Benefits of Nannari : குளுகுளு கோடைக்கு உறுதுணை மட்டுமல்ல நன்னாரி உடலுக்கு வழங்கும் நன்மைகள் எத்தனை தெரியுமா?
Benefits of Nannari : குளுகுளு கோடைக்கு உறுதுணை மட்டுமல்ல நன்னாரி உடலுக்கு வழங்கும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
நன்னாரி, கோடையில் உங்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் பானம் ஆகும். நன்னாரி என்பது ஒரு வகை வேர். இதில் எண்ணற்ற ஆரோக்கிய நற்குணங்கள் நிறைந்துள்ளது. நன்னாரி மருத்துவ குணங்கள் நிறைந்தது. மருத்துவ பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. அதன் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
நன்னாரி, உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் பானம்
சுட்டெரிக்கும் கோடை காலத்தில், நன்னாரி சர்பத் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கிறது. இதன் இயற்கை குளிர்விக்கும் திறன், உங்கள் உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது.
கடும் கோடை வெப்பத்தைக் கூட இதன் குளிர்ச்சியால் நீங்கள் தாக்குபிடிக்க முடியும். உங்களின் தாகத்தை தணிக்கும் உங்கள் நாவிற்கு இனிப்பு சுவையைக்கொடுக்கும். இது வெறும் பானம் மட்டுமல்ல, உங்களுக்கு கோடையின் தாக்கத்தை குறைக்க உதவும் பானம். வெப்ப அலைகளில் இருந்து உங்களை காக்கவும் நன்னாரி உதவும்.
செரிமான ஆரோக்கியம்
நன்னாரி உங்களின் தாகத்தைக் கட்டுப்படுத்துகிறது. இது உங்கள் உடல் உட்கொள்ளும் உணவை செரிக்க உதவுகிறது. இதன்மூலம் உங்கள் உடலின் செரிமான ஆரோக்கியம் மேம்படுகிறது. இதன் மலமிளக்கும் தன்மை உங்களின் குடல் இயக்கத்தை மிருதுவாக்குகிறது.
இதனால் மலச்சிக்கலைத் தடுக்கிறது. உணவு உட்கொண்டபின்னர் வயிறு நிறைந்த உணர்வுடன் இருக்கிறீர்களாக? செரிமான மாத்திரைகளை நோக்கி ஓடவேண்டாம் நன்னாரி சர்பத் பருகினால், அது உங்கள் உடலின் செரிமான மண்டலத்தை சரியாக்க உதவும். வயிற்றில் ஏற்படும் எரிச்சலை போக்க உதவுகிறது. வயிறு தொடர்பான அசவுகர்யங்களைப் போக்குகிறது.
ரத்தத்தை சுத்திகரிக்கிறது
உங்கள் வயிறை காப்பது மட்டுமல்ல, ரத்த ஆரோக்கியத்தையும் காக்க உதவுகிறது. இதன் சுத்தப்படுத்தும் திறன், உங்கள் உடல் உறுப்புக்களை சுத்தம் செய்ய உதவுகிறது. இது உடலில் உள்ள கெட்ட நச்சுக்களையும், அழுக்குகளையும் வெளியேற்ற உதவுகிறது. உங்கள் உடலின் உள்ளே சுத்தம் செய்யும்போது, உங்களின் ரத்தம் சுத்தமாகும்.
இதனால் உங்கள் ரத்தம் புத்துணர்ச்சி பெற்று, உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது. இது உனது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிப்பதுடன், உடலின் நோய் எதிர்ப்பாற்றலையும் அதிகரிக்க உதவுகிறது. உங்கள் சருமத்திற்கு பொலிவை ஏற்படுத்துகிறது.
சிறுநீர் பாதையின் பாதுகாவலன்
நன்னாரி, சிறுநீர் பாதையின் பிரச்னைகளைப் போக்க உதவுகிறது. இந்த நன்னாரி உங்களை அதிக முறை சிறுநீர் கழிக்க வைக்கிறது. உங்கள் உடலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கிருமிகளிடம் இருந்து உங்களைக் காக்கிறது. அதனால் ஏற்படும் நோய்களை தடுக்கிறது. சிறுநீர்ப்பையில் அடிக்கடி தொந்தரவு ஏற்படுபவர்களுக்கு, இது மிகவும் சிறந்தது.
இயற்கை முறையில் உங்களின் சிறுநீர்ப்பையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. நன்னாரியில் உள்ள குணங்கள் வீக்கத்தை குறைத்து, எரிச்சலையும் குறைக்கிறது. சிறுநீர்ப்பை தொற்றுகள் மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது. மக்கள் நன்றாக உணர உதவுகிறது.
சரும பொலிவை அதிகரிக்கிறது
நன்னாரியில், உள்ள புத்துணர்ச்சியைத்தரும் உட்பொருட்கள் மற்றும் உங்கள் சருமத்தை பளபளப்பாக்க உதவுகிறது. உங்கள் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இதன் சுத்தப்படுத்தும் சக்தி, கரும்புள்ளிகள் மற்றும் பருக்களை உங்கள் சருமத்தில் இருந்து நீக்க உதவுகிறது. நன்னாரியின் குணப்படுத்தும் திறன்கள், உங்கள் சருமத்தில் உள்ள சிவப்புகள் மற்றும் எரிச்சலைப் போக்குகிறது. நன்னாரியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது.
இது உங்கள் சருமத்தை செல்களை சேதப்படுத்தும் ஆபத்தை ஏற்படுத்தும் ஃப்ரி ரேடிக்கல்களிடம் இருந்து காக்கிறது. வயோதிகத்தை தாமதப்படுத்துகிறது உங்கள் முகத்தை இளமையாக வைக்க உதவுகிறது. எனவே உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்களை பயன்படுத்தாமல், இதுபோன்ற இயற்கை நிவாரணிகளை பயன்படுத்துங்கள்.
எடை மேலாண்மைக்கு உதவுகிறது
நன்னாரி உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது செரிமானத்துக்கு உதவுகிறது. வயிறு உப்புசத்தை குறைக்கிறது. உங்களை இலகுவாக உணரவைக்கிறது. நன்னாரி கலோரிகள் குறைவானது, இது உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.
நன்னாரியில் இனிப்பு சுவை நிறைந்தது. உங்களுக்கு சர்க்கரை சாப்பிடவேண்டும் என்ற எண்ணத்தை குறைக்கிறது. இதனால் ஆரோக்கியமற்ற இனிப்புகளை உட்கொள்வது தடுக்கப்படுகிறது. உங்கள் உடல் ஆரோக்கியத்தை குலைக்கும் வேறு சர்க்கரைகளில் இருந்து விடுபடலாம்.
மனஅழுத்தத்தை போக்குகிறது
நன்னாரியின் மணம், மண் வாசத்துடன் இருக்கும். ஏனெனில் நாம் பயன்படுத்துவது வேரைத்தான். உங்கள் மனதை அமைதிப்படுத்துகிறது. இது உங்களுக்கு புத்துணர்ச்சியைத் தருகிறது. இது உங்களின் மனஅழுத்தத்தையும் குறைக்கிறது.
உங்களுக்கு மனஅழுத்தம் ஏற்படும்போது உங்களுக்கு காபிக்கு அடுத்தபடியாக மனஅழுத்தத்தை போக்குவதாக இருப்பது நன்னாரி சர்பத். உங்களின் மனஅழுத்தத்தைப் போக்கி மனதை அமைதிப்படுத்தும் நன்னாரி சர்பத் உங்களுக்கு கோடை காலத்தின் சிறந்த துணை.
டாபிக்ஸ்