Benefits of Cinnamon : பட்டையின் 10 நன்மைகள் என்ன தெரியுமா? இதய ஆரோக்கியம் முதல் உடல் எடை குறைப்பு வரை பலன்கள் இதோ!
Aug 24, 2024, 11:52 AM IST
Benefits of Cinnamon : பட்டையின் 10 நன்மைகள் என்ன தெரியுமா? இதய ஆரோக்கியம் முதல் உடல் குறைப்பு வரை உங்கள் உடலுக்கு பல பலன்களை தருகிறது, இந்த பட்டை.
பட்டை நாம் அதிகம் பயன்படுத்தும் ஒரு மசாலாப்பொருள்தான். உலகம் முழுவதும் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. பட்டையிலும் குறிப்பாக சுருள் பட்டைதான் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்தது. இந்தப்பட்டை இனிப்பு, காரம், மசாலா என பல உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. பட்டையாகவும், இடித்து பொடியாகவும் இந்தப்பட்டை பயன்படுத்தப்படுகிறது. பட்டை எண்ணெயும் தயாரிக்கப்படுகிறது. பட்டை மரத்தில் இருந்து அதன் பட்டைகளை பிரிந்து எடுத்துப் பயன்படுத்தப்படுகிறது. இதில் எண்ணற்ற வகைகள் உண்டு. இதமான, மரத்தின் மணம் கொண்டிருக்கும் இந்தப்பட்டை. இந்த மணம், நமது மூக்கை துளைக்கும். பயன்படுத்தும்போது நரம்புகளை அமைதிப்படுத்தும். இதை பட்டையாகவும், பொடியாகவும் வாங்கிக்கொள்ளலாம். பட்டையை அரைக்கும்போது அதன் மணம் அதிகரிக்கிறது. பொடியாக வாங்குவதைவிட பட்டையாக வாங்குவது சிறந்தது. பட்டைப்பொடி கேக், இனிப்புகள், பழ சாலட்களில் சேர்க்கப்படுகிறது. சூடான பானங்களிலும் கலக்கப்படுகிறது. அசைவ உணவு தயாரிக்க அவசியமானது பட்டை. இனிப்பு மற்றும் காரம் இரு சுவைகளையும் கொண்டது. இதனால் இனிப்பு, காரம் என இரண்டு வகை உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. பட்டைப்பொடியை அதன் மணத்தை வைத்தே கண்டுபிடித்துவிடலாம்.
பட்டை, எலுமிச்சை, தேன்
பட்டை, எலுமிச்சை மற்றும் தேன் ஆகியவற்றை கலந்து பருகும்போது, அது உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. பல்வேறு தொற்றுகளில் இருந்தும் உங்களைக்காக்கிறது. பட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, எலுமிச்சை மற்றும் தேன் கலந்து பருகவேண்டும். இதில் நீங்கள் ஏலக்காய், இஞ்சி, புதினா, மிளகு என அனைத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.
பட்டை தண்ணீர்
பட்டையை தண்ணீரில் ஊறவைக்கும்போது அதில் உள்ள மினரல்கள் மற்றும் சுவை என அனைத்தையும் தண்ணீர் உறிஞ்சி ஒரு சுவையான மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பானம் கிடைக்கிறது. இந்த தண்ணீரை நீங்கள் பருகிவரும்போது, உங்கள் உடல் கொழுப்பு செல்களை உடைக்கிறது. இதை நீங்கள் வழக்கமாக எடுத்துக்கொள்ளும்போது, உங்கள் உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரித்து, பசியைக் குறைக்கிறது. பட்டையை சூடான தண்ணீரில் ஊறவைத்து இந்த பானத்தை தயாரித்துவிடலாம். இந்த பானம் உங்களின் செரிமானத்தையும் அதிகரிக்கிறது.
வீக்கத்துக்கு எதிரான குணங்கள்
பட்டை வீக்கத்துக்கு எதிராக நன்றாக செயல்படும். இதில் உள்ள ஃபைட்டோகெமிக்கல்கள், அதற்கு உதவுகிறது. பட்டையில் உள்ள சில உட்பொருட்கள் ஃப்ரி ராடிக்கல்களை தாக்கி அழிக்கிறது.
புற்றுநோய் தடுப்பு
ஆஞ்ஜியோஜெனிசிஸ், புற்றுநோய் கட்டிகள் உருவாக காரணமாகிறது. எனவே ஆஞ்ஜியோஜெனிசிஸ் உருவாவதை தடுப்பது புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. பட்டை, ஆஞ்ஜியோஜெனிசிஸ் உருவாவதை தடுக்கிறது அல்லது குறைக்கிறது. செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. இதனால் பட்டை புற்றுநோய் சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆன்டிபயோடிக் உட்பொருட்கள்
பட்டையின் மணம் மற்றும் நிறத்துக்கு சினமால்டேஹைட் காரணமாகிறது. இந்த ஃபைட்டோகெமிக்கலில் ஆன்டிபயோடிக் குணங்கள் உள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராக இது ஆற்றலுடன் செயல்பட்டுள்ளது ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம்
பட்டையில் பாலிஃபினால்கள் போன்ற எண்ணற்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது உங்கள் உடல் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தில் இருந்து விடுபட உதவுகிறது. பட்டையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், இயற்கையான உணவு பதப்படுத்தும் உட்பொருட்களாக பயன்படுகின்றன. பட்டை சப்ளிமென்ட்கள் உங்கள் உடலில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அளவை அதிகரிக்கச் செய்வதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இதய ஆரோக்கியம்
பட்டை, உங்கள் ட்ரைகிளிசரைட்கள் அளவைக் குறைக்க உதவுகிறது. கொழுப்பு அளவை குறைத்து உங்களை இதய நோயில் இருந்து காக்கிறது. தினமும் 1.5 கிராம் பட்டை கொண்ட சப்ளிமென்ட்களை எடுத்துக்கொண்டால், அது உங்கள் உடலில் கெட்ட கொழுப்பு, ட்ரைகிளிசரைட்கள் மற்றும் ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. தொடர்ந்து 7 வாரங்கள் எடுத்தால் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
மறதி நோய்க்கு மருந்தாகிறது
எய்ட்ஸ்க்கு மருந்தாகிறது
பற் சொத்தைக்கு மருந்தாகிறது
அலர்ஜிகளைப் போக்குகிறது.
நாளொன்றுக்கு 2 முதல் 4 கிராம் மட்டுமே பட்டை எடுத்துக்கொள்ளவேண்டும். அதிகம் எடுத்தால், அலர்ஜி, எரிச்சல், ரத்த சர்க்கரையை குறைப்பது போன்ற பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே அளவே நல்லது.
டாபிக்ஸ்