தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Aishwarya Bhaskaran: ‘எல்லாம் அந்த கிழவியால;ரோஜா படத்த பார்த்துட்டு செருப்பாலேயே; மணிரத்னம் படத்துல கடைசி வர’ - ஐஸ்வர்யா

Aishwarya Bhaskaran: ‘எல்லாம் அந்த கிழவியால;ரோஜா படத்த பார்த்துட்டு செருப்பாலேயே; மணிரத்னம் படத்துல கடைசி வர’ - ஐஸ்வர்யா

Kalyani Pandiyan S HT Tamil
May 11, 2024 05:27 PM IST

Aishwarya bhaskaran: ருக்குமணி ருக்குமணி பாடலை தான் முதல்முறையாக கேட்டேன். என்னுடைய பாட்டியின் பெயரும் ருக்மணி தான். அந்த பாடலை கேட்ட உடனேயே அய்யோ… நல்ல படத்தை மிஸ் செய்து விட்டோமே என்று நினைத்து வயிறு கலங்கிவிட்டது - ஐஸ்வர்யா!

ஐஸ்வர்யா பாஸ்கரன் பேட்டி!
ஐஸ்வர்யா பாஸ்கரன் பேட்டி!

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து பெட்டர் டுடே யூடியூப் சேனலுக்கு பேசிய அவர், “என்னுடைய பாட்டி ஒரு தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக என்னை கமிட் செய்து இருந்தார். நாளை ஷூட்டிங்… அதனால் இன்று கிளம்ப வேண்டும் என்பது மாதிரியான சூழ்நிலை. இந்த நிலையில்தான் எனக்கு ரோஜா படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது. 

ஆனால் இந்தப்படத்தில் கமிட் ஆனதால், மணிரத்தினத்தின் படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை. அதற்கு முன்னதாக தளபதி திரைப்படத்தில் நடிகை சோபனா நடித்த கதாபாத்திரத்தில் என்னை நடிக்க கேட்டிருந்தார்கள். அப்போதும் இதே போல தான் ஒரு தெலுங்கு திரைப்படத்தில் கமிட் ஆகி இருந்தேன்.அதனால் அந்தப் படத்திலும் நடிக்க முடியாமல் சென்று விட்டது. 

ஏ.ஆர்.ரஹ்மானின் மிரட்டல் மியூசிக்

இந்த நிலையிதான் நான் ஹைதராபாத்திற்கு கிளம்பினேன். ஆனால் அங்கு தயாரிப்பு தரப்புக்கும், விநியோகஸ்தர் தரப்புக்கும் பிரச்சினை ஏற்பட, அந்த திரைப்படம் நான்கே நாட்களில் நிறுத்தப்பட்டு விட்டது. இந்த நிலையில் தான் என்னுடைய உறவினர் ஒருவர் ரோஜா திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகியிருக்கின்றன.

புது மியூசிக் டைரக்டரை மணிரத்தினம் தன்னுடைய திரைப்படத்தில் கமிட் செய்து இருக்கிறார்.பாடலை கேட்டுப்பார் என்று என்னிடம் அதற்கான சீடியை கொடுத்தார். ருக்குமணி ருக்குமணி பாடலை தான் முதல்முறையாக கேட்டேன். என்னுடைய பாட்டியின் பெயரும் ருக்மணி தான். அந்த பாடலை கேட்ட உடனேயே அய்யோ… நல்ல படத்தை மிஸ் செய்து விட்டோமே என்று நினைத்து  வயிறு கலங்கிவிட்டது.

நான் மிகவும் நொந்து விட்டேன்.

நான் என்னுடைய பாட்டியை அப்படியே பார்த்தேன். காரணம் பாடல் அந்த அளவிற்கு நன்றாக இருந்தது. இதனையடுத்து அந்த திரைப்படம் வெளியானது. நாங்கள் குடும்பத்தோடு சென்று பார்த்தோம். அந்த படத்தை பார்த்த பின்னர், நான் மிகவும் நொந்து விட்டேன். 

இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு நம் கைநழுவி சென்று விட்டதே என்ற விரக்தி உடல் முழுவதும் பரவியது. காரில் வரும் பொழுது என்னுடைய குடும்பத்தார் யாரும் என்னிடம் எதுவும் பேசவில்லை. வீட்டிற்கு வந்தோம்.லிஃப்டில் ஏறி வீட்டு வாசலுக்கு வந்தவுடன் வெளியே செருப்பைக் கழற்றி அந்த செருப்பாலயே என்னை நானே அடித்துக் கொண்டேன். இதைப் பார்த்த என்னுடைய பாட்டி வேண்டாம் அடிக்காதே என்று சொன்னார். அவரை நான் பார்த்து கிழவி உன்னை கொல்ல முடியாது என்பதால் சும்மா விடுகிறேன் என்று சாடினேன். 

திருடா திருடா திரைப்படத்திலும் எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த நேரத்திலும் என்னுடைய தேதிகளை ஹிந்தி திரைப்படம் ஒன்றில் கொடுத்து விட்டார் பாட்டி. இதனால் மணிரத்னம் சார் படத்தில் நடிக்கவே முடியாமல் சென்று விட்டது.

முன்னதாக, தனக்கும் தன்னுடைய அம்மாவும்மான லட்சுமிக்கு இடையே நடந்த முட்டல் மோதல்களை நடிகை ஐஸ்வர்யா பெட்டர் டுடே சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருந்தார்.

 

அவர் பேசும் போது, “இதுவரை என்னுடைய அம்மா என்னை எந்த ஒரு நேர்காணலிலும் திட்டியது கிடையாது. நான் இளவயதாக இருக்கும் போது, லூசு போல ஒரு நேர்காணலில் என்னுடைய குடும்ப பிரச்சினை பற்றி பேசிவிட்டேன். அது மிகப்பெரிய பிரச்சினையாக வெடித்து விட்டது.காரணம் அது என்னுடைய அம்மாவின் மனதை மிகவும் புண்படுத்தி விட்டு விட்டது. அதற்காக நான் அம்மாவிடம் மிகவும் வருந்தி, மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். அதற்காக மஞ்சு அத்தை தொடங்கி அனைவரும் என்னை கழுவி கழுவி ஊத்தினார்கள்.

ஒரு குழந்தை தன்னுடைய பெற்றோரைப் பற்றி தவறாக பேசுவது என்பது மிக மிக மோசமான விஷயம் ஆகும். எந்த குடும்பத்தில்தான் பிரச்சினை இல்லை.நான் இளவயதில் முரண்டு பிடிப்பவளாகவே இருந்தேன். என்னுடைய வீட்டின் கருப்பு ஆடு நானாகவே இருந்தேன். நாம் ஒரு பிரபலமாக இருக்கும் பட்சத்தில், குடும்பத்தை பற்றி தவறாக பேசக்கூடாது. ஆகையால் நாம் ஒருவரை ஒருவர் பொது வெளியில் குற்றம் சாட்டுவதை நிறுத்த வேண்டும்.

நிச்சயமாக குடும்பத்தை பாதிக்க கூடாது

 

பிரச்சினைகளுக்கு பின்னர்தான், என்னுடைய அம்மா என்னை யோகாவில் மிகவும் ஆழமாக ஈடுபட வைத்தார் அங்கே தான் எனக்குள் மாற்றம் நிகழ்ந்தது. என்னுடைய குழந்தை பிறந்த பிறகு தான் என்னுடைய அம்மாவின் வலி புரிந்தது. ஒரு பெண்ணினுடைய நடவடிக்கைகள் நிச்சயமாக குடும்பத்தை பாதிக்க கூடாது

நான் அப்போது பேஸ்புக்கில் இருந்தேன். அந்த வகையில் நான் அதில் நிறைய புகைப்படங்களை பதிவிடுவேன். ஒரு நாள் என்னுடைய கணவர் என்று பதிவிட்டு யூடியூப்பில் வீடியோ வெளியாகி இருந்தது. உள்ளே சென்று பார்த்தால் அம்மாவின் கணவர்.

பதிவிடுவது இல்லை

குடும்பத்தோடு சென்று ஒரு புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டால், அன்றைய தினம் கண்ணு பட்டு ஏதாவது நடந்து விடும். அதனால் தான் நான் சோசியல் மீடியாவில் என்னுடைய குடும்பம் சம்பந்தமான புகைப்படங்களை பதிவிடுவது இல்லை” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்