உங்களின் சிறுநீரக ஆரோக்கியத்தை அதிகரிவும், சிறுநீர் பாதையை சுத்தம் செய்யவும் உதவும். உடலின் உட்புறத்தை சுத்தமாக்கும்.
இயற்னையாகவே பாலுணர்வை அதிகரிக்கும்
ரோஜா குல்கந்தில் இயற்கையாகவே பாலுணர்வை தூண்டும் உட்பொருட்கள் நிறைய உள்ளது. இது பாலியல் உணர்வை அதிகரித்து உங்கள் செக்ஸ் வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு காரணமாகும். கோடைக்கால மாலை நேரங்களை அதிக ரொமாண்டிக்கானதாகவும், உணர்வுகளை தூண்டுவதுடன் ஊட்டச்சத்தையும் கொடுக்கும் இதமான ஒன்று.
சுவாச மண்டலத்தின் ஆரோக்கியத்துக்கு உதவும்
ரோஜா குல்கந்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் சென்ட்கள் சுவாச மண்டலத்தை இதமாக்க உதவுகிறது. இதனால் இருமல், சளி மற்றும் மூக்கடைப்பு போன்ற பிரச்னைகள் குணமாகிறது. ரோஜா குல்கந்தின், அமைதிப்படுத்தும் குணம், சுவாச மண்டலத்தை அதிகரிக்கிறது. சளி சவ்வுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது. இது வெயில் மற்றும் மழை போன்ற காரணங்களால் ஏற்படும் சுவாசக்கோளாறுகளை சரிசெய்கிறது.
நீர்ச்சத்தை அதிகரிக்கிறது
கோடை காலத்தின் கடும் வெயில் நாட்களில், குல்கந்தில் உள்ள தண்ணீர் சத்துக்கள், உடலுக்கு தேவையான நீர்ச்சத்தைக் கொடுக்கும். கோடையில் உடல் இழக்கும் நீரின் அளவை ஈடுகட்டுகிறது. நீர்ச்சத்து இழப்பை எதிர்த்து போராடுகிறது. குல்கந்தை உங்கள் அன்றாட உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால், உடலுக்கு தேவையான ஆற்றலையும், நீர்ச்சத்தையும் வழங்குகிறது.
சருமத்துக்கு இயற்கை டானிக்
குல்கந்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைய உள்ளது. அது சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. சருமத்தை உள்புறமும், வெளிப்புறமும் பளபளப்பாக்குகிறது. இதன் ஈரப்படுத்தும் தன்மை சருமத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்கிறது. இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மைகள் வயோதிகத்தை தள்ளிப்போடுகிறது. சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உங்களுக்கு இளமை தோற்றத்தைக் கொடுக்கிறது.
செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
ரோஜழ குல்கந்தின் சுவை, மனம், அதன் ஆரோக்கிய நன்மைகள் என அனைத்தும் இதை உணவில் சேர்த்துக்கொள்வது உங்களுக்கு நன்மைகளைக் கொடுக்கிறது. இதை உடகொள்வது உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது வெற்றிலையில் வைத்து சாப்பிடலாம். இதை ஸ்வீட்டிகளில் சேர்த்து சாப்பிடலாம். பானங்களாக தயாரித்து சாப்பிடலாம்.
டாபிக்ஸ்