தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Fennel : அனீமியாவைப் போக்கும்; தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்; உடலில் சோம்பு செய்யும் மாயங்கள் என்ன?

Benefits of Fennel : அனீமியாவைப் போக்கும்; தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்; உடலில் சோம்பு செய்யும் மாயங்கள் என்ன?

Priyadarshini R HT Tamil

May 14, 2024, 09:00 AM IST

google News
Benefits of Fennel : அனீமியாவைப் போக்கும்; தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்; உடலில் சோம்பு செய்யும் என்னென்ன மாயங்கள் செய்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
Benefits of Fennel : அனீமியாவைப் போக்கும்; தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்; உடலில் சோம்பு செய்யும் என்னென்ன மாயங்கள் செய்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Benefits of Fennel : அனீமியாவைப் போக்கும்; தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்; உடலில் சோம்பு செய்யும் என்னென்ன மாயங்கள் செய்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

பெருஞ்சீரகம் அல்லது சோம்பு என்று அழைக்கப்படுகிறது. நமது சமையலறையில் முக்கிய இடம் பிடித்துள்ள சோம்பின் நற்குணங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

சோம்பில் உள்ள சத்துக்கள்

80 கிராம் சோம்பில் 10 கலோரிகள் உள்ளது. 0.7 கிராம் புரதம், 0.2 கிராம் கொழுப்பு, 1.4 கிராம் கார்போஹைட்ரேட், 2.6 கிராம் நார்ச்சத்துக்கள், 352 மில்லிகிராம் பொட்டாசியம், 34 மைக்ரோகிராம் ஃபோலேட், 112 மைக்ரோகிராம் கரோட்டின் ஆகியவை உள்ளது.

பாதுகாப்பான தாவர உட்பொருட்கள் நிறைந்தது

சோம்பின் அனைத்து பாகங்களிலும், தாவர உட்பொருட்கள் நிறைந்துள்ளது. அதில் உடலுக்கு பாதுகாப்பை வழங்கும் பொருட்கள் உள்ளன. இதில் குளோரோஜெனிக் அமிலம், லைமோனே மற்றும் குயிர்சிட்டின் ஆகியவை உள்ளன என்று ஆய்வுகள் கூறுகின்றன. 

இவை நாள்பட்ட நோய்களான இதய நோய்கள், உடல் பருமன் மற்றும் டைப் 2 டையாபடீஸ் ஆகியவை ஏற்படும் வாய்ப்பை குறைக்கின்றன.

இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது

நார்ச்சத்துக்கள் மற்றும் இதயத்துக்கு இதமான பொட்டாசியம், ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, இது உங்கள் உடலில் ரத்த அழுத்தத்தை குறைத்து, கொழுப்பை சரியான அளவில் பராமரிக்க உதவுகிறது.

ஆரோக்கியமான சருமத்தை பேணுகிறது

சோம்பில் உள்ள பீட்டாகரோட்டின்கள் உடலுக்குள் புகும்போது, வைட்டமின் ஏ ஆகிறது. மேலும் இதில் வைட்டமின் சியும் உள்ளது. இது கொலாஜென் உற்பத்தி மற்றும் திசுக்களை குணமாக்க உதவுகிறது. 

இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களும், சரும ஆரோக்கியத்தை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் இது சுவாச மண்டலத்தையும், சளி உருவாக்கும் சவ்வுகளையும் பாதுகாக்கிறது.

வீக்கத்துக்கு எதிரான குணங்கள்

சோம்பில் உள்ள வைட்டமின் சி போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், குயிர்சிடின் போன்ற ஃப்ளேவனாய்ட்கள், வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

எடை மேலாண்மைக்கு உதவுகிறது

சுவையும், மணமும் நிறைந்தது சோம்பு, கலோரிகள் குறைவானதாக உள்ளதால், உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது லோ கிளைசமிக் இன்டக்ஸ் உணவுகளில் உள்ளது. 

அதனால் சாப்பிட்டவுடன், ரத்தச்சர்க்கரை அளவை அதிகரிக்கச்செய்யாமல், படிப்படியாக உயர்த்தும் உணவுகள் பட்டியலில் உள்ளது. இதன் உயர் நார்ச்சத்துக்கள், ரத்த சர்க்கரையை மிதமாக வெளியிடச்செய்யும்.

பசியை கட்டுப்படுத்தும்

சோம்பில் காணப்படும் அனிதோல் என்ற உட்பொருள், பசியை கட்டுப்படுத்தும் தன்மைகொண்டது. எனவே உணவுக்கு முன் சோம்பு தேநீர், பசியை குறைக்க உதவும்.

அனீமியாவை கட்டுப்படுத்துகிறது

சோம்பில் ஃபோலேட்கள் அதிகம் உள்ளது. இது ஆரோக்கியமான ரத்த சிவப்பணுக்களை உருவாக்குகிறது. உங்கள் உணவில் ஃபோலேட்கள் அதிகம் உள்ள உணவுப்பொருட்களை சேர்த்துக்கொள்வது உங்களுக்கு அனீமியா ஏற்படாமல் காக்கிறது. கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகளுள் ஃபோலேட்களும் ஒன்று.

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது

சோம்பில் உள்ள அனிதோல் என்ற உட்பொருள், தாய்ப்பாலின் தரம் மற்றும் சுரப்பையும் அதிகரிக்கிறது. இது ப்ரோலாக்டின் என்ற ஹார்மோனை தூண்டுகிறது. அதனால் தாய்ப்பால் அதிகம் சுரக்கிறது.

மெனோபாஸ் அறிகுறிகளை போக்குகிறது

பெண்களுக்கு மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிறுத்தப்படும்போது, சோம்பு, பெண்ணுறுப்பில் ஏற்படும் வறட்சி, உறக்க கோளாறுகள், மனஅழுத்தம் ஆகியவற்றை போக்க உதவுகிறது.

ஆன்டி பாக்டீரியல் உட்பொருட்கள் கொண்டது

சோம்பில், ஆன்டி பாக்டீரியல் உட்பொருட்கள் நிறைய உள்ளது. இது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நுண்ணுயிர்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. அதில் ஈஷெரிச்சியா கோலி, ஆரியஸ், கேன்டிடா அல்பிகேன் ஆகிய நுண்ணுயிர்கள் உடலில் வளர்வதை கட்டுப்படுத்துகிறது.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி